For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூண்டு, எலுமிச்சை டீ குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

|

பொதுவாக கருப்பட்டி டீ, எலுமிச்சை டீ, கிரீன் டீ, மசாலா டீ, சாத டீ, ஸ்பெஷல் டீ என கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலவகை மூலிகை டீக்களும் கூட இப்போது விற்கப்படுகின்றன. ஆனால், பூண்டு எலுமிச்சை டீ பற்றி பெரும்பாலும் யாரும் கேள்விப் பட்டிருக்க வாய்ப்பில்லை.

உடலுக்கு வலுவும், நச்சுக்களை அழிக்கவும், காய்ச்சல் போன்ற காலமாற்ற பாதிப்புகள் ஏற்படாமலும் இருக்க இந்த பூண்டு எலுமிச்சை டீ உதவுகிறது. இனி, இந்த பூண்டு, எலுமிச்சை டீ எப்படி தயாரிப்பது, இதை குடிப்பதன் மூலம் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

பூண்டு - 1 பல்

எலுமிச்சை - 1

சுடுதண்ணி - 1 கப்

வைட்டமின் சத்துக்கள்!

வைட்டமின் சத்துக்கள்!

பூண்டு, எலுமிச்சை டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்,

வைட்டமின் A, B, C, E மற்றும் J.

செய்முறை!

செய்முறை!

  • எலுமிச்சையை நன்கு கழுவிய பிறகு துண்டு, துண்டாக வெட்டிக் கொள்ளவும்.

  • நீர் ஊற்றிய கடாயில் தோல் உரித்த பூண்டு பல் மற்றும் எலுமிச்சை துண்டுகளை போட்டு மூடி வைத்துவிடவும்.

  • 7 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடுங்கள்.

  • பிறகு வடிக்கட்டி குடியுங்கள்!

  • நன்மைகள்!

    நன்மைகள்!

    • காய்ச்சல் உள்ள நபர்கள் இந்த பூண்டு எலுமிச்சை டீயை குடித்து வந்தால் நல்ல பயன்தரும்.

    • இது உடலில் ஆண்டி-பயாடிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி மேலோங்க உதவுகிறது.

    • உடலில் நச்சுக்கள் அதிகரிக்காமல் மற்றும் அழிக்கவும் இந்த பூண்டு எலுமிச்சை டீ உதவுகிறது.

    • நன்மைகள்!

      நன்மைகள்!

      • மேலும், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் கரைக்கவும், செரிமானம் சிறக்கவும் கூட இந்த டீ பயனளிக்கிறது.

      • தொண்டை, கணையம், நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறது.

      • குறிப்பு!

        குறிப்பு!

        காய்ச்சல் உள்ளவர்கள் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த டீயை குடித்து வாருங்கள்!

        காய்ச்சல் வருவது போன்ற அறிகுறிகள் தோன்றினால் 3 - 4 மணிநேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காய்ச்சல் வராமால் தடுக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Drinking Garlic Lemon Tea

Do you know about the Health Benefits Of Drinking Garlic Lemon Tea, take a look on here.
Story first published: Wednesday, July 27, 2016, 17:43 [IST]
Desktop Bottom Promotion