இந்த 5G டயட் ஃபாலோ பண்ணா நூறு வயசு ஆரோக்கியமா வாழலாம்...!

Posted By:
Subscribe to Boldsky

2G, 3G, 4G தெரியும் அதென்ன 5G என கேட்கிறீர்களா? இது எலக்ட்ரிக் சாதன நெட்வொர்க் தொழில்நுட்பம் அல்ல. நமது உடல் நலம், ஆரோக்கியம் சீராக இருக்க உதவும் உணவியல் தொழில்நுட்பம். ஆம், ஒரு சில உணவுகளை நாம் கட்டாயம் நமது உணவு முறையில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எப்படி வாகனம் சீராக ஓட பெட்ரோல், டீசல், இன்ஜின் ஆயில் தினமும் தேவையோ. அப்படி தான் நமது உடலுக்கும் சில ஊட்டச்சத்துக்கள் கட்டாயம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் அவை இயற்கை உணவுகளாக இருக்க வேண்டும். நமது மண்ணில் விளைந்தவையாக இருக்க வேண்டும்.

பொன்னும் பொருளும் மட்டுமல்ல, நம் நாட்டில் விளைந்த உணவுகள் தான் நமது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதை நீங்கள் ஒருபோதும் மறந்துவிட கூடாது. சரி இனி 5G உணவுகள் பற்றி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி (GINGER)

இஞ்சி (GINGER)

*நோய் எதிர்ப்பு மண்டலம் ஊக்கம் பெறும்

*இது ஒரு சிறந்த கிருமி நாசினி உணவு

*மாதவிடாய் பிடிப்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும்

*உடல் செல்களின் வயதாகும் செயலை குறைத்து, இளமையாக, ஆரோக்கியமாக இருக்க உதவும்.

*மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது இஞ்சி.

இஞ்சியை நீங்கள் சட்னி, உணவுகள் மற்றும் தேநீரில் சேர்த்து உட்கொள்ளலாம்.

பூண்டு (GARLIC)

பூண்டு (GARLIC)

*கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது

*இரத்த அழுத்தத்தை குறைக்க செய்யும்

*தேகத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது

*ஆண்டி-ஆக்ஸிடெண்ட் இருக்கிறது

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது

*நுரையீரலின் செயலாற்றல் மேலோங்க உதவி புரிகிறது

சூப், குழம்பு, சட்னி என எல்லா காலங்களிலும் சமையலில் சேர்த்து உண்ண உகந்த உணவு பூண்டு.

நெல்லிக்காய் (GOOSEBERRY)

நெல்லிக்காய் (GOOSEBERRY)

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

*இரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்யும்

*கொலஸ்ட்ரால் அளவை சீராக்கும்

*காய்ச்சலுக்கு நல்ல பலனளிக்கும்

*சீராக சிறுநீரை சுரக்க செய்யும், நச்சுக்களை வெளியேற்றும்

*செரிமானம் சிறக்க உதவும்

இதை ஊறுகாய், சமூத்தி, ஜூஸாக உட்கொள்ளலாம்.

கிரீன் டீ (GREEN TEA)

கிரீன் டீ (GREEN TEA)

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

*உடல் எடை குறைக்க உதவும்

*இன்பெக்ஷன் எதிர்த்து போராடும்

*உயர் இரத்த அழுத்தம் குறைக்க உதவும்

*மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைக்க உதவும்

*சருமத்தின் ஆரோக்கியத்திற்கு வலுவூட்டும்.

பச்சை மிளகாய் (GREEN CHILLIES)

பச்சை மிளகாய் (GREEN CHILLIES)

*நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு நல்லது

*ஆண்டி-பாக்டீரியா தன்மை கொண்டுள்ளது

*சிறந்த வலிநிவாரணி

*இரத்த கட்டிகள் கரைய உதவும்

*இதய நலனிற்கு உகந்த உணவு

எந்த மசாலா சேர்த்து சமைக்கப்படும் உணவிலும் சேர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5G Foods to Increase Your Life Span

Add these 5G Foods in your daily diet to Increase Your Life Span, read here in tamil.