Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் பெறும் அற்புதமான நன்மைகள்!!!
வாழைப்பழம் சிலர் தினமும் சாப்பிடுவதற்கு ஒரே ஒரு காரணத்தை மட்டும் தான் வைத்திருப்பார்கள். ஆம், காலைக் கடன் கழிக்க மட்டுமே வாழைப்பழம் உதவுவதாய் சிலர் தவறாக நினைக்கின்றனர்.
ஆனால், வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, மெக்னீசியம், வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் நன்கு உறங்கவும், இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு காண, இரத்த அழுத்தம் குறைய மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு தசைக்கு வலுவளிக்க என பல வகைகளில் பயனளிக்கிறது...

பலன் #1
வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை சீராக்க உதவுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உங்கள் சரிமான மண்டலம் சரியாகும்.

பலன் #2
நமது உடலுக்கு வைட்டமின் பி6 மிகவும் தேவையான ஊட்டச்சத்து. இது ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் தயாரிக்க உதவுகிறது. வாழைப்பழம் தினமும் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு இந்த சத்து நிறைய கிடைக்கிறது.

பலன் #3
தினமும் மூன்று வாழைப்பழம் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குறைந்து நல்ல மாற்றம் காண முடியும் என கூறப்படுகிறது.

பலன் #4
வாழைப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து இரத்த சோகையை குறைக்க உதவுகிறது. தொடர்ந்து தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை பிரச்சனைக்கு ஓர் நல்ல தீர்வு காண முடியும்.

பலன் #5
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் அதிகப்படியான பசியை கட்டுப்படுத்த முடியும்.

பலன் #6
வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

பலன் #7
சில நிபுணர்கள், வாழைப்பழம் தசைகளுக்கு வலுவளிக்கிறது என கூறுகிறார்கள். விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதற்கு இது தான் காரணமாம்.

பலன் #8
வாழைப்பழத்தில் இருக்கும் மெக்னீசியம் உங்கள் மனநிலையை மேலோங்க வைக்கிறது மற்றும் இரவில் நன்கு உறங்கவும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications
