For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சோடா, கோலா பானங்கள் குடிப்பதை நிறுத்துவதால், உடலில் ஏற்படும் ஆச்சரியமூட்டும் மாற்றங்கள்!

|

பெரும்பாலும் நாம் உடல் சோர்வை தவிர்க்கவும், நிறைய உணவு சாப்பிட்டால், உண்ட உணவு சீக்கிரம் செரிக்கவும் தான் சோடா அல்லது கோலா பானங்கள் பருகுகிறோம். ஆனால் உண்மையில் இவற்றை குடிப்பதன் காரணமாக தான் செரிமான பிரச்சனையும், உடல் சக்தி குறைந்து சோர்வும் ஏற்படுகின்றன.

கொக்கோகோலா உங்க தாகத்த மட்டும் தான் அடக்குதுன்னு நினைக்கிறீங்களா?? இதப்படிங்க பாஸ்!!!

இதுமட்டுமல்ல, நீங்கள் சோடா மற்றும் கோலா பானங்கள் குடிப்பதால் உங்கள் உடலுக்குள் இன்னும் சில உடல்நல கோளாறுகள் ஏற்படுத்துகின்றன. எனவே, கோலா மற்றும் சோடா பானங்கள் குடிப்பதை நிறுத்துவதால், உங்கள் உடலில் ஏற்படும் ஆச்சரியமூட்டும் மாற்றங்கள் என்னென்ன என்று இனி பார்க்கலாம்....

கோக் குடித்த ஒரு மணிநேரத்தில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைவான பசி

குறைவான பசி

பெரும்பாலான சோடா பானங்கள் "ஹை ஃபிரக்டோஸ் காரன் சிரப்" கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. இது, உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. உங்கள் உடலுக்கு ஒட்டுமொத்தமாக ஓர் நாளுக்கு தேவையானதே 10கிராம் சர்க்கரை அளவு தான். ஆனால், நீங்கள் குடிக்கும் ஓர் சோடாவிலேயே அவை மொத்தமாய் இருக்கிறது.

செயற்கை இனிப்பூட்டிகள்

செயற்கை இனிப்பூட்டிகள்

மற்றும் இதில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் உடல்நலத்தை சீர்குலைக்க செய்கிறது. இவை இயற்கை சர்க்கரைய விட 400 - 8000 மடங்கு அதிக சுவையை ஏற்படுத்த கூடியது.

 இளமையாக உணரலாம்

இளமையாக உணரலாம்

சோடாவில் சேர்க்கப்படும் இனிப்பு, இதயம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது. இதுமட்டுமின்று, இவை உடல் செல்களை வேகமாக முதிர்ச்சியடைய செய்கிறது.

உடல் எடை கணிசமாக குறையும்

உடல் எடை கணிசமாக குறையும்

கலோரிகள் இல்லை, சர்க்கரை இல்லை என கூறி விற்கப்படும் நிறைய பானங்கள் உண்மையில் ஒன்றுக்கும் உதவாதவை. இதனால் உங்கள் உடல் எடை தான் அதிகரிக்கும். கலோரி ஃப்ரீ என கூறி இவர்கள், உடல்நலத்தை கெடுக்கும் இரசாயனங்களை கலந்து விற்கிறார்கள். எனவே, நீங்கள் சோடா, கோலா பானங்களை குடிப்பதை நிறுத்துவதால் உடல் எடையை குறைக்க முடியும்.

உடல்நலக் குறைவு அதிகம் ஏற்படாது

உடல்நலக் குறைவு அதிகம் ஏற்படாது

சோடாவில் இருக்கும் அமிலத் தன்மை உங்கள் செரிமானத்தை பாதிக்கிறது. பற்களின் எனாமலையும் பாதிக்கிறது. மற்றும் செயற்கை இனிப்பூட்டியும், அமிலத்தன்மையும் நமது உடல்நலனுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது. இதனால் நிறைய உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

மறைந்திருந்து வளரும் கொழுப்பு

மறைந்திருந்து வளரும் கொழுப்பு

டானிஷ் நாட்டில், "சாதாரண டீ, காபி போன்ற பானங்கள் குடிக்கும் ஓர் பிரிவினர் மற்றும் சோடா பானங்களை குடிக்கும் ஓர் பிரிவினர் (ஒரே சம அளவு கலோரிகள் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது) இடையே ஆய்வு ஒன்று நடத்தினர்.

ஆறு மாதங்களுக்கு பிறகு

ஆறு மாதங்களுக்கு பிறகு

ஆறு மாதங்கள் இந்த ஆய்வு நடத்திய பிறகு சோதனை செய்ததில், சோடா பருகியவர்களின் உடலில் கணிசமான அளவு கொழுப்பு சேர்ந்திருந்தது கண்டறியப்பட்டது. இதில், இவர்கள் விற்கும் ஜீரோ டயட் பானங்களும் அடங்கியிருந்தது அதிர்ச்சிக்குரியது.

எலும்பின் வலிமை அதிகரிக்கும்

எலும்பின் வலிமை அதிகரிக்கும்

சோடாவில் இருக்கும் பாஸ்பரஸ், கால்சியம் சத்தை உடலில் இருந்து குறைத்துவிடுகிறது. இதனால் தான் பெரும்பாலும் இன்றைய இளம் மக்களுக்கு கூட எலும்பு சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. எனவே, நீங்கள் சோடா, கோலா பானங்கள் குடிப்பதை நிறுத்துவதால் உங்கள் எலும்புகள் வலிமையடைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

உடல் சக்தி அதிகரிக்கும்

உடல் சக்தி அதிகரிக்கும்

சோர்வை தவிர்க்க தான் பெரும்பாலும் நாம், சோடா மற்றும் கோலா பானங்களை பருகுகிறோம். ஆனால், இதில் இருக்கும் அதிகப்படியான காப்ஃபைன் அளவு, உடலில் இருக்கும் நீரளவை குறைக்க செய்கிறதாம். இதானால் தான் உடலின் சக்தி மற்றும் நரம்பு மண்டலம் போன்றவற்றில் சோர்வு ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் கூடாது

பதப்படுத்தப்பட்ட உணவுகள் கூடாது

பதப்படுத்தப்படும் உணவுகளில் இருந்து கிடைப்பதை விட, நாம் தினமும் சமைத்து சாப்பிடும் உணவில் தான் நிறைய உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது. எனவே, பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்விக்கும் உணவுகள், பானங்கள் பருகுவது உங்கள் உடலுக்கு எந்த வகையிலும், உடல் சக்தியை அதிகரிக்க உதவாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Amazing Things that Happen to Your Body When You Give Up Soda

Do you know about the Seven Amazing Things that Happen to Your Body When You Give Up Soda? read here.
Desktop Bottom Promotion