Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
உடலின் முக்கியமான எட்டு பாகங்களுக்கு வலு சேர்க்கும் உணவுகள்!!!
நாம் சாப்பிடும் அனைத்து உணவும் எல்லா உடல் பாகங்களுக்கும் நன்மை விளைவிப்பவை அல்ல. வைட்டமின், புரதம், இரும்பு, நார்ச்சத்து என பல ஊட்டுச்சத்துகள் இருக்கின்றன இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் பாகங்களுக்கு வலு சேர்க்கின்றன.
உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!
எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு கால்சியம் நிறைய இருக்கும் பால் உணவுகள், கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு கீரை உணவுகள், சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய நார்ச்சத்து உள்ள தானிய உணவுகள் என நிறைய இருக்கின்றன.
சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!
இதில் உடலின் முக்கியமான எட்டு பாகங்களுக்கு வலு சேர்க்கும் உணவுகள் என்னென்ன என்று இனிப் பார்க்கலாம்....

மூளை
வாழ் நட்ஸ், மீன் போன்ற உணவுகள் உங்கள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும் உணவுகள் ஆகும். இந்த உணவுகள் உங்கள் கவனத்தை ஒருமுகமாக்கவும் உதவுகிறது.

தசைகள்
வாழைப்பழம், சிவப்பு இறைச்சி உணவு, முட்டை மற்றும் மீன் உங்கள் தசைக்கு வலு சேர்க்க உதவும் சிறந்த உணவுகள் ஆகும். இவற்றில் இருக்கும் கால்சியம் எலும்பின் வலுவை அதிகரிக்கவும் உதவுகிறது.

நுரையீரல்
பச்சை காய்கறி உணவுகள் அனைத்துமே நுரையீரலுக்கு நல்ல உணவுகள் தான். இவற்றில் வைட்டமின் கே சத்து இருக்கிறது. எனவே குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறையாவது இவற்றை நீங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

சருமம்
ஆன்டி- ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ள உணவுகள் சருமத்திற்கு வலு சேர்க்கின்றன. ப்ளூ பெர்ரி, கிரீன் டீ போன்றவை சருமத்தில் இருக்கும் நச்சுகளை அழித்து சருமத்தை பாதுகாக்கிறது.

கண்கள்
மீன், முட்டை, கீரை போன்ற இலை உணவுகள், நட்ஸ் போன்ற உணவுகள் கண்களுக்கு வலு சேர்க்கும் சிறந்த உணவுகள் ஆகும்.

இதயம்
ஓட்ஸ், டார்க் சாக்லேட், சிட்ரஸ் பழங்கள், நட்ஸ், தக்காளி, ஆலிவ் எண்ணெய் போன்றவை இதயத்திற்கு வலு சேர்க்கும் சிறந்த உணவுகள் ஆகும்.

குடல் இயக்கம்
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அனைத்துமே குடல் இயக்கத்திற்கு வலு சேர்த்து, சீரான முறையில் இயங்க உதவுபவை தான். மற்றும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் இவை தீர்வு தரும் கோதுமை, சோளம், தானிய உணவுகளில் நார்ச்சத்து அதிகம்.

எலும்புகள்
பால் உணவுகள் தான் எலும்புகளின் வலுவிற்கு தேவையானவை. இவற்றில் இருக்கும் கால்சியம் தான் மிகவும் முக்கியமானது. இது போக, வைட்டமின் சி உணவுகளும் எலும்புகளின் வலுவிற்கு சிறந்த உணவாக திகழ்கிறது. பப்பாளி, இலை உணவுகள், சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளன.



Click it and Unblock the Notifications