மால்களில் உணவுப் பொருள் வாங்கும் போது மறக்காமல் கவனிக்க வேண்டியவை...

Posted By:
Subscribe to Boldsky

கண்ணாடி சுவர்களுக்கு மத்தியில், அடுக்கி வைத்து விற்றால் நாம் எவற்றை வேண்டுமானாலும் கிரெடிட் கார்டுகளை தேய்த்து வாங்குவோம். இது கொஞ்சம் கெத்து, கொஞ்சம் மேல்தட்டு நாகரீகமாக மாறி வருகிறது. அனைவரும் இப்படி இல்லை என்றாலும் கூட, பெரும்பாலானோர் இப்படி தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

சரி வாங்குங்கள் தவறேதும் இல்லை. ஆனால், அப்படி உணவுப் பொருட்கள் வாங்கும் போது நீங்கள் கட்டாயம் மறக்காமல் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை மட்டும் நீங்கள் சரியாக கவனித்து வாங்கினால் கூட போதுமானது தான். ஏனெனில், கவனக்குறைவாக நாம் வாங்கும் சிலவன நமது உடல்நலத்தை பின்னாட்களில் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன...

தயிர் உட்கொள்வதில் நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரிகளை பார்க்க தவர வேண்டாம்

கலோரிகளை பார்க்க தவர வேண்டாம்

உணவுப் பொருட்களை வாங்கும் போது அதில் இருக்கும் கலோரிகள் எவ்வளவு என்று காணத்தவர வேண்டாம். நீங்கள் கடைகளில் வாங்கும் அனைத்து பொருட்களிலும் கலோரிகள் அச்சடிக்கப் பட்டிருக்கும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் அல்லது டயட்டில் இருப்பவர்கள் முக்கயமாக கவனிக்க வேண்டியது இது.

ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து

கலோரிகளுக்கு அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான விஷயம் ஊட்டச்சத்து. இதை கவனிப்பதால் உடலுக்கு கேடு விளைவிக்கும் மூலப்பொருள் ஏதேனும் சேர்க்கப்பட்டுள்ளதா என அறிந்துக் கொள்ள முடியும். மற்றுன் ஆரோக்யமான உணவுகளை தேர்வு செய்ய இது உதவும்.

காலாவதி

காலாவதி

பெரும்பாலும் அனைவரும் காணத்தவறும் ஒன்று இது. காலாவதி ஆக ஒருசில மாதங்கள் இருந்தாலும் கூட அதை வாங்க வேண்டாம். ஏற்கனவே முன்கூட்டியே தயாரித்து அடைத்து வைக்கப்பட்ட பொருளை தான் நீங்கள் வாங்குகிறீர்கள். எனவே, காலாவதி ஆக ஆறு மாதத்திற்கு குறைவாக இருந்தால் அந்த பொருளை வாங்காதீர்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் வேண்டாம்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் வேண்டாம்

நாம் மாபெரும் சோம்பேறியாக வாழ்ந்து வருவதால் தான், இஞ்சி பூண்டு பேஸ்ட், பட்டாணி, சோளம் என பல தோல் நீக்கிய காய்கறிகளை வாங்கி வருகிறோம். இவை அனைத்தும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை. எனவே, இவற்றை வாங்க முற்பட வேண்டாம்.

இயற்கை உணவுகள்

இயற்கை உணவுகள்

உழவர் சந்தைக்கு நேரடியாக சென்று புதிய காய்கறி, பழங்களை வாங்குவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் உடல்நலம் மேலோங்க உதவும்.

ஆரோக்கியமான தேர்வு

ஆரோக்கியமான தேர்வு

உணவு வாங்கும் போது கவர்ச்சியான தோற்றத்தில் இருக்கிறது என கண்டதை எல்லாம் வாங்க வேண்டாம். ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்ய பழகுங்கள்.

இறைச்சி

இறைச்சி

எக்காரணம் கொண்டும் பெரிய மால்களில் பதப்படுத்தி விற்கப்படும் இறைச்சிகளை வாங்க வேண்டாம். இவை நீண்ட நாட்களாக வைத்து விற்க வாய்ப்புகள் அதிகம். இது உடலுக்கு மிகவும் தீங்கானது. செரிமான கோளாறுகள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

உறைந்த உணவுகள்

உறைந்த உணவுகள்

நீண்ட நாட்களாக கெடாமல் இருக்க குறைந்த குளிர் அளவில் வைக்கப்பட்டிருக்கும் உணவுகள் உடலுக்கு கேடானது. எனவே, இவற்றை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eight Healthy Things To Look Into While Grocery Shopping

Checking the nutritional value, manufacturer date and expiry date are important when grocery shopping. Here are more healthy things to look into.
Subscribe Newsletter