கெல்லாக்ஸ் கார்ன்ஃப்ளக்ஸ் காம உணர்வை குறைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட உணவு!!!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய தினத்தில் மேல்தட்டு மக்களில் பெரும்பாலானோர் காலை உணவாக சாப்பிடும் உணவுப் பொருளாக இருக்கிறது கெல்லாக் கார்ன்ஃப்ளக்ஸ்.இது, உடல் நலத்திற்கு நல்லது, கொழுப்புச்சத்து இல்லாததால் உடல் எடையை குறைக்க உதவும் என பல காரணங்கள் இருப்பதால் மக்கள் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், கெல்லாக் கார்ன்ஃப்ளக்ஸ் மனிதர்களின் காம உணர்வை குறைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட உணவு என்பது உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜான் ஹார்வி

ஜான் ஹார்வி

கெல்லாக் கார்ன்ஃப்ளக்ஸ், ஜான் ஹார்வி கெல்லாக் என்பவரால் 19ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உணவாகும்.

உடலுறவும், சுய இன்பமும் தவறு

உடலுறவும், சுய இன்பமும் தவறு

கெல்லாக் கார்ன்ஃப்ளக்ஸ் உணவை கண்டுபிடித்த ஜான் ஹார்வி கெல்லாக், உடலுறவும், சுய இன்பம் காணுதலும் தவறான ஒன்றாகவும். இது, உடலையும், மனதையும் பாதிக்கும் ஓர் காரியமாகவும் கருதினார்.

கார்ன்ஃப்ளக்ஸ் உணவை தயாரித்தார்

கார்ன்ஃப்ளக்ஸ் உணவை தயாரித்தார்

எனவே, மனிதர்கள் மத்தியில் இந்த காம உணர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, தானிய உணவான சோளம் செதில்களாக கொண்ட உணவுப் பொருளான கார்ன்ஃப்ளக்ஸ் உணவை தயாரித்தார்.

காலை வேளையில் சுய இன்பம் காண்பதை தடுக்க

காலை வேளையில் சுய இன்பம் காண்பதை தடுக்க

முதலில் ஜான் ஹார்வி கெல்லாக் கார்ன்ஃப்ளக்ஸ் உணவை, உடல்நலனை அதிகரிக்கவும், காலை வேளையில் சுய இன்பம் காணுவதை குறைக்கவும் தான் தயாரித்தாராம்.

மிஸ்டர். கெல்லாக்ஸ்

மிஸ்டர். கெல்லாக்ஸ்

மிஸ்டர். கெல்லாக்ஸ் ஓர் மருத்துவர். உடலுறவு குறித்து சங்கடமான, அசௌகரியமான உணர்வை கொண்டிருந்தார். மற்றும் இது உடல் மற்றும் மனதிற்கு தீங்கு விளைவிக்கும் செயல் என்றும் கருதி வந்தார்.

திருமணம் ஆகியும் பிரம்மச்சாரி

திருமணம் ஆகியும் பிரம்மச்சாரி

எனவே, இவர் திருமணமாகியும் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்தார். இவரது மனைவியிடம் இருந்து பிரிந்து தனி அறையில் வாழ்ந்து வந்தார் மிஸ்டர். கெல்லாக்ஸ்.

இறைச்சி உணவை தவிர்க்க முடிவு செய்தார்

இறைச்சி உணவை தவிர்க்க முடிவு செய்தார்

பெரும்பாலும் இறைச்சி உணவு தான் மனிதர்களிடையே காம உணர்ச்சி அதிகரிக்க காரணமாக இருக்கிறது என கருதினார் மிஸ்டர். கெல்லாக்ஸ். காம உணர்ச்சியற்ற நல்ல வாழ்க்கை முறை தான் நோயற்ற வாழ்க்கையை தரும் என நம்பினார் மிஸ்டர். கெல்லாக்ஸ்.

தானிய உணவு தயாரிப்பில் இறங்கிய மிஸ்டர். கெல்லாக்ஸ்

தானிய உணவு தயாரிப்பில் இறங்கிய மிஸ்டர். கெல்லாக்ஸ்

முதலில் ஓட்ஸ் மற்றும் சோளம் கலந்து ஒரு தானிய உணவை தயாரித்தார் மிஸ்டர். கெல்லாக்ஸ். இதற்கு "granola" என்று பெயர் வைத்திருந்தார்.

சட்ட பிரச்சனை

சட்ட பிரச்சனை

இதே பெயரில் வேறு ஒரு நிறுவனம் முன்னர் ஓர் உணவுப் பொருள் தயாரித்து விற்பனை செய்து வந்ததால், சட்ட பிரச்சனையின் காரணமாக இதன் பெயரை மாற்றினார் மிஸ்டர். கெல்லாக்ஸ்.

கெல்லாக் கார்ன்ஃப்ளக்ஸ் பிறந்தது

கெல்லாக் கார்ன்ஃப்ளக்ஸ் பிறந்தது

இதன் பிறகு தான், சுய இன்பத்தை தடுக்கும் என்ற வகையில், வெறுமென சோளம் செதில்கள் மட்டுமே கொண்டு ஓர் தானிய உணவை தயாரித்தார். அது தான் பிறகு "கெல்லாக்ஸ் கார்ன்ஃப்ளக்ஸ்" எனும் உணவாக மாறியது. பிறகு இவரது தம்பி வில் என்பவரின் அறிவுரை படி சர்க்கரை சேர்க்கப்பட்டு கெல்லாக்ஸ் கார்ன்ஃப்ளக்ஸ் தயாரிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cornflakes Was Invented To Curb Sexual Desires

Do you know?Cornflakes Was Invented To Curb Sexual Desires. Read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter