Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய 12 உணவுகள்!!!
நீரிழிவு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாக்குவது இல்லை. இது உடலில் அனைத்து பகுதியையும் தாக்கும். அதிலும் இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரையானத இருக்கும் போது, இந்த நோயானது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயம் போன்றவற்றையும் பாதிக்கும். எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், அசாதாரணமாக இருந்துவிடாமல், உணவில் சற்று கட்டுப்பட்டுடன் இருப்பது நல்லது.
உணவுக் கட்டுப்பாடு என்பதும் ஒரு சில இனிப்பாக இருக்கும் உணவுப் பொருட்களை தவிர்த்துவிடுவார்கள். ஆனால் அவ்வாறு இனிப்பாக இருக்கும் அனைத்து உணவுப் பொருளுமே, நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்பதில்லை. அவற்றில் சில உணவுப் பொருட்களை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் அவ்வாறு இனிப்பாக இருக்கும் உணவுப் பொருட்கள் அனைத்திலுமே உடலுக்கு கேடு விளைவிக்கும் இனிப்பு நிறைந்திருப்பது இல்லை. ஒரு சில உணவுப் பொருட்களில் சாதாரண சர்க்கரை நிறைந்துள்ளது. இப்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

நட்ஸ்
உணவுகளிலேயே நட்ஸ் மிகவும் சிறந்த உணவு. இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி இதில் உள்ள சில கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதைக் கட்டுப்படுத்துகின்றன.

ஆலிவ் ஆயில்
எண்ணெய்களில் ஆலிவ் ஆயில் மிகவும் சிறப்பானது. இத்தகைய ஆலிவ் ஆயிலிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. எனவே இந்த எண்ணெயை நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை அதிகமாவதைத் தடுக்கலாம்.

பீன்ஸ்
பீன்ஸில் புரோட்டீன் சொல்லமுடியாத அளவு நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது.

குறைந்த கொழுப்புள்ள தயிர்
நிறைய பேருக்கு பால் என்றால் பிடிக்காது. எனவே அதற்கு பதிலாக சாப்பிடக்கூடிய சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால் அது தயிர் தான். ஏனெனில் பாலுக்கு அடுத்தப்படியாக கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருள் தயிர் தான். எனவே தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு தயிரை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை குறைவதோடு, இன்சுலின் அளவும் சரியாக சுரக்கும்.

மீன்
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அதே சமயம் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் பார்வையில் குறைபாடு இருக்கும். எனவே அதனை சரிசெய்ய மீன் சரியாக இருக்கும். இதனால் பார்வை பாதுகாக்கப்படுவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் தடைபடும்.

சிட்ரஸ் பழங்கள்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சில பழங்களான திராட்சை, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அதே சமயம் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, பூசணி வகைகள் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடலாம். ஏனெனில் நீரிழிவு நோய் வந்தால், உடலில் அசதி ஏற்படுவதோல், சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள எனர்ஜியை அதிகரிக்கும்.

பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான சத்துக்களே ஆகும்.

தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி, இரும்புச் சத்து மற்றம் ஜில்க் என்னும் கொழுப்பும் நிறைந்துள்ளது. அதற்காக தக்காளியை காரமாக சமைத்து சாப்பிடக்கூடாது, அதனை சூப், ரோஸ்ட் என்று செய்து சாப்பிட வேண்டும்.

மஞ்சள் பூசணிக்காய்
மஞ்சள் பூசணி இனிப்பாக இருப்பதால், இதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அந்த பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கிறது. எனவே இதனை அவ்வப்போது சிறிது சாப்பிட வேண்டும்.

பெர்ரி பழங்கள்
பழங்களில் பெர்ரிப் பழங்களில் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக இவை நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த அளவு இனிப்பு வகைகளை செய்து கொடுப்பதற்கு சிறந்ததாக இருக்கும்.

நவ தானியங்கள்
நவ தானியங்களில் காம்ப்ளக்ஸ் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இனிமேல் சாதாரண அரிசிக்கு பதிலாக ப்ரௌன் அரிசியையும், சுத்திகரிக்கப்பட்ட மாவிற்கு பதிலாக முழு கோதுமை மாவையும் பயன்படுத்துவது நல்லது.

பாகற்காய்
பாகற்காய் நன்மைகள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் கீரையை விட அதிக அளவில் கால்சியம் சத்துக்களும், இரும்புச்சத்து மற்றும் போதுமான அளவு பீட்டா கரோட்டீனும் உள்ளது. சொல்லப்போனால், இதை சிறந்த உணவு என்பதை விட, சிறந்த மருந்து என்று சொல்லலாம்.



Click it and Unblock the Notifications