மருந்துகள் ஏதும் பயன்படுத்தாமல் பிபியை குறைக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்..

வாழ்க்கை முறை மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் நாள்பட்ட நோய்களின் ஆபத்து அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் முதியவர்களிடம் காணப்பட்ட சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள் தற்போது இளைஞர்களிடமும் சகஜமாகி வருகிறது. அதிக இரத்த அழுத்தம் இருந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் மருந்தை நீண்ட நேரம் பயன்படுத்தினால், பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆனால் எந்த மருந்தையும் பயன்படுத்தாமல் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சில குறிப்புகள் உள்ளன.

உயர் இரத்த அழுத்தம் ரத்த கொதிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் சாதாரண அளவை விட அதிகமாக உள்ளது என்று அர்த்தம். நீண்ட கால உயர் இரத்த அழுத்தம் இதய தமனிகளை சேதப்படுத்தும். இதனால் இதய செயலிழப்பு, பக்கவாதம், சிறுநீரக கற்கள், கண்பார்வை இழப்பு, நினைவாற்றல் இழப்பு, மூளையின் செயல்பாடு மந்தம் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். மயோ கிளினிக்கின் கூற்றுப்படி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் பிபியைக் கட்டுப்படுத்தலாம். இதற்கு என்னென்ன வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

five easy and efficient methods to reduce your blood pressure

உப்பு சேர்க்க வேண்டாம்

உப்பு உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உணவில் உள்ள சோடியம் மற்றும் பிற உப்புகள் இரத்த விநியோக குழாய்களில் குவிந்து இதயத்தின் அழுத்தத்தை அதிகரிக்கும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே உப்பின் நுகர்வை முடிந்தவரை குறைக்க வேண்டும்.

வழக்கமான உடற்பயிற்சிகள்

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வழக்கமான உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இது சுமார் 5 முதல் 8 மிமீ எச்ஜி வரை குறையும். இரத்த அழுத்தம் மீண்டும் உயராமல் இருக்க, வழக்கமான உடற்பயிற்சியை தொடர வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது.

எடை குறைப்பு

ஆரோக்கியமான எடை நிர்வாகத்தில் கவனம் செலுத்துவது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். அதிக எடையால் அவதிப்படுபவர்கள் கொஞ்சம் எடை குறைந்தாலும் ரத்த அழுத்தம் குறையும். அதனால்தான் மருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எடையைக் குறைக்க முயற்சித்தால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆரோக்கியமான உணவு

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் ஆகியவறை சேர்த்துக் கொள்வது நல்லது. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. அவர்கள் உயர் இரத்த அழுத்தத்தை சரியாக நிர்வகிக்க உதவும்.

தூக்கம்

மனித ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கியமானது. இரவு உறக்கத்தின் போது உடல் செல்கள் சரி செய்யப்படுகின்றன. இது உங்களை காலையில் புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் உணர வைக்கும். சரியான தூக்கம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் தினமும் குறைந்தது ஏழு மணி நேரமாவது தூங்க வேண்டும். தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் நல்ல தூக்கம் வர உடலில் தேவையான மாற்றங்கள் ஏற்படும்.

உயர் இரத்த அழுத்தம் ஆபத்தானது, எனவே அதை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பதை அறிந்து அதன்படி செயல்படுவது நல்லது. உயர் இரத்த அழுத்தம் என்பது 140/90 mmHg க்கு மேல் உள்ள இரத்த அழுத்தம் ஆகும். இத்தகைய உயர்வான இரத்த கொதிப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல தீவிரமான சுகாதார நிலைமைகளுக்கு ஒருவரை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, April 12, 2024, 15:59 [IST]
Desktop Bottom Promotion