Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
3 மாதத்தில் தொப்பையைக் குறைக்கணுமா? அப்ப ஃபிட்னஸ் கோச் சொல்ற இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..
Weight Loss Tips: உலகளவில் பெரும்பாலான மக்கள் அவதிப்படும் ஒன்று என்றால் அது தொப்பை தான். உடலிலேயே அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைப்பது தான் மிகவும் கடினமான ஒன்று. இப்படிப்பட்ட தொப்பையால் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அவதிப்படுகின்றனர். தொப்பை ஒருவரது அழகை கெடுப்பதோடு, ஆரோக்கியத்தையும் பாழாக்குகிறது.
முக்கியமாக தொப்பையானது பிபி, சுகர் போன்ற பல பிரச்சனைகள் வரத்தூண்டுகிறது. இந்த பிரச்சனைகள் தீவிரமாகாமல் இருக்க வேண்டுமானால், தொப்பையைக் குறைக்க வேண்டும். தொப்பை குறைய வேண்டுமானால், உடலில் குறிப்பாக வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க முயற்சிக்க வேண்டும்.

அதுவும் தற்போது நிறைய பேர் குறுகிய காலத்தில் தொப்பையைக் குறைக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்காக துபாயைச் சேர்ந்த பெண்கள் கொழுப்பு இழப்பு நிபுணர், சான்றளிக்கப்பட்ட தனிப்பட்ட பயிற்சியாளர் மற்றும் விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர் கீர்த்தி தாகூர், தனது இன்ஸ்டா பக்கத்தில் 3 மாதங்களில் உடல் கொழுப்பைக் குறைப்பது பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "எனக்கு 3 மாதங்கள் இருந்து, உடல் கொழுப்பை வேகமாக குறைக்க நினைத்தால், உடனே நான் இந்த விஷயங்களைத் தான் செய்யத் தொடங்குவேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதோடு "தொப்பையைக் குறைக்க போராடிக் கொண்டிருக்கிறீர்களா? உண்மையில், யாராலும் உடலில் உள்ள கொழுப்பை கண்டறிந்து குறைக்க முடியாது. ஆனால் ஆரோக்கியமான, நிலையான பழக்கங்களை வைத்துக் கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த கெட்ட கொழுப்பையும் குறைக்கலாம். அதற்கு பின்வரும் 10 படிகளை ஒருவர் ஃபாலோ செய்ய வேண்டும். அவையாவன:
1. கலோரி பற்றாக்குறை: தினமும் உட்கொள்ளும் கலோரிகளை விட அதிக கலோரிகளை எரிக்க வேண்டும்.
2. முழு உணவுகள்: லீன் புரோட்டீன்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்களில் கவனம் செலுத்த வேண்டும்.
3. புரோட்டீனை அதிகரிக்கவும் : புரோட்டீனை அதிகம் எடுப்பது பசியைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது மற்றும் தசைகளின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.
4. கார்டியோ பயிற்சி: வாரத்திற்கு 1-2 முறை 30-60 நிமிடங்கள் கார்டியோ பயிற்சிகளை செய்ய வேண்டும்.
5. வலிமை பயிற்சி: வாரத்திற்கு 2-3 முறை உடம்பில் தேங்கியுள்ள கொழுப்புக்களை எரிப்பதற்கும், தசைகளின் வளர்ச்சிக்கும் வலிமை பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
6. தூக்கத்திற்கு முன்னுரிமை: தினமும் 7-9 மணிநேரம் அவசியம் தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
7. மன அழுத்தத்தை குறைக்கவும்: மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் அளவைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
8. நீரேற்றம்: தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தின் சிறந்த நண்பன். எனவே நீரை அதிகம் பருக வேண்டும்.
9. மதுவை தவிர்க்கவும்: வெற்று கலோரிகளை அறவே தவிர்க்க வேண்டும்.
10. முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்: முக்கியமாக உணவு, உடற்பயிற்சி மற்றும் உடல் அளவீடுகளில் பொறுப்புடன் இருக்க வேண்டும். அதாவது, அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
கடைசியாக, அவர் கூறியதாவது, "எதுவாயினும் நிலைத்தன்மை தான் விரைவான தீர்வுகளைத் தரும். எனவே அதை மனதில் கொண்டு, நிலைத்தன்மையுடன் முயற்சி செய்யுங்கள், முடிவுகளை விரைவில் பெறலாம்." என்றார்.
எனவே நண்பர்களே! நீங்கள் ஆரோக்கியமான வழியில், அதுவும் 3 மாதங்களில் தொப்பையைக் குறைத்துக் காட்ட விரும்பினால், ஃபிட்னஸ் கோச் கூறிய 10 விஷயங்களை மனதில் கொண்டு, அவற்றைப் பின்பற்றி, நல்ல மாற்றத்தைக் காணுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
