Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
Symptoms of Eye Cancer In Tamil: புற்றுநோய்களில் கண் புற்றுநோய் மிகவும் அரிய வகை புற்றுநோயாக இருந்தாலும், உலகளவில் இந்த வகை புற்றுநோயால் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கண் புற்றுநோயானது கண்ணின் பல்வேறு பகுதிகளில் ஏற்படலாம் என்றும், இது ஒரு அரிய வகை புற்றுநோய் என்றும் மருத்துவர்கள் கூறுகினற்னர். கண்களில் செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளர்ந்து கட்டியாகும் போது கண் புற்றுநோய் தொடங்குகிறது.
தற்போது கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை செய்வதால், நிறைய பேர் கண்களில் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். பலருக்கு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுக நேரமில்லாமல், அசால்ட்டாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் கண்களில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் கண் புற்றுநோயின் அறிகுறிகள் நாம் வழக்கமாக கண்களில் சந்திக்கும் பிரச்சனைகளைப் போன்றிருக்கும். மேலும் புற்றுநோய் ஆராய்ச்சியின் படி, பெரும்பாலான வகை புற்றுநோய்களைப் போலவே, இந்த வகை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், சரிசெய்யலாம். அதற்கு முதலில் கண் புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்து கொள்ள வேண்டும்.
கண் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்
மருத்துவர்களின் கூற்றுப்படி, கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் புற்றுநோய் கட்டிகள் பார்வையில் அல்லது கண்களின் வேலையில் இடையூறை சந்திக்கும் வரை எந்த அறிகுறிகளையும் அனுபவிக்கமாட்டார். அதோடு கண்களில் ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தால், உடனே கண் புற்றுநோய் இருக்கும் என்று அர்த்தமல்ல. கண்களில் வேறு சில சிறு பிரச்சனைகள் இருந்தாலும், கண் புற்றுநோயுடன் ஒத்த அறிகுறிகளை சந்திக்க நேரிடும். இப்போது சில ஆரம்ப கால கண் புற்றுநோயின் அறிகுறிகளைக் காண்போம்.
* உங்கள் பார்வை திடீரென்று மங்கலாகவோ, பொருட்கள் இரட்டையாகவோ, பிரகாசமான வெளிச்சத்தைக் கண்டால் கண்கள் கூச செய்தாலோ கண்களில் புற்றுநோய் கட்டிகள் இருக்க வாய்ப்புள்ளது.
* கருவிழியில் ஒரு வெள்ளை படலம் இருப்பது.
* கண்ணின் வெண்படலம் சற்று கருமை இருப்பது.
* கண்ணிமையின் மையத்தில் காயத்துடன் ஒரு சிறிய கட்டி இருப்பது.
* கண்ணிமைகள் திடீரென்று காரணமின்றி உதிர்ந்து, கண்ணிமைகளே இல்லாமல் இருந்தால், அது கண் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறியாகும்.
* கண் இமையில் ஒரு சிறிய சிவப்பு நிற புடைப்பு ஏற்பட்டு, அது நீண்ட நாட்களாக குணமடையாமல் இருந்தால், அதுவும் கண் புற்றுநோயின் அறிகுறியாகும்.
பிற முக்கியமான அறிகுறிகள்...
* கருவிழியில் கருமையான புள்ளி வளரும்
* கருவிழியின் வடிவம் அல்லது அளவு மாற்றமடையும்
* கண்கள் வீங்கும்
* கண்களில் வலி
* அதிகளவில் கண்ணீர் அல்லது இரத்தம் கலந்த கண்ணீர்
கண் புற்றுநோய்
கண்களில் உள்ள செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்து பெருகத் தொடங்கும் போது, கண் புற்றுநோய் ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் விடும் போது, கண்களில் உள்ள அந்த கட்டிகள் உடைந்து, நிணநீர் மற்றும் இரத்த ஓட்டத்தின் வழியே உடலின் மற்ற உறுப்புகளுக்கு சென்று, உடலின் பிற பகுதிகளில் புற்றுநோய் கட்டிகளை உருவாக்குகிறது.
எந்த காரணங்களால் கண் புற்றுநோய் வரலாம்?
ஒருவருக்கு கண் புற்றுநோயானது பல்வேறு காரணிகளால் வருவதாக மருததுவர்கள் கூறுகின்றனர். அந்த காரணிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
* பெரும்பாலான கண் புற்றுநோய்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே கண்டறியப்பட்டுள்ளன.
* அதிக வெள்ளையாகவும், வெளிர் சருமத்தை கொண்டவர்களுக்கும் கண் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.
* கருமையான கருவிழியைக் கொண்டவர்களை விட வெளிரிய கருவிழிகளை கொண்டவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது.
* பரம்பரையில் யாருக்கேனும் வித்தியாசமான தோற்றமுடைய மச்சங்கள் இருந்தால், அத்தகையவர்களுக்கு கண் புற்றுநோய்க்கான அபாயம் உள்ளது.
* வெயிலில் அதிகம் சுற்றுபவர்களுக்கு கண் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications