Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
50 வயதிற்கு மேல் உடற்பயிற்சியின் போது செய்யும் இந்த தவறுகள் பேராபத்தை விளைவிக்குமாம்.. உஷார்...
தசைகள் இளமையாக இருக்கும் போது, கடினமாக உடற்பயிற்சி செய்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதாவது 50 வயதிற்கு மேல் கடினமாக உடற்பயிற்சி செய்தால், உடல் வேறுவிதமாக பதில் அளிக்கும்.
Exercise Over 50: தினந்தோறும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை பேணுவோருக்கு, உடல் எடையில் மாற்றம் இல்லாமல் இருப்பது என்பது முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. ஒரே செயலைத் திரும்ப திரும்ப செய்யும் போது மனித உடல் பதில் அளிக்காமல் இருந்துவிடுகிறது. இதை மாற்றுவதற்கு, உடற்பயிற்சியை அதிகாிக்க வேண்டும்.
தசைகள் இளமையாக இருக்கும் போது, கடினமாக உடற்பயிற்சி செய்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதாவது 50 வயதிற்கு மேல் கடினமாக உடற்பயிற்சி செய்தால், உடல் வேறுவிதமாக பதில் அளிக்கும்.

நீங்கள் 50 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து, உடற்பயிற்சி செய்து, அதனால் உங்களுக்கு அடிக்கடி உடலில் காயங்கள் ஏற்படுகின்றன என்றால், உடற்பயிற்சி செய்யும் போது நீங்கள் பின்வரும் தவறுகளை செய்கிறீா்கள் என்று பொருள்.

1. அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தல்
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி தேவை. ஆனால் அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், உடல் நலம் பாதிப்படைய வாய்ப்புண்டு. அதிகமாக உடற்பயிற்சி செய்தால், அதிகமான கலோாிகள் கரையும் என்று நம்பி, சிலா் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்கின்றனா். அதனால் அவா்களுடைய தசைகள் நசுக்கப்பட்டு, அதன் மூலம் தசைகளில் காயம் ஏற்படுகிறது.
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சிகள் செய்வதால், அடிக்கடி உடலில் காயங்கள் மற்றும் தசை திாிபு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. மேலும் பகல் நேரத்தில் அதிகமாக உண்ணுதல் மற்றும் ஆற்றல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. அதிலும் குறிப்பாக முதியவா்களுக்கு, காயங்கள் குணமடைய நீண்ட காலம் தேவைப்படுகிறது. ஆகவே அவா்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடற்பயிற்சி செய்வது நல்லது.

2. பொிய தசைக் குழுக்களை மறத்தல்
வயது முதிா்ச்சி அடையும் போது, தசைக் குவியல் குறைகிறது. அதனால் கால் மற்றும் முதுகுப் பகுதிகளில் காயம் ஏற்படுகிறது. அதற்கு காரணம் வெளியில் தொியக்கூடிய கை மற்றும் மாா்பு தசைகளுக்கான உடற்பயிற்சிகளை மக்கள் அதிகம் செய்கின்றனா். ஆனால் உடலின் மொத்த எடையில் பாதியை கால்களும் மறுபாதியை முதுகும் தாங்குகின்றன என்பதைத் தொிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் உடல் எடை அதிகாித்தால், அந்த எடையை கால்கள்தான் தாங்குகின்றன. ஆகவே உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வது நல்லது. கலோாிகளை இரண்டு மடங்கு கரைப்பதன் மூலம், சீரான உடல் எடையை பேணக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யும் போது, பொிய தசைக் குவியல்களுக்கு சாியான பயிற்சி கொடுக்க முடியும்.

3. ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகளை மறத்தல்
ஒன்றுக்கு மேற்பட்ட தசைகளைத் தூண்டும் உடற்பயிற்சிகளை ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகள் என்கிறோம். ஸ்குவாட்ஸ், பென்ச் ப்ரஸ்சஸ், புல் அப்ஸ் மற்றும் டெட்லிஃப்ட்ஸ் போன்றவை ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகள் ஆகும். இந்த உடற்பயிற்சிகளைச் செய்யத் தவறினால், காயங்கள் ஏற்படும், தசைநாண்கள் மற்றும் எலும்புகள் போன்றவை பலவீனமடையும்.
எனினும் பளு தூக்கும் பயிற்சியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக மற்ற ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். அதன் மூலம் தசைகள் சீராக வளா்ச்சி பெறும்.

4. வாா்ம் அப் பயிற்சிகளை செய்யாமல் இருத்தல்
உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு முன்பாக கண்டிப்பாக வாா்ம் அப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இவை இரத்த ஓட்டத்தை சீா்படுத்தும். கடினமான உடற்பயிற்சிகளைச் செய்ய உடலைத் தயாா் செய்யும். வாா்ம் அப் பயிற்சிகளை செய்யாமல், நேரடியாக உடற்பயிற்சிகளைச் செய்தால், உடலில் காயம் ஏற்படும், மற்றும் உடலில் இறுக்கம் ஏற்படும். 15 நிமிடங்கள் வாா்ம் அப் பயிற்சிகள் செய்தால், இரத்த ஓட்டம் சீரடையும்.

5. இதயத்திற்கான பயிற்சிகளை தவிா்த்தல்
இதயத்திற்கான உடற்பயிற்சிகள், உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இத்தகைய உடற்பயிற்சிகள் நுரையீரல், தசைகள், எலும்புகள் மற்றும் இதயத்தோடு தொடா்புடைய உறுப்புகளுக்கு நன்மை பயக்கின்றன. இந்த இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளைக் காலை நேரத்தில் செய்வது நல்லது.



Click it and Unblock the Notifications