Latest Updates
-
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
அன்னையர் தினத்தன்று ஒவ்வொரு அன்னையும் 'இந்த' உறுதிமொழியை எடுக்கணும் - கூறும் டாக்டர்! அதென்னன்னு பாருங்க..
Mothers Day 2025: ஒரு குடும்பத்தின் முதுகெலும்பாக தாய்மார்கள் இருக்கிறார்கள். ஏனெனில் அம்மாக்கள் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் கவனித்துக் கொள்கிறார்கள், சொல்லப்போனால் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, தங்கள் கனவுகள், விருப்பங்களை கூட புறக்கணித்து, வீட்டில் உள்ளோரின் தேவைகளை சற்றும் முகம் சுளிக்காமல் செய்து வருவார்கள்.
முக்கியமாக தாய்மார்கள் தங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவார்கள். அதுவும் தங்கள் ஆரோக்கியத்தை விட குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, தங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்கிறார்கள். இன்று அன்னையர் தினம் என்பதால், பெங்களூருவில் உள்ள வாசவி மருத்துவமனையைச் சேர்ந்த நன்கு அறியப்பட்ட மகப்பேறு மருத்துவர் டாக்டர் நிஷா புச்சாடே, தாய்மார்கள் முதலில் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.

ஏனெனில் ஒரு ஆரோக்கியமான பெண்ணால் தான் தனது முழு குடும்பத்தையும் சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். எனவே இந்த அன்னையர் தினத்தன்று, ஒவ்வொரு தாய்மாரும் தங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ள உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று டாக்டர் புச்சாடே கூறுகிறார்.
தாய்மார்கள் தங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
தாய்மார்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்கு சமைப்பதில் அல்லது உணவளிப்பதில் மும்முரமாக இருப்பதால், சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவதை புறக்கணிக்கிறார்கள். இதை முதலில் நிறுத்த வேண்டும். சரியாக நேரத்தில் சரியான உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு சீரான உணவில் 50% கார்போஹைட்ரேட்டுகள், 30% புரதங்கள் மற்றும் 20% கொழுப்புகள் இருக்க வேண்டும். மேலும் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவை தாமதிக்காமல் சாப்பிட வேண்டும்.
இந்தியாவில் நிறைய பெண்கள் புரோட்டீன் குறைபாடுகள், இரத்த சோகை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நல்ல சத்தான ஆகாரத்தை உட்கொள்ள வேண்டியது அவசியம். தற்போது கோடைக்காலம் என்பதால் தினமும் 3-4 லிட்டர் நீரை தவறாமல் குடிக்க வேண்டும். அதோடு சீசன் பழங்கள், புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகள், தினமும் போதுமான அளவு காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். இவற்றை ஒரு பெண் சரியாக பின்பற்றி வந்தால், ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்று டாக்டர் நிஷா கூறினார்.
உடற்பயிற்சி அவசியம்
தினமும் வீட்டு வேலைகளில் மும்முரமாக இருக்கும் பெண்கள் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களுடன், வழக்கமான உடற்யிற்சியிலும் ஈடுபட வேண்டியது அவசியம் என்று டாக்டர் நிஷா கூறுகிறார். அதுவும் பெண்கள் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்கள் தினமும் 40 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அது யோகா, கார்டியோ அல்லது வேறு எந்த வகையான உடற்பயிற்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தினமும் 1 மணிநேர உடற்பயிற்சி அவசியம்.
உடல் பரிசோதனைகள் கட்டாயம்
முக்கியமாக தாய்மார்கள் இரத்த பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்ட், மேமோகிராபி மற்றும் பாப்ஸ்மியர் உள்ளிட்ட வருடாந்திர சுகாதார பரிசோதனைகளை புறக்கணிக்கக்கூடாது. கூடுதலாக பெண்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த தடுப்பூசிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் டாக்டர் நிஷா கூறினார்.
எனவே தாய்மார்களே! நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நீண்ட காலம் உங்கள் குடும்பத்தை உங்களால் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும். குடும்ப உறுப்பினர்களின் மீது அக்கறை காட்டும் நீங்கள், சிறிது உங்கள் மீது அக்கறை காட்டினால், நீண்ட காலம் உங்கள் குடும்பத்தினருடன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். எனவே இந்த அன்னையர் தினத்தில் உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ள உறுதிமொழி எடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications