Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
இந்த அறிகுறிகள் தெரிஞ்சா.. கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. எச்சரிக்கும் டாக்டர்..!
Fatty Liver Disease: நமது உடலில் கல்லீரல் மிகப்பெரிய மற்றும் முக்கியமான உறுப்பாகும். இது சுமார் 1.8 கிலோ வரை எடையைக் கொண்டிருக்கும். இந்த கல்லீரல் அடிவயிற்றின் வலது பக்கத்தின் விலா எலும்பு கூட்டிற்கு கீழே அமைந்துள்ளது. இந்த கல்லீரல் நமது உடலில் உணவை ஜீரணிக்க தேவையான பித்த நீரை உற்பத்தி செய்வது, கழிவுப் பொருட்களை அகற்றுவது, இரத்தத்தில் உள்ள பெரும்பாலான இரசாயன அளவைக் கட்டுப்படுத்துவது போன்ற பல முக்கியமான பணிகளை செய்கிறது.
இவ்வளவு பணிகளை செய்வதாலோ என்னவோ, தற்போது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக கொழுப்பு கல்லீரல் நோயால் பலரும் பாதிக்கப்பட்டு, அதன் அறிகுறிகள் சரியாக தெரியாமல் தீவிரமான பின் மருத்துவரை அணுகுகிறார்கள். மேலும் நிறைய பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் பற்றி சரியாக தெரியாமல் உள்ளனர்.

எனவே கொழுப்பு கல்லீரல் நோய் என்றால் என்ன, அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன, யாருக்கெல்லாம் இது வருவதற்கான அபாயம் உள்ளது மற்றும் அதை தடுப்பது எப்படி என்பன போன்ற கேள்விகளுக்கு அமிஞ்சிக்கரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் சென்டரின் காஸ்ட்ரோஎன்டாலஜி ஹெபடாலஜியின் மூத்த ஆலோசகர் டாக்டர். மாலதி சத்தியசேகரன் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
கொழுப்பு கல்லீரல் நோய் என்றால் என்ன?
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும் போது கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய் (AFLD) எனப்படும் அதிகப்படியான மது அருந்துதல் அல்லது மது அருந்தாமல், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என குறிப்பிடப்படும் இந்த நிலை உருவாகலாம். கொழுப்பு கல்லீரல் நோய் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்தாது என்றாலும், அது கவனிக்கப்படாவிட்டால் கடுமையான கல்லீரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கொழுப்பு கல்லீரலின் எச்சரிக்கை அறிகுறிகள்
ஆரம்ப கட்டங்களில், கொழுப்பு கல்லீரல் நோய் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் காட்டாது. நிலை முன்னேறும் போது தான் அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கலாம். அந்த அறிகுறிகளாவன:
* தொடர்ச்சியான சோர்வு அல்லது குறைந்த ஆற்றல்.
* வயிற்றின் வலது பக்கத்தில் வலி அல்லது அசௌகரியம்.
* வாழ்க்கை முறையில் எவ்வித மாற்றங்களையும் செய்யாமல் எடை இழப்பு.
* சிறுநீரின் நிறம் மற்றும் மலத்தின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள்.
* விரிவாக்கப்பட்ட அல்லது வீங்கிய கல்லீரல் - உடல் பரிசோதனை அல்லது இமேஜிங் சோதனைகளின் போது ஒரு மருத்துவர் இதைக் கண்டறியலாம்.
யாருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வர அதிக வாய்ப்பு உள்ளது?
சில காரணிகள் கொழுப்பு கல்லீரல் நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். அவை பின்வருமாறு:
* அதிக உடல் பருமனாக இருப்பவர்கள், குறிப்பாக வயிற்றைச் சுற்றி கொழுப்பு தேங்கியிருப்பவர்கள்.
* டைப்-2 சர்க்கரை நோயைக் கொண்டவர்கள்.
* உயர் கொலஸ்ட்ரால் அல்லது ட்ரை கிளிசரைடுகளை அதிகம் கொண்டவர்கள்.
* நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள்.
* ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு (AFLD), வழக்கமான மற்றும் அதிகப்படியான ஆல்கஹாலை உட்கொள்வது குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாகும்.
* முக்கியமாக கல்லீரல் நோயின் குடும்ப வரலாறு இருப்பின், அவர்களுக்கு வருவதற்கான அபாயமும் உள்ளது.
கொழுப்பு நிறைந்த கல்லீரல் நோயைத் தடுக்க அல்லது நிர்வகிப்பதற்கான முன்னெச்சரிக்கைகள்:
* ஆரோக்கியமான உடல் எடையை அடையவும், பராமரிக்கவும் சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியில் கவனம் செலுத்துங்கள்.
* பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்களை சேர்க்கவும். அதே நேரத்தில் கொழுப்புகள், சர்க்கரைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்கவும்.
* ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான-தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். அதாவது சுறுசுறுப்பான நடைபயிற்சி அல்லது நீச்சல் பயிற்சியில் ஈடுபடுங்கள்.
* மது அருந்துவதைக் குறைக்கவும் அல்லது தவிர்க்கவும்.
* நீரிழிவு, உயர் கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைமைகளை தவறாமல் கண்காணித்து கட்டுப்படுத்தவும்.
* உங்கள் மருத்துவரின் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்.
இன்றைய வேகமான உலகில், சில வாழ்க்கை முறை காரணிகள் கல்லீரல் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கலாம்:
* உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையானது உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்புக்கு பங்களிக்கும். இதன் விளைவாக கொழுப்பு கல்லீரல் நோய் அபாயம் அதிகரிக்கும்.
* அதிக கலோரி நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ள உணவுகள் எடை அதிகரிப்பு மற்றும் கல்லீரல் கொழுப்பு குவிப்புக்கு வழிவகுக்கும்.
* நாள்பட்ட மன அழுத்தமானது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மது அருந்துவதை அதிகரிக்க வழிவகுக்கும், இவை இரண்டும் கல்லீரல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.
* மோசமான தூக்கத்தின் தரம் மற்றும் ஒழுங்கற்ற தூக்க முறைகள் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
நீங்கள் ஏதேனும் அறிகுறிகளைக் கவனித்தால் அல்லது கொழுப்பு கல்லீரல் நோய் குறித்த கவலைகள் இருந்தால், பொருத்தமான மதிப்பீடு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைக்கு ஒரு சுகாதார நிபுணரை உடனே அணுக வேண்டும் என்றும் கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











