Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தயிர் மற்றும் பழங்களை கொடுக்கலாமா? டாக்டர் என்ன சொல்றார்-ன்னு பாருங்க..
Tips To Protect Your Children In Winter: குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில், குழந்தைகள் பலரும் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைக் காணக்கூடும். சொல்லப்போனால் மற்ற மாதங்களை விட, குளிர்காலத்தில் குழந்தைகளுக்காக நிறைய மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.
அதுவும் குழந்தைகள் சளி, இருமல் மற்றும் பிற சுவாச பிரச்சனைகளால் தான் அதிகம் அவதிப்படுவார்கள். ஏனெனில் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளிடம் நோயெதிர்ப்பு சக்தி சற்று குறைவாகவே இருக்கும். மேலும் குளிர்காலங்களில் வைரஸ்கள் நீண்ட காலம் ஒரு மேற்பரப்பில் உயிருடன் இருக்கும். எனவே குளிர்காலங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோருக்கும் சவாலானதாக இருக்கும்.

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்ற ஒரு பொதுவான கேள்வி இருக்கும். எனவே இந்த குளிர்காலத்தில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மற்றும் எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கலாம் என்பன குறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் சென்டரின் குழந்தை மருத்துவம் மற்றும் நியோனாட்டாலஜியின் மூத்த ஆலோசகரான டாக்டர். நிஷா மிரியம் ஜார்ஜ் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
குளிர்காலத்தில் ஏன் நிறைய சுவாச நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன?
குளிர்ச்சியான சூழலில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகம் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில், ஏரோசோல்கள் (Aerosols) அதாவது திரவம் மற்றும் வாயுவின் சிறிய துளிகள் - குளிர்ந்த நிலைகளில் மிகவும் பொதுவானவை மற்றும் வைரஸ்களை பரப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில், ஏரோசல் பரிமாற்றம் அதிகரிக்கிறது. ஏனெனில் இந்த நீர்த்துளிகள் காற்றில் நீண்ட நேரம் நீடிக்கும்.
குளிர் வெப்பநிலை வைரஸ்களின் கொழுப்பு சவ்வுகளைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் அவை மேற்பரப்பில் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ உதவுகிறது. கூடுதலாக, குளிர்ந்த காற்று நாசி துவாரங்களின் பாதுகாப்பு புறணியை பலவீனப்படுத்துகிறது, இதனால் தனிநபர்கள் சுவாச தொற்றுநோய்களுக்கு மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
குளிர்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான டிப்ஸ்கள்
1. தவறாமல் கைகளை கழுவுமாறு அவர்களை ஊக்குவிக்கலாம், மேலும் அவர்கள் தும்மினால் அல்லது இருமினால் அதை முழங்கையின் வளைவில் மறைக்கக் கற்றுக் கொடுத்தால், அது மற்றவர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.
2. அருகில் யாரேனும் இருமினால் கைகளால் வாயையும் மூக்கையும் மறைக்க அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள், அல்லது மக்கள் நெரிசலான பொது இடங்களுக்குச் செல்லும் போது முகமூடியைப் பயன்படுத்துங்கள்.
3. குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது, வீட்டிலேயே வைத்திருப்பது பள்ளியில் வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது. குழந்தைகள் குளிர்காலத்தில் வெளியில் செல்லும் போது குளிர்கால ஜாக்கெட், ஸ்வெட்டர், ஸ்கார்ஃப், சாக்ஸ் போன்றவற்றை அணிந்திருப்பதை உறுதி செய்யவும்.
4. பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குதல், அவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் தினசரி உடல் செயல்பாடுகளை ஊக்குவிப்பது இவை அனைத்தும் அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்து போராடும் திறனை வலுப்படுத்துகிறது.
5. இன்ஃப்ளூயன்ஸா (Influenza) மிகவும் பொதுவான மற்றும் கடுமையான வைரஸ் தொற்றுகளில் ஒன்றாகும், ஆனால் இது ப்ளூ தடுப்பூசி மூலம் எளிதில் தடுக்கப்படுகிறது. இந்திய குழந்தை மருத்துவ அகாடமி, 6 மாத வயதில் இருந்து, குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை பரிந்துரைக்கிறது. சற்று பெரிய குழந்தைகளுக்கு, ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் அல்லது இதய நிலைமைகள் போன்ற ஆபத்து காரணிகள் இருந்தால், வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசிகள் மிகவும் முக்கியம்.
குளிர்காலத்துடன் தொடர்புடைய கட்டுக்கதைகள்
குளிர்காலத்துடன் தொடர்புடைய பல பொதுவான கட்டுக்கதைகள் பெற்றோரிடையே குழப்பம் மற்றும் தவறான நடைமுறைகளுக்கு வழிவகுக்கின்றன. உதாரணமாக, சிலர் குழந்தைகளுக்குப் பழங்களைக் கொடுப்பதைத் தவிர்க்கிறார்கள். ஏனெனில் அவை சளியை உண்டாக்கும் என்று நம்புகிறார்கள். மற்றவர்கள் தயிர் வழங்குவதைத் தவிர்க்கலாம், ஏனெனில் அது "சளியை உண்டாக்கும்" என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த நம்பிக்கைகள் அறிவியலால் ஆதரிக்கப்படவில்லை.
உண்மையில், பழங்கள் மற்றும் தயிர் இரண்டும் ஆரோக்கியமான உணவின் முக்கிய கூறுகள், குளிர் காலநிலையிலும் கூட. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய வைட்டமின்களை பழங்கள் வழங்குகின்றன, மேலும் தயிர் குடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் புரோபயாடிக்குகளின் (probiotics) நல்ல மூலமாகும்.
எனவே குளிர் காலத்தை விஞ்ஞான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. உண்மையிலே ஜலதோஷம் வைரஸ்களால் ஏற்படுகிறது, நாம் உண்ணும் உணவுகளால் அல்ல. இந்த கட்டுக்கதைகளை நீக்குவதன் மூலம், குளிர்கால மாதங்களில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஆதரிக்கும் சிறந்த தேர்வுகளை நாம் செய்யலாம். என்று டாக்டர் நிஷா கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications