Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள்
தொண்டை-லாம் புண்ணா இருக்கா? ரொம்ப வலிக்குதா? இதோ அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!
Sore Throat Remedies In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இப்படி காலநிலை மாற்றமடைந்ததால், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளால் அடிக்கடி அவதிப்படக்கூடும். அதில் ஒன்று தான் தொண்டை புண் அல்லது தொண்டை வலி.
பொதுவாக குளிர்ச்சியான காலநிலையின் போது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும். இதனால் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் எளிதில் உடலினுள் புகுந்து பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உடலினுள் கிருமிகளானது நுழைந்ததும், முதலில் தொண்டையைத் தான் தாக்குகின்றன. தொண்டையில் கிருமி தொற்றுகள் ஏற்பட்டதும், அது தொண்டையில் அரிப்பு, கரகரப்பு, வறட்சி மற்றும் ஒருவித அசௌகரியமான உணர்வை உண்டாக்கும். மேலும் தொண்டையில் வலி, பேசும் போது அல்லது விழுங்கும் போது வலி மற்றும் லேசான காய்ச்சல் போன்றவற்றையும் சந்திக்கக்கூடும்.
நீங்கள் தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா? அந்த தொண்டை வலிக்கு வீட்டிலேயே நிவாரணம் காண வேண்டுமா? கீழே தொண்டை வலியில் இருந்து விரைவில் நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வழிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
வெதுவெதுப்பான உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்கவும்
தொண்டை வலியால் அவதிப்படும் போது வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். அதோடு வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி அடிக்கடி செய்யும் போது, உப்பில் உள்ள ஆன்டி-பாக்டிரியல் பண்புகள் தொண்டையில் ஏற்பட்டுள்ள தொற்றுக்களை சரிசெய்து விரைவில் குணமாக வழிவகை செய்யும்.
மஞ்சள் நீர்
ஆயுர்வேதத்தில் வீக்கம், காயம் முதல் சளி வரை பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் தொண்டைப் புண்ணால் ஒருவர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நீரில் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் கலந்து குடித்தால், தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, விரைவில் தொண்டை புண் சரியாகும்.
தேன்
இனிப்புச் சுவையைக் கொண்ட தேன் ஒரு மருத்துவ பொருளும் கூட. ஏனெனில் தேனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதுவும் தொண்டை வலி அல்லது தொண்டை புண்ணால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு ஸ்பூன் தேனை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில் சேர்த்தும் குடிக்கலாம். இதனால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
சுக்கு
சுக்கு என்பது இஞ்சியில் காய்ந்த வடிவம். நாட்டு மருத்துவத்தில் சளி, இருமல், தொண்டைப் புண் போன்றவற்றை சரிசெய்ய சுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் கடுமையான தொண்டை வலியால் அவதிப்படும் போது, சுக்கு பொடியில் தேன் சேர்த்து கலந்து உட்கொண்டு வந்தால், தொண்டையில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு, விரைவில் தொண்டை கரகரப்பு சரியாகும்.
துளசி
மிகவும் புனிதமான செடியாக கருதப்படும் துளசி, ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. ஆயுர்வேதத்தில் துளசி சளி, இருமல், ஜலதோஷம், தொண்டை வலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் துளசியானது உடலில் ஆன்டிபாடி உற்பத்தியை மேம்படுத்துகிறது மற்றும் சுவாசப் பாதையில் உள்ள சளியை வெளியேற்றி, சுவாச பாதையை சுத்தம் செய்ய உதவுகிறது.
அதிமதுரம்
ஆயுர்வேத மூலிகையான அதிமதுரம் தொண்டைப் புண்ணிற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. அதுவும் இது மூக்கடைப்பு, சுவாசப் பாதையில் உள்ள சளியை இளகச் செய்வதோடு, இருமலைக் குறைக்கிறது. குறிப்பாக கடுமையான தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள், அதிமதுர பொடியுடன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட விரைவில் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications