Latest Updates
-
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்
எச்சரிக்கை! சாதத்தை ஒரு நாளில் இந்த அளவுக்கு மேல சாப்பிடாதீங்க.. இல்லன்னா மாரடைப்பு வந்துடும்...
Rice And Heart Attack In Tamil: இந்தியாவின் பிரதான உணவு சாதமும், சப்பாத்தியும் தான். இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தங்களின் உணவில் சாதத்தையும், சப்பாத்தியையும் தவறாமல் சேர்ப்பார்கள்.
சப்பாத்தியை கூட சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள், ஆனால் சாதத்தை ஒரு வேளையாவது சாப்பிட்டாக வேண்டும். அப்படிப்பட்ட வெள்ளை சாதம் மோசமான உணவாக கருதப்படாவிட்டாலும், சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசியை அதிகமாக உட்கொள்வது கொடிய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

அதுவும் ஆய்வு ஒன்றில் வெள்ளை சாதத்தை அதிகமாக உட்கொள்வது மாரடைப்பு போன்ற இதய நோயின் அபாயத்தை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு வெள்ளை சாதத்தில் ஆர்சனிக் என்ற பொருள் தான் காரணம்.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட பிரித்தானியர்களில் 25 சதவீதத்தினர் சாதத்தை உட்கொண்டு வந்தனர். அவர்களுள் சாதத்தை உட்கொள்ளாதவர்களை விட சாதத்தை உட்கொள்பவர்களுக்கு இதய நோயால் இறக்கும் அபாயம் 6 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சாதமானது இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள உணவுப் பொருட்களில் முதன்மையானது மற்றும் இவற்றில் கலோரிகளும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. ஆனால் இப்படிப்பட்ட ஆர்சனிக் நிறைந்த சாதமானது உலகளவில் ஒரு ஆண்டில் நிகழும் 50,000 அகால மரணங்களுக்கு காரணமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அரிசியில் ஆர்சனிக்
ஆர்சனிக் மண்ணில் இயற்கையாகவே காணப்படுகிறது. அதுவும் இது ஆர்சனிக் அடிப்படையிலான களைக்கொல்லிகள் பயன்படுத்திய இடங்களில் இது அதிகமாக இருக்கும். இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நெல் வளர்க்கப்படும் போது, மண்ணில் உள்ள ஆர்சனிக் நீரில் கலந்து, அந்நீரை நெய்பயிர்கள் உறிஞ்சி, அந்த நெற்பயிரில் இருந்து கிடைக்கும் அரிசியில் ஆர்சனிக் அதிகமாக இருக்கும்.
வெள்ளை அரிசி இதயத்தை எப்படி பாதிக்கிறது?
பொதுவாக சர்க்கரை தான் இதயம் மற்றும் உடலின் பிற உறுப்புக்களின் முதல் எதிரியாக கருதப்பட்டது. ஆனால் தற்போது மக்கள் அதிகமாக சாதத்தை சாப்பிடுவதால், அதுவும் இதய நோயின் அபாயத்தை அதிகரிப்பதாக இதய நிபுணர்கள் கூறுகின்றன. எனவே அதிகமாக மிட்டாய் அல்லது சாதத்தை சாப்பிட்டால், இதய ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும்.
மேலும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை அதிகமாக உட்கொள்வது, முன்கூட்டிய கரோனரி தமனி நோயுடன் (பிசிஏடி) இணைக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகளவில் அதிகப்படியான மரணத்திற்கு முக்கிய காரணமாகும். ஆகவே சாதம் மற்றும் சர்க்கரையை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
வெள்ளை சாதத்தை முழுமையாக தவிர்க்க வேண்டுமா?
முழுதானியங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஆனால் அந்த தானியங்களை பதப்படுத்தி மாவுகளாக்கி பயன்படுத்தும் போது, அதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட தானியங்களுள் ஒன்று தான் வெள்ளை அரிசி.
இந்த அரிசியில் நார்ச்சத்து இல்லாததால், இது உடலால் எளிதில் உடைக்கப்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சட்டென அதிகரிக்கிறது. ஒருவரது உடலில் சட்டென இரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது, அது இரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளில் தீங்கை விளைவிக்கிறது. மேலும் இது தமனி சுவர்கள் மற்றும் PCAD இல் பிளேக்குகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கிறது.
அதற்காக சாதத்தை முழுமையாக தவிர்க்க வேண்டாம். மாறாக, ஆர்சனிக் குறைவாக உள்ள பாசுமதி அரிசி போன்ற ஆரோக்கியமான அரிசிகளை தேர்ந்தெடுத்து சமைத்து சாப்பிடலாம். இதனால் இதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயம் குறைவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு சாதம் சாப்பிடலாம்?
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கு 1/2 கப் முதல் ஒரு கப் வரை வெள்ளை சாதத்தை சாப்பிடலாம். அதுவும் அந்த சாதத்துடன் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி உட்கொள்ளும் போது, நீண்ட காலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications