Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்
உயிரைப் பறிக்கும் பல்வேறு புற்றுநோய்களின் ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி கூறும் டாக்டர் ஃபரூக்!
Cancer Symptoms In Tamil: உலகளவில் பெரும்பாலானோரின் உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் விளங்குகிறது. பலரும் புற்றுநோய் வந்தால், அதை சரிசெய்ய முடியாது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது மருத்துவ முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், புற்றுநோயை பரிபூர்ணமாக குணப்படுத்த முடியும்.
அதற்கு புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்து ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இப்படி ஆரம்பத்திலேயே புற்றுநோய்களின் அறிகுறிகளை கவனித்து மருத்துவரிடம் சென்றால், புற்றுநோய் உடலின் மற்ற இடங்களுக்கு பரவுவதைத் தடுப்பதோடு, முழுமையாக புற்றுநோயில் இருந்து குணமாகவும் முடியும்.

எனவே தான் சிவகங்கை அரசு மருத்துவமனை பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா, தனது சமூகவலைத்தள பக்கத்தில் பல்வேறு புற்றுநோய்களின் ஆரம்ப கால அறிகுறிகளைக் குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
மார்பக புற்றுநோய்
மார்பகங்களைப் பொருத்தவரை, மார்புக்குள் கக்கம் பகுதியில் கட்டி தோன்றுவது இயல்புக்கு மாறானது. மேலும் முலைக்காம்பில் இருந்து ரத்தம்/ நீர் போன்ற திரவம் வருவது முக்கிய அறிகுறி. மார்புப்பகுதியில் உள்ள தோல் ஆரஞ்சுப் பழத்தின் தோல் போல சொரசொரப்புடன் புள்ளி புள்ளியாக பள்ளம் விழுந்து காணப்பட்டால், உடனே மருத்துவரை சந்தித்து மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.
புரோஸ்டேட்/சிறுநீர்ப்பை சார்ந்த புற்றுநோய்
சிறுநீர் கழிக்கும் போது குறைவாக செல்வது / சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது / சிரமத்துடன் சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது / சிறுநீரில் ரத்தம் கலந்து செல்வது போன்றவை புரோஸ்டேட் சுரப்பி / சிறுநீர்ப்பை சார்ந்த புற்றுநோயின் ஆரம்ப கட்ட அறிகுறியாக இருக்கலாம்
கர்ப்பப்பை சார்த்த புற்றுநோய்
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் கோளாறு, மாதவிடாய் உதிரப்போக்கு அளவுக்கு அதிகமாக செல்வது, மாதவிடாய் நின்று மெனோபாஸ் அடைந்து விட்ட நிலைக்குப் பின்பும் திடீரென உதிரப்போக்கு ஆவது போன்றவை கர்ப்பப்பை சார்ந்த புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும்
மலக்குடல் புற்றுநோய்
நன்றாக மலம் கழித்து வந்த நிலையில் திடீரென மலச்சிக்கலோ அல்லது அடிக்கடி மலம் வெளியேறும் நிலையோ ஏற்படுவது, மலத்தில் ரத்தம் வெளியேறுவது, அடிவயிற்றுப் பகுதியில் வலி ஏற்படுவது போன்றவை மலக்குடல் பகுதியில் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் கவனம் தேவை.
உணவுக்குழாய்/இரைப்பை புற்றுநோய்
சாப்பிட்ட உணவு வயிற்றுக்கு இறங்காமல் நெஞ்சிலேயே அதிக நேரம் நிற்பது, நெஞ்செரிச்சல், உணவை விழுங்குவதில் சிரமம், மேல் வயிற்றுப் பகுதியில் வலி , குமட்டல், வாந்தி, பசி உணர்வு குறைதல் போன்றவை உணவுக்குழாய் / இரைப்பை போன்ற பகுதிகளில் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
நுரையீரல்/சுவாச பாதை புற்றுநோய்
அடிக்கடி காரணமில்லாமல் இருமல், தொண்டை கரகரப்பு (எந்த சிகிச்சைக்கும் அடங்காமல் தொடரும் இருமல்), இருமும் போது ரத்தம் சளியுடன் வெளியேறுவது போன்றவை நுரையீரல் மற்றும் சுவாசப்பாதை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
வாய்/தொண்டை புற்றுநோய்
வாயில் நாக்கில் ஈர்ப்பகுதியில் ஆறாத புண்/சதைக்கட்டி போன்றவை ஏற்படும். நாக்கு மற்றும் வாயில் இருந்து அடிக்கடி ரத்தக் கசிவு மற்றும் வலி ஏற்படுவது, நாக்கில் வெள்ளையாகவும் சிவப்பாகவும் படை தோன்றுவது போன்றவை வாய் மற்றும் தொண்டைப் பகுதி புற்றுநோயாக இருக்கக்கூடும்.
மூளையில் கட்டி
அடிக்கடி காரணமின்றி தலைவலி, வலிப்பு, பார்வை இரண்டாகத் தெரிவது, காது கேட்டலில் குறைபாடு, நடை தடுமாறுவது , கண் இமை கீழறிங்கித் தொங்குவது போன்றவை மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பதற்கு அறிகுறியாக இருக்கலாம்.
தோல் புற்றுநோய்
தோல் பகுதியில் சதைக்கட்டிகள் திடீரென தோன்றுவது, உருவத்தில் பெரிதாக மாறுவது, கட்டிகளில் இருந்து ரத்தம் கசிவது, ஆறாத புண்கள், புதிதாக மச்சம் தோன்றுவது அல்லது ஏற்கனவே இருக்கும் மச்சம் உருவத்தில் பெரிதாவது வீங்குவது போன்றவை சருமம் சார்ந்த புற்றுநோய்க்கு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
கழுத்து, கக்கம், வயிற்றுப் பகுதி, இடுப்புப் பகுதியில் கட்டிகள் தோன்றுவது, தீராத காய்ச்சல், இரவு நேரத்தில் வியர்த்துக் கொட்டுவது, காரணமே இல்லாமல் திடீரென உடல் எடை வெகுவாகக் குறைந்தாலோ, திடீரென கூடினாலும் அதை அலட்சியம் செய்யாமல் கவனிக்க வேண்டும்.
மேற்சொன்ன அறிகுறிகள் யாவும் பல்வேறு விதமான புற்றுநோய்களின் ஆரம்ப நிலை அறிகுறிகள். இவற்றை உதாசீனம் செய்யாமல் உடனே சிகிச்சைக்கு வந்தால் புற்று வேறெங்கும் பரவும் முன்னமே பூரணமாக குணம் அடைய முடியும் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications