Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
பாகற்காய் சாப்பிட போறீங்களா? அப்போ இந்த உணவுகளை தொட்டுக்கூட பார்க்காதீர்கள்.. விஷமாக மாறுமாம்..!
பாகற்காய் என்றாலெ எனக்கு பிடிக்காது என்று சொல்பவர்கள்தான் அதிகம்.. அந்த பெயரை சொன்னாலே எல்லோருக்கும் கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். பெரும்பாலனவர்கள் கட்டாயத்தின் பேரிலே இந்த காயை சாப்பிடுவார்கள்.. ஆனால் பாகற்காயில் ஏராளமாக ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக சுகர் உள்ளவர்களுக்கு இது இயற்கையால் படைக்கப்பட்ட அற்புத காய்கறி என்று கூட சொல்லலாம். ஆனால் இதை சில உணவுகளோடு சாப்பிடக்கூடாதாம்.. எந்தெந்த உணவோடு இந்த பாகற்காயை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

1. முள்ளங்கி சாம்பாருக்கு பாகற்காய் வறுவல் சாப்பிட சுவையாகத் தான் இருக்கும்.ஆனால் முள்ளங்கியை பாகற்காயுடனோ பாகற்காய் சாப்பிட்ட பிறகோ அடுத்த வேளையோ எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. காமினேஷனும் கேட்க நன்றாகத் தான் இருக்கும். ஆனால் சாப்பிடக்கூடவே கூடாதாம்..
2. முள்ளங்கியுடன் பாகற்காயைச் சேர்த்து சாப்பிடும்போது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். அதனால் வாந்தி, தலசுற்றல், மந்தம் மற்றும் குமட்டல் பிரச்சினைகள் ஏற்படும்.
3. பாகற்காய் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரையிலும் பால் குடிக்கக் கூடாது. ஆம் பால் பொருட்களை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.. அதேபோல பாகற்காய் சாபிட்டு ஒரு மணி நேரம் வரை பாலும் குடிக்கக் கூடாது.
4. இந்த இரண்டு உணவுகளும் சேரும்போது அஜீரணக் கோளாறை உண்டாக்கும். ஏற்கனவே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த காமினேஷனைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். காரணம் அது வயிற்று வலி, வயிறு எரிச்சல், வயிறு உப்பிசம், மலச்சிக்கல் உள்ளிடட பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும். மொத்தத்தில் உடலின் ஆரோக்கியம் கொடும்..
5. மேலும் முக்கியமாக பாகற்காயுடன் மசாலா பொருட்களை சேர்க்கக்கூடாதாம்.. : கிராம்பு, இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற வலுவான மசாலாப் பொருட்களை பாகற்காய் உணவுகளில் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால், இந்த மசாலாப் பொருட்களின் காரமான தன்மை அவற்றின் இயற்கையான சுவையை மாற்றுகிறது. மேலும், செய்முறையின் சுவையையும் கெடுத்துவிடும். ஆனால் சீரகம் மற்றும் கொத்தமல்லி போன்ற லேசான மசாலாவை இந்த உணவுகளில் சேர்த்து சமைக்கலாம்..
6. பாகற்காய் சாப்பிடும்போது அதோடு சேர்த்து மாம்பழம் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சசாப்பிடக் கூடாது. மாம்பழம் உடல் சூட்டை அதிகரிக்கும். பாகற்காயை அதோடு சேர்த்து சாப்பிடும் போது வயிற்று வலி, டயேரியா, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். செரிமானக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இந்த காமினேஷனைக் கட்டாயம் சாப்பிடவே கூடாது.
7. பாகற்காயை மட்டன் போன்ற இறைச்சிகளுடன் சமைக்கக் கூடாது, ஒன்றாகச் சேர்த்தும் சாப்பிடக் கூடாது. இந்த இரண்டு உணவுகளும் சேரும்போது, உணவின் சுவை கெட்டுவிடும். மேலும், இந்த கலவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
8. பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ், மிக்சர்கள், சர்க்கரை தின்பண்டங்கள் போன்றவை பாகற்காயில் உள்ள இயற்கையான கசப்புடன் உடனே ரியாக்ட் செய்கிறது. எனவே இந்த கலவை மிகவும் மோசமானது. நமது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.. அதனால் பாகற்காய் சாப்பிடும் போதெல்லாம் சற்று கவனமாக இருப்பதே நல்லது..
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications