Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
தினமும் சுடுநீர் குடித்தால் உண்மையில் உடல் கொழுப்பு குறையுமா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..
Hot Water And Weight Loss: உலகளவில் பெரும்பாலானோர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் உடல் பருமன். இந்த உடல் பருமன் பிரச்சனையை கொண்டவர்களால் தங்களின் தினசரி வேலைகளை செய்வது கூட சிரமமாக இருக்கும்.
அந்த அளவில் உடல் பருமன் ஒருவரது வாழ்க்கையையே சிரமமாக்கும். அதோடு இந்த உடல் பருமனால் ஏராளமான பல ஆரோக்கிய பிரச்சனைகளாலும் அவதிப்பட நேரிடும். எனவே உடல் பருமனைக் கொண்டவர்கள் அதைக் குறைக்க உடனே முயற்சிக்க வேண்டும்.

உடல் பருமனைக் குறைக்க ஏராளமான வழிகள் உள்ளன. அதில் பொதுவாக நிறைய பேர் பின்பற்றும் ஒரு பழக்கம் தான் சுடுநீரை குடிப்பது. சுடுநீரைக் குடித்தால் உடல் பருமன் குறையும், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் வேகமாக கரையும் என்று நிறைய பேர் நினைக்கின்றனர். உண்மையில் சுடுநீரைக் குடித்தால் உடல் பருமன் குறையுமா என்ன? உண்மை என்ன என்பது குறித்து உணவு ஆலோசகரான டாக்டர். அருண்குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விரிவாகவும், தெளிவாகவும் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால், முதலில் உடல் பருமன் என்றால் என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். உடல் பருமன் என்பது தோலுக்கு அடியில் தேங்கியுள்ள கொழுப்புக்களால் வரக்கூடியது. இந்த கொழுப்புக்கள் நாம் சாப்பிடும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் மட்டும் சேர்வதில்லை. இந்த கொழுப்புக்களானது நாம் அதிகமாக எடுக்கும் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்புக்கள் போன்றவற்றில் உடலுக்கு தேவையானதை விட அதிகமாக இருந்தால், அவை கொழுப்புக்களாக உடலில் தேங்கும். இப்படி தேங்கும் கொழுப்புக்கள் தான் உடல் பருமனுக்கு அடிப்படை காரணம்." என்று கூறினார்.
உடல் பருமனைக் குறைக்க உண்மையில் என்ன செய்ய வேண்டும்?
"கொழுப்புக்கள் என்பது ஒரு எரிசக்தி. அதாவது எப்படி வெயில் காலத்தில் நீர் பற்றாக்குறையைப் போக்க அணைகளில் நீரை தேக்கி வைக்கிறோமோ, அதேப் போல் தான் நம் உடம்பில் உள்ள கொழுப்பும். இந்த கொழுப்புக்களை கரைக்க வேண்டுமானால், அந்த கொழுப்புக்களை பயன்படுத்தினால் மட்டுமே குறைக்க முடியும். வேறு எதுவும் செய்து கரைக்க முடியாது. பயன்படுத்துவது என்றால், உணவில் கலோரிகளை குறைத்தாலோ, மாவுச்சத்தைக் குறைத்தாலோ, உடற்பயிற்சி செய்து உடம்பில் ஒரு பற்றாக்குறையை ஏற்படுத்தி, உடம்பில் இருந்து கொழுப்பை எரிசக்தியாக மாற்றினாலோ தான், உடம்பில் உள்ள கொழுப்புக்கள் குறையும்.
ஆனால் சுடுநீரைக் குடித்தால், உடல் கொழுப்பு குறையும் என்று எந்த நம்பிக்கையில் கூறுகிறார்கள் என்றால், கொழுப்பை உஷ்ணப்படுத்தும் போது, அது உருகி அப்படியே வெளியேறிவிடும் என்றும், எப்படி பாத்திரத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு அல்லது அழுக்கை நீக்க சுடுநீரை ஊற்றினால் வந்துவிடுமோ, அதை அடிப்படையாக கொண்டு ஒரு புத்திசாலிகள் பரப்பிய ஒரு லாஜிக் இல்லாத ஒன்று.
உடல் கொழுப்பை கரைக்க வேண்டுமானால், உணவுக் கட்டுப்பாட்டை பிரதானமாக ஏற்படுத்தணும், உடற்பயிற்சிகளை செய்யணும், மாவுச்சத்தை குறைக்கணும், கலோரிகளை கட்டுப்படுத்தணும். இவற்றையெல்லாம் செய்தால் மட்டுமே உடம்பில் உள்ள கொழுப்பு எரிசக்தியாக மாறி கரையும்" என்று டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
