Latest Updates
-
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க..
சாதத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிட்டால் சுகர் குறையும் என்பது உண்மையா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க...
Cooked Rice And Blood Sugar: சாதம் அனைவருக்குமே பிடிக்கும். சொல்லப்போனால் ஒரு நாளில் ஒருமுறையாவது சாதத்தை சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போன்றே இருக்கும். அந்த அளவில் சாதம் ஒருவருக்கு நிறைவை தருகிறது. அப்படிப்பட்ட சாதத்தை அதிகமாக சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரிக்கும், உடல் எடை அதிகரித்துவிடும் என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
இது தவிர சாதம் மீந்து போனால், அதை ஃப்ரிட்ஜ்ஜில் எடுத்து வைத்து, மறுநாள் அதை சூடேற்றி சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரிப்பது குறையும் என்று சமீப காலமாக மக்களிடையே கருத்து ஒன்று பரவி வருகிறது. உண்மையிலேயே சாதத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவுகள் குறையுமா என்பது குறித்து உணவு ஆலோசகரான டாக்டர் அருண்குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விளக்கமாக கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "பொதுவாக அரிசியில் உள்ள மாவுச்சத்தை (கார்போஹைட்ரேட்) ஸ்டார்ச் என்று சொல்வோம். இந்த ஸ்டார்ச் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். இந்த ஸ்டார்ச் அனைத்து வகையான தானியங்களிலும் உள்ளன. அதுவும் மற்ற தானியங்களுடன் ஒப்பிடுகையில் வெள்ளை அரிசியில் ஸ்டார்ச் சற்று அதிகமாகவே உள்ளன. இதனால் தான் வெள்ளை அரிசி சாதத்தை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கிறது.
இந்நிலையில் இந்த சாதத்திற்கு சிறந்த மாற்று உணவு என்றால் அது பாலிஷ் செய்யப்படாத கைக்குத்தல் அரிசி, கவுனி அரிசி போன்றவை தான். ஆனால் இந்த வகை அரிசி உணவுகள் சுவையாக இருக்காது. சிறிது சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். அதுவும் அந்த சிறிதளவு சாதத்தை சாப்பிடுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வெள்ளை சாதத்தை வேறு எப்படி சாப்பிட்டால் இரத்த சர்க்கரையை குறைக்கலாம் என்று பலரும் யோசிப்பார்கள்.
அதில் ஒரு முறை தான், சமைத்த சாதத்தை ஃப்ரிட்ஜ்ஜில் 12-24 மணிநேரம் வைத்து விட்டு, அதன் பின் அதை வெளியே எடுத்து சூடேற்றி சாப்பிட்டால், ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் உருவாகி, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது சற்று குறைவது தெரிய வந்துள்ளதாக 5 ஆண்டுகளுக்கு முந்தைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுவும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இப்படி ஃப்ரிட்ஜ்ஜில் வைத்த சாதத்தை சாப்பிடுவதால் எந்த அளவு இரத்த சர்க்கரை அளவில் மாற்றம் தெரியும் என்பது குறித்து ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக இந்த ஆய்வு டைப்-1 சர்க்கரை நோயாளிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. டைப்-1 சர்க்கரை நோய் என்பது இன்சுலின் சுரக்காத நிலையாகும். இந்த வகை சர்க்கரை நோயாளிகள் சிறிது மாவுச்சத்தை எடுத்தாலே, இரத்த சர்க்கரை வேகமாக அதிகரிக்கும். அப்படிப்பட்டவர்களை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் ஒரு குழுவினருக்கு 200 கிராம் பாசுமதி அரிசி சாதத்தை சாப்பிட கொடுத்தனர். மற்றொரு குழுவினருக்கு அதே 200 கிராம் பாசுமதி அரிசி சாதத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து 24 மணிநேரம் கழித்து சூடேற்றி சாப்பிட கொடுத்தனர். இவ்விரு குழுவினருக்கும் எந்த அளவில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்று பார்த்ததில், சமைத்த உடனே சாப்பிட்ட குழுவினருக்கு 2 மணிநேரம் கழித்து பரிசோதனை செய்ததில் 200 மிகி இரத்த சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்தது. அதுவே ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சூடேற்றி சாப்பிட்டவர்களுக்கு 2 மணிநேரம் கழித்து பரிசோதனை செய்ததில் 180 மிகி இரத்த சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்தது.
அதேப் போல் மற்றொரு ஆய்வில் எவ்வளவு ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் உருவாகிறது என்றும் ஆராய்ந்தனர். அதில் சமைத்த 100 கிராம் சூடான சாதத்தில் 0.6 கிராம் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் உருவாகியுள்ளது, அதுவே சமைத்து 10 மணிநேரம் கழித்து 100 கிராம் சாதத்தை ஆராய்ந்ததில் 1.3 கிராம் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் உருவாகியுள்ளது. சாதத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து 24 மணிநேரம் கழித்து ஆராய்ந்ததில் 1.6 கிராம் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் உருவாகியுள்ளது.
மொத்தத்தில் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்த சாதத்தை சூடேற்றி சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு குறையுமா என்றால், குறையும் தான். ஆனால் எந்த அளவிற்கு தடுக்கிறது என்று பார்த்தால், 10 சதவீதம் தான் வித்தியாசம். எனவே இது ஒரு சிறிய ஹேக் தானே தவிர, இரத்த சர்க்கரை அளவை பெரிதாக குறைத்திடாது" என்றும் கூறினார்.
சாதத்தை சாப்பிட்டு இரத்த சர்க்கரை அளவை குறைப்பதற்கான சிறந்த வழி
"சாதத்தை சாப்பிட்டும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க நினைத்தால், சாதத்தை அளவாக உட்கொண்டு காய்கறிகள், பழங்கள், முட்டை மற்றும் பன்னீர், சோயா போன்ற புரோட்டீன் உணவுகளை அதிகமாக உட்கொண்டால், இரத்த சர்க்கரையை சிறப்பாக குறைக்கலாம்" என்றும் டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


