Latest Updates
-
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட்-ல் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
தேநீரில் ஏலக்காய் சேர்த்து குடிப்பவரா நீங்க? உங்களுக்கான முக்கிய செய்திதான் இது... ஷாக் ஆகாதீங்க...!
இந்தியர்களுக்கு தேநீர் என்பது வெறும் பானம் என்பதை விட முக்கியத்துவம் வாய்த்தது. டீ குடிப்பது என்பது ஆறுதல் என்பதையும் தாண்டி ஒரு அடிக்ஷனாகவே மக்களுக்கு மாறிவிட்டது. டீ எவ்வளவு ஆறுதலைத் தருகிறதோ அதேயளவிற்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அதில் மிகவும் முக்கியமானது அமிலத்தன்மையை ஏற்படுத்துவது.

பொதுவாக தேநீரால் ஏற்படும் அமிலத்தன்மையை சமாளிக்க அதில் ஏலக்காய் சேர்க்கப்படுகிறது. இது அமிலத்தன்மையைக் குறைக்கும் என்ற நம்பிக்கையுடன், வழக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மசாலா உண்மையில் தேநீரின் அமிலத்தன்மையை நடுநிலையாக்க உதவுமா என்றால் அது கேள்விக்குறிதான். ஏலக்காய் தேநீரின் அமிலத்தன்மையைக் குறைக்குமா, மேலும் எந்த வீட்டு வைத்தியம் அமிலத்தன்மையை சமாளிக்க உதவும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேநீரில் ஏலக்காய் சேர்ப்பது அமிலத்தன்மையை குறைக்குமா?
இதற்கான பதில் இல்லை என்பதுதான். இதற்குப் பின்னால் லாஜிக் என்னவெனில், நீரின் pH அளவு 7 ஆகும், இது நடுநிலையாக கருதப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவெனில் இது இயற்கையில் அமிலம் அல்லது காரமானது அல்ல. 7 க்கும் குறைவான pH அளவைக் கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள் அமிலமாகக் கருதப்படுகின்றன. பலருக்கும் பிரதான பானமாக இருக்கும் தேநீர், பொதுவாக 6.4 முதல் 6.8 வரை pH அளவைக் கொண்டிருக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தேநீரின் பிராண்டைப் பொறுத்து சரியான pH மாறுபடும்.
ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், தேநீரில் பால் சேர்க்கும் போது, பாலே அமிலத்தன்மை கொண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் பால் சேர்த்து தேநீர் தயாரிக்கும்போது, நீங்கள் இயற்கையில் அமிலத்தன்மை கொண்ட கலவையை உருவாக்குகிறீர்கள்.
தேநீரின் சுவையை அதிகரிக்க அடிக்கடி சேர்க்கப்படும் ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களைப் பொறுத்தவரை, அவை பொதுவாக தேநீரின் pH அளவை மாற்றாது. பொதுவாக, 4-5 ஏலக்காய் சேர்க்கப்படும் போது, இது தேநீரின் அமிலத்தன்மையை பாதிக்க போதுமானதாக இல்லை. எனவே, நீங்கள் உங்கள் தேநீரில் எத்தனை மசாலாப் பொருட்களைச் சேர்த்தாலும், அவை pH அளவைக் கணிசமாகப் பாதிக்காது. இந்த சிக்கலைச் சமாளிக்க வேறென்ன செய்ய வேண்டுமென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
ஓமம்
ஓமம் அல்லது அஜ்வைன் செரிமானப் பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. ஏனெனில் இதில் தைமால் என்ற சேர்மம் உள்ளது, இது அமிலத்தன்மையை சமாளிக்க உதவும். அமிலத்தன்மையைக் குறைக்க, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அஜ்வைனை மென்று சாப்பிடுங்கள் அல்லது ஒரு டீஸ்பூன் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரைக் குடிக்கவும்.
சோம்பு
சோம்பு விதைகள் செரிமானத்தை ஆதரிக்கவும் அமிலத்தன்மையைக் குறைக்கவும் உதவும். சாப்பிட்ட பிறகு, சிறிது சோம்பு விதைகளை மெல்லுங்கள் அல்லது தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின்னர் குடிக்கவும். உங்கள் குடல் ஆரோக்கியத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் சூடான சோம்பு நீராகவும் நீங்கள் குடிக்கலாம்.
பால் அல்லது தயிர்
குளிர்ந்த அல்லது அறை வெப்பநிலை பால் ஒரு இயற்கை ஆன்டாக்சிட் ஆக செயல்படுகிறது, இது அமிலத்தன்மையை குறைக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள அமில அளவை நடுநிலையாக்க மெதுவாக பாலை பருகவும். தயிர் அமிலத்தன்மையைக் கையாள்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் இது ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்க உதவும் புரோபயாடிக்குகளைக் கொண்டுள்ளது.
கொத்தமல்லி
ப்ரெஷான கொத்தமல்லி இலைகள் அல்லது மல்லி விதைகள் இரண்டுமே அமிலத்தன்மையை சமாளிக்க உதவும். பச்சை கொத்தமல்லி சாறு அல்லது கொத்தமல்லி விதை தேநீர் வீக்கம், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றைக் குறைக்கும், அவை அமிலத்தன்மையின் சில பொதுவான அறிகுறிகளாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
