Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க உடல் ஆரோக்கியமா இருக்கு-ன்னு அர்த்தம்...
Healthy Body Symptoms In Tamil: தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நமது ஆரோக்கியத்தைப் பற்றிய கவலை நிச்சயம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஏனெனில் பணம் சம்பாதிப்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் நமது உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க பலருக்கு நேரம் கிடைப்பதில்லை.
எப்படி நமது உடலில் பிரச்சனை இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்துவதன் மூலம் நமக்கு உணர்த்துகிறதோ, அதேப் போல் உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், ஒருசில வித்தியாசமான அறிகுறிகள் தெரியும் என்பது தெரியுமா?

இதுக்குறித்து நைஜீரியா பல்கலைகழக மருத்துவக் கல்லூரின் முன்னாள் மாணவரான டாக்டர் டோலுவானி பினுடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் ஆரோக்கியமாக இருந்தால் வெளிப்படும் 8 விசித்திரமான அறிகுறிகளை பகிர்ந்துள்ளார். அவை என்னவென்பதை தொடர்ந்து பாருங்கள்.
1. துர்நாற்றமிக்க மலம்
மலம் கழிக்கும் போது துர்நாற்றமடித்தால், நமது குடல் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சுகிறது என்று அர்த்தம் என்று டாக்டர் கூறினார்.
2. தட்டையான வயிறு
காலையில் உங்களின் வயிறு தட்டையாக உள்ளதா? அப்படியானால் இரவு நேரத்தில் செரிமானம் சீராக நடக்கிறது என்று அர்த்தம் என்று டாக்டர் டோலு கூறினார்.
3. அக்குள் நாற்றம்
அக்குள் நாற்றத்துடன் இருக்கும். ஆனால் மோசமாக இருக்காது. அக்குள் நாற்றம் என்பது உடல் நாற்றம் அல்ல. அது ஒருவரது உடல் வாசனை. மேலும் இது இயற்கையானது மற்றும் சாதாரணமானது என்று டாக்டர் டோலு கூறினார்.
4. தூக்கத்தில் ஜொள்ளு வடிதல்
ஒருவர் மிகுந்த உடல் அசதியுடன் தூங்கும் போது வாயில் இருந்து ஜொள்ளு வடிவது இயல்பானது என்று டாக்டர் கூறினார். சொல்லப்போனால் அது நமது முகத் தசைகள் வேகமாகச் செயல்படுகின்றன மற்றும் அது ஒரு ஆழமான மீட்பு முறையாகும்.
5. குளிரை தாங்க முடிவது
மற்றவர்களை போல் நீங்கள் குளிர்ச்சியாகவும், குளிராகவும் உணரவில்லையா? அப்படியானால் உங்களின் மெட்டபாலிசம் மற்றும் கொழுப்பை எரிக்கும் செயல்முறை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம் என்று டாக்டர் கூறினார்.
6. நாள் முழுவதும் சீரற்ற முறையில் பெருமூச்சு விடுவது
நீங்கள் நாள் முழுவதும் சீரற்ற முறையில் பெருமூச்சு விடுகிறீர்கள் என்றால், உங்கள் உடல் அதன் உள் மீட்டமைப்பு பட்டனை அழுத்தி ஆற்றல் மட்டங்களை நிரப்புகிறது என்பதன் அறிகுறி என்று டாக்டர் கூறினார்.
7. பசியின் போது வயிறு சப்தமிடுவது
பசி எடுக்கும் போது வயிற்றில் இருந்து சப்தம் கேட்டால், அது முற்றிலும் இயல்பானது. சொல்லப்போனால், அது நமது குடலின் சுத்திகரிப்பு சுழற்சி சிறப்பாக நடக்கிறது என்று டாக்டர் டோலு கூறினார்.
8. வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர்
சிறுநீர் தெளிவாக இல்லாமல், வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளிவருகிறதா? அப்படியானால் உங்கள் உடல் நீரேற்றத்துடன் சிறப்பாக உள்ளது என்று அர்த்தம் என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உங்கள் உடல் ஆரோக்கியமாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இவற்றைக் கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











