Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
வெயில் தாங்க முடியாமல் தலைவலி வருதா? உடனே இதை செய்யுங்கள்.. !
தலைவலி என்பது பலர் அன்றாடம் சமாளிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. இவை, இயல்பான பிரச்சனையாக இருந்தாலும், அவை உங்கள் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும். மனச்சோர்வு, உடல்சோர்வு, உணவு பழக்கம் போன்ற பலவித காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. பல வகையான தலைவலிகள் இருந்தாலும், டென்ஷனால் உண்டாகும் தலைவலி மிகவும் பொதுவானது.
தலைவலி என்றது, நம்மில் பலர் யோசிக்காமல் மாத்திரைகளை வாங்கி போடுவோம். அது வலியையும் குறைக்கும். ஆனால், அந்த நிலை தொடர்ந்தால் பல ஆபத்துக்கள் ஏற்படும். தலைவலியை போக்கும் சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கு காணலாம்.

அடிக்கடி தலைவலி வருவதற்கான முக்கிய காரணங்கள்:
உங்கள் உடலில் இரத்தத்தில் சிவப்பணு குறைவாக இருந்தால், அதாவது ஹூமோகுளோபின் குறைவாக இருந்தால், காலையில் எழுந்தவுடன் தலையில் வலியை உணரலாம். அதே நேரத்தில், உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தாலும் தலைவலியுடன் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம். எனவே அடிக்கடி காலை எழுந்த உடன் தலைவலி ஏற்பட்டால், ரத்த பிரிசோதனை செய்து கொள்வது நல்லது.
நீரிழப்பு
குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வருவதற்கு தண்ணீர் பற்றாக்குறையும் காரணமாக இருக்கலாம். போதிய அளவு தண்ணீர் குடிக்காததால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வரலாம் என்று சொல்லலாம்.
தூக்கமின்மை
தூக்கமின்மை காரணமாக காலையில் தலைவலியை உணரலாம். அதே சமயம், பலருக்கு மன அழுத்தம் காரணமாகவும், தலைவலி பிரச்சனை உள்ளது. இரவு ஷிப்டில் அதிகம் பணிபுரிபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலியை உணரலாம்.
சர்க்கரை அளவு
உங்கள் உடலில் சர்க்கரை அளவு அசாதாரணமாக இருந்தால், காலை தலைவலி ஏற்படலாம். இது சர்க்கரை அளவு தாறுமாறாக இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே, தினமும் காலையில் எழுந்ததும் தலைவலி இருந்தால், உங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.
தலைவலிக்கு உடனடி தீர்வு தரும் எளிய வீட்டு வைத்தியங்கள்:
1. பட்டையை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலி கணப்பொழுதில் மறைந்து போவதை உணரலாம்.
2. ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு சிறிது நேரம் வைத்திருப்பது, தலைவலியில் இருந்து சிறந்த நிவாரணத்தை கொடுக்கும்.
3. சில மூலிகைகள் வலி நிவாரணத்துக்கு பயன்படுகிறது. இஞ்சி தலைவலியில் நிவாரணம் அளிக்க உதவுகிறது. மேலும், சுக்கு பொடியை நீர் விட்டு குழைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகிவிடும்.
4. புதினா எண்ணெயை, நெற்றி மற்றும் தலையில் நன்றாக தேய்த்து கொண்டால் தலைவலிக்கு சிறந்த வலி நிவாரணியாக இருக்கும். இந்த எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இறுக்கமான தசைகளை தளர்த்தில், தலைவலிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.
5. மேலும், உடலில் தேவையான அளவு நீரில்லாத போது சூடேறி தலைவலி உண்டாகலாம். அதனால், தண்ணீரை குடிப்பதாலும் தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தலைவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற உதவும். இல்லையெனில், உடலை நிரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவும் இளநீர் மற்றும் பழச்சாறுகளை பருகுவதும் நல்ல பலன் தரும். ஏனென்றால், உடலில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் சில சமயங்களில் தலைவலி அல்லது தலை கணம் போன்ற உணர்வுகள் ஏற்படும்.
6. ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம்.
7. சிறிது இஞ்சி, சீரகம், தனியா ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்த தலைவலியில் இருந்து விடுபடலாம்.
8. தலைவலி இருக்கும் போது கழுத்து மற்றும் தலை பகுதியில் வெந்நீர் பையை கொண்டு ஒத்தடம் தருவது நல்ல பலனை கொடுக்கும். மேலும், வெதுவெதுப்பான நீர் கொண்டு தலைக்கு குளிப்பதும் தலைவலியில் இருந்து நிவாரணம் பெற உதவும்.
9. அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட ரோஸ்மேரி எண்ணெய் கொண்டு தலைக்கு மசாஜ் செய்ய, தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம். தலைக்கு மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெயுடன் ஒரு சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்ய தலைவலி மட்டும் அல்ல முடி உதிர்வும் குறையும்.
10. 3 சொட்டு மிளகுக்கீரை எண்ணெயுடன் ஒரு சொட்டு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நெற்றி மற்றும் கழுத்து பகுதியில் மசாஜ் செய்தால் தலைவலி படிப்படியாக குறையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications