Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
மட்டன் சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.. விஷத்திற்கு சமம்..!
நம்மில் பலர் அசைவம் சாப்பிட விரும்புபவர்கள். அதிலும் மட்டன் சாப்பிடாமல் யாரும் இருக்க மாட்டோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மட்டனைக் மிஸ் பண்ணாமல் சாப்பிடும் அசைவ பிரியர்கள் நிறையப்பேர் உள்ளனர். அப்படி மட்டனை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அது என்னென்ன உணவு பொருட்கள் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
மட்டன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது அல்லது இரண்டையும் சேர்த்துக் குடிப்பது வாயு, வீக்கம், அசௌகரியம், வயிற்று வலி, குமட்டல், அமில ரிஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏனென்றால், பால் மற்றும் இறைச்சி இரண்டும் புரதத்தின் ஆதாரங்கள் மற்றும் இரண்டையும் இணைப்பது செரிமான அமைப்பை மெதுவாக்குகிறது. அதனால் செரிமானத்தை பாதிக்கிறது மற்றும் அமில ரிஃப்ளக்ஸ்க்கு வழிவகுக்கும். இதைப் பற்றி நிபுணர்கள் கூறுவதை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்...

இப்போதெல்லாம் அசைவம் சாப்பிடுவதால் பலவிதமான நோய்கள் வருகின்றன. அதனால் மட்டன் சிக்கன் சாபிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது, குறிப்பாக கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், யூரிக் அமிலம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இறைச்சி உண்பதைக் குறைத்துள்ளனர்.
ஆனால் உணவுகளில் மட்டன் என்பது சாப்பாட்டுப் பிரியர்களுக்கு இன்னொரு சொர்க்கம். ஆமாம் மட்டனை விரும்பாதவர்கள் யாருமில்லை. ஆட்டிறைச்சி சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் பால் உட்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் இது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கி உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். பால் மற்றும் தயிர் நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், ஏனெனில் அதில் நிறைய ஆன்டி-பயாடிக் உள்ளது, மேலும் இது உங்கள் உடலை நேரடியாக பாதிக்கலாம். எனவே, ஆட்டிறைச்சி சாப்பிட்ட பிறகு பால் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
அடுத்தது மட்டனை சாப்பிட்டவுடன் தேன் சாப்பிடக்கூடாது.. ஏனெனில் இறைச்சி சாப்பிட்ட உடனே தேன் சாப்பிட்டாலும் உடல் சூடு பிடிக்கும். தேன் உங்கள் இதயம் மற்றும் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கிறது, எனவே நீங்கள் ஆட்டிறைச்சி சாப்பிட்ட பிறகு இதை சாப்பிடக்கூடாது.
பலர் சாப்பிட்ட பிறகு டீ குடிக்க விரும்புகிறார்கள், ஆனால் ஆட்டிறைச்சி சாப்பிட்ட பிறகு டீ குடிப்பது நல்லதல்ல. இது அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது. இது வாயு மற்றும் அமிலத்தன்மையை உருவாக்குகிறது, எனவே டீ போஸ்ட் ஆட்டிறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கவும்.
அத்துடன் மதிய உணவு சாப்பிட்ட உடனேயே படுக்கைக்குச் செல்பவர்கள் பலர் உள்ளனர், எனவே மக்கள் இதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் முக்கியமாக மட்டன் சாப்பிட்டவுடன் அதாவது அசைவம் சாப்பிட்டவுடன் துங்க செல்வது நல்லதல்ல என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications