Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
Diwali 2023: கம்பி மத்தாப்பு விடும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லன்னா பார்வை போயிடும்...
Diwali 2023: தீப ஒளித்திருநாளான தீபாவளி பண்டிகை வந்துவிட்டது. அனைவரும் வீட்டை தீபங்களால் அழகாக அலங்கரித்து, பட்டாசுகளை வெடித்து கோலாகலமாக கொண்டாட தயாராகிக் கொண்டிருப்போம். ஆனால் தீபாவளி நாளில் பட்டாசுக்களை வெடிக்கும் போது காயங்களும், விபத்துக்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தீபாவளி பட்டாசுக்களை வெடிக்கும் போது, அதிலிருந்து வெளிவரும் புகையால் சுவாச பிரச்சனைகளை ஒருசிலர் சந்திக்கும் அதே வேளையில், நிறைய பேர் கண்களிலும் பிரச்சனைகளை சந்திப்பதுண்டு.

முக்கியமாக கம்பி மத்தாப்பு விடும் போது, அதிலிருந்து வெளிவரும் தீப்பொறிகளால் நிறைய பேரின் கண்களில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பட்டாசு வெடிக்கும் போது கண்களில் பிரச்சனைகள் வராமல் இருக்க எந்த மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை இப்போது காண்போம்.
* முதலில் கண்களின் பாதுகாப்புக்காக கண்ணாடியை அணிய வேண்டும். கண்களில் கண்ணாடியை அணியும் போது, வெடி மற்றும் கம்பி மத்தாப்பு போன்றவற்றில் இருந்து வெளிவரும் தீப்பொறிகள் மற்றும் கெமிக்கல் லந்த புகைகளால் கண்களில் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படுகிறது.
* பட்டாசுகளை வெடிக்கும் போது கைகளால் கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். பட்டாசுகளில் ஏராளமான தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் அதிகமாக உள்ளன. எனவே பட்டாசுகளை தொட்ட பின் கைகளைக் கழுவாமல் கண்களைத் தொடும் போது, அதன் விளைவாக தீவிரமான அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
* குழந்தைகளுடன் பட்டாசுகளை வெடிக்கும் போது, பெற்றோர்கள் அவர்களுக்கு பாதுகாப்பான வழியில் பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும் என்பதை சரியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுவும் கம்பி மத்தாப்பு போன்றவற்றை பயன்படுத்தும் போது, அருகில் நீர் நிரப்பிய வாளியை வைத்துக் கொண்டு வெடிக்க வேண்டும். மேலும் கம்பி மத்தாப்பை பயன்படுத்திய பின் அவற்றை நீர் நிரப்பிய வாளியில் போட வேண்டும் என சொல்லிக் கொடுக்க வேண்டும். அதேப் போல் பெரிய பட்டாசுகளை வெடிக்கும் போது, நீளமான பத்தியைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் பட்டாசுகளை வெடிக்கும் போது தளர்வான காட்டன் ஆடைகளை அணிய வேண்டும் என்பதையும் சொல்லித் தர வேண்டும்.
* கம்பி மத்தாப்பு பெரிய தீங்கை ஏற்படுத்தாது தான். ஆனால் அவற்றை வெடிக்கும் போது கண்களுக்கு அருகில் வைத்து பிடிக்காமல், கைகளை நீட்டி தொலைவில் வைத்து வெடிக்க வேண்டும். மத்தாப்பின் தீப்பொறி கண்களில், அதுவும் கார்னியாவில் பட்டால், அதன் விளைவாக சில சமயங்களில் பார்வை போகவும் வாய்ப்புள்ளதால், மத்தாப்பு வெடிக்கும் போது கண்களுக்கு கண்ணாடியை அணிய சொல்லிக் கொடுங்கள்.
* முக்கியமாக முதலுதவி பெட்டியை அருகில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் விபத்து ஒருவருக்கு எப்போது நடக்கும் என்பதை நம்மால் கூற முடியாது. எனவே லூப்ரிகண்ட் ஐ ட்ராப்ஸ் மற்றும் ஜெல்களை அருகிலேயே வைத்திருங்கள். ஒருவேளை கண்களில் ஏதாவது பட்டுவிட்டால், உடனே குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவி, லூப்ரிகண்ட் ஐ ட்ராப்ஸை கண்களில் விட்டு, உடனே அருகில் உள்ள கண் மருத்துவரை அணுகுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications