Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
'டர்..டர்ன்னு' நீங்க பாம் போடுறது... உங்க உடல் எடையை குறைக்க உதவுமா? உண்மைய தெரிஞ்சிக்கோங்க!
ஃபார்ட்ஸ் சிறிய அளவு கந்தகத்தைக் கொண்டிருக்கலாம். அதனால்தான் வாயுவை வெளியேற்றும்போது துர்நாற்றமாக இருக்கும். சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 200 மில்லி லிட்டர் வாயுவை 10 அல்லது 20 ஃபார்ட்ஸ் மூலம் வெளியேற்றுவதாக ஆய
எடையை குறைப்பது என்பது மிகவும் சவாலான பணியாக உள்ளது. தற்போதைய சூழலில் உடல் பருமன் முக்கிய பிரச்சனையாக உள்ளது. உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இருப்பினும், அவை எந்தளவிற்கு பயன் தருகின்றன என்பது மிகவும் கேள்விகுறியாக உள்ளது. இன்றைய நவீன கால்கட்டத்தில் உடல் எடையை குறைக்கும் போது, இணையத்தில் ஆலோசனைகளுக்கு பஞ்சமில்லை. சரியான ஆதாரங்கள் இல்லாமல், அற்புதமான எடை இழப்பு முடிவுகளை பெறலாம் என உறுதியளிக்கும் புதிய போக்கை நீங்கள் நிறைய காணலாம்.

பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமான எடையை பராமரிப்பதில் சிரமப்படுவதால், அவர்கள் பெரும்பாலும் இந்த தவறான மோகங்களுக்குள் விழுகிறார்கள். இறுதியில் ஏமாற்றத்தைதான் பெறுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தை பிரபலமான ஒரு போக்கு எடையைக் குறைக்க உதவுமா? என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஃபார்டிங் மற்றும் எடை இழப்பு
இணையத்தில் பரவும் செய்திகளின்படி, ஃபார்டிங் ஒரு நேரத்தில் 67 கலோரிகளை எரிக்கும். அதாவது நீங்கள் ஒரு நாளைக்கு 52 முறை வாயுவை வெளியேற்றினால், ஒரு நாளில் 500 கிராம் எடையை எரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது சுவாரஸ்யமாகத் தெரிகிறது இல்லையா? இதை நீங்கள் முயற்சி செய்ய நினைக்கிறீர்களா? இது உண்மையா? இதற்கு அறிவியல் சான்றுகள் உள்ளனவா? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

உண்மை
வாயுவை வெளியேற்றுவதால் உடல் எடை குறையும் என்று கூறுவது முற்றிலும் கட்டுக்கதை. ஃபார்டிங் கலோரிகளை எரிக்க உதவுகிறது என்ற பிரபலமான கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அறிவியலின் படி, ஃபார்டிங் என்பது ஒரு செயலற்ற செயல் மற்றும் எந்த அளவு கலோரிகளையும் எரிக்க உதவாது.

ஃபார்டிங் கருத்தைப் புரிந்துகொள்வது
ஃபார்ட்ஸ் அல்லது ஃபார்டிங் என்பது அதிகப்படியான குடல் வாயுவை கடக்கும் செயல்முறை என்று குறிப்பிடப்படுகிறது. உங்கள் வயிறு அல்லது குடலில் அதிகப்படியான வாயு இருந்தால், அது வீக்கம் அல்லது வாயுவை ஏற்படுத்தும். வாயு உங்கள் ஆசனவாய் வழியாக உங்கள் உடலை விட்டு வெளியேறுகிறது. இந்த செயல்முறைக்கு வாயுவை வெளியேற்றுதல் மற்றும் ஃபார்டிங் என்று அழைக்கப்படுகிறது.

ஆய்வு கூறுவது
ஃபார்ட்ஸ் சிறிய அளவு கந்தகத்தைக் கொண்டிருக்கலாம். அதனால்தான் வாயுவை வெளியேற்றும்போது துர்நாற்றமாக இருக்கும். சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 200 மில்லி லிட்டர் வாயுவை 10 அல்லது 20 ஃபார்ட்ஸ் மூலம் வெளியேற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

துர்நாற்றத்திற்கு என்ன வழிவகுக்கிறது?
நீங்கள் சாப்பிடும் போது அல்லது வாயு நிறைந்த உணவை சாப்பிட்டால் அதிக காற்றை விழுங்கிய பிறகு நீங்கள் சங்கடமாக உணரலாம். உங்கள் பெருங்குடலில் பாக்டீரியாக்கள் குவிவதால், உணவை ஜுரணிக்க தொடர்ந்து வேலை செய்கிறது. பாக்டீரியாவால் உருவாகும் வாயு குடலிலிருந்து பர்பிங் மூலம் வெளியேறாதபோது, அது ஃபார்டிங் மூலம் வெளியேறுகிறது.

எடையில் மாற்றத்தை ஏற்படுத்தாது
ஒரு நபர் குடலிறக்கும்போது குடல் தசை தளர்கிறது மற்றும் உங்கள் குடலில் உள்ள அழுத்தம் எந்த முயற்சியும் இல்லாமல் வாயுவை வெளியேற்றுகிறது. இது ஒரு செயலற்ற செயல்முறையாகும். இது கலோரிகளை எரிக்க உதவாது. நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது மட்டுமே கலோரிகளை எரிக்க முடியும். ஆனால், நீங்கள் வாயுவை வெளியேற்றும்போது குறைந்த அளவு கொழுப்பை எரிக்க மட்டுமே உதவும். இது உங்கள் எடையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

இறுதிக்குறிப்பு
இதுதவிர, வலுக்கட்டாயமாக ஃபார்டிங் செய்வது ஆரோக்கியமான அல்லது சாதாரண விஷயம் அல்ல. அதேபோல, வாயுவை வெளியேற்றாமல் வயிற்றுக்குள்ளே அடக்கி வைத்திருப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வாயுவை வெளியேற்றுவது உடலுக்கு நல்லது.



Click it and Unblock the Notifications