Latest Updates
-
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா?
இந்த மூணு விஷயங்கள ஃபாலோ பண்ணா போதுமாம்... நீங்களே அசந்துபோற அளவுக்கு உங்க எடை வேகமா குறையுமாம்!
ஒவ்வொரு அசைவும் கணக்கிடப்படுகிறது. உடல் செயல்பாடு உங்கள் எடையை குறைக்க உதவுகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உங்கலாய் சோம்பேறியாகவும், கொடிய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை குறைவதால், எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நம் வாழ்வில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியதைத் தவிர, தொற்றுநோய் வேறு பல பிரச்சனைகளுக்கும் வழிவகுத்தது. நம் வாழ்க்கை முறை மற்றும் வாழ்வாதாரத்தையே சீர்குலைத்தது. கோவிட் 19 வழிவகுத்த மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று, இது நம் அனைவரையும் வீட்டினுள்ளே முடங்க செய்து உடல் எடையை அதிகரிக்க வழிவகுத்தது. கட்டுப்படுத்தப்பட்ட இயக்கங்கள் மற்றும் வீட்டில் வேலை செய்வதால், பெரும்பாலான மக்கள் தொற்றுநோய்களின் போது கூடுதல் எடையைப் பெற்றுள்ளனர். இந்த கூடுதல் எடையைக் குறைப்பது கடினமான காரியமாக இருக்கிறது.

உடல் எடை நம் உடலுக்கு பலவேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆதலால், தற்போது மக்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். உடல் எடையை குறைக்கும்போது, பெரும்பாலான மக்கள் உடல் வடிவம் பெறுவதில் கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் ஆரோக்கியமாக இருக்கவில்லை, இது பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. நீங்களும் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், ஆரோக்கியமாக எடை இழக்க நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள்
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மிக முக்கியமானதாகும். தண்ணீர் பெரும்பாலும் பசியுடன் குழப்பமடைகிறது. நீங்கள் அருந்தும் நீர் உங்கள் பசியைக் கட்டுப்படுத்தலாம். இதனால் போதுமான அளவு தண்ணீர் பருகுவது அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது. இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வானிலை, உங்கள் உடல் செயல்பாட்டு நிலை மற்றும் பல விஷயங்களைப் பொறுத்து தண்ணீர் உட்கொள்ளல் கூட அதிகரிக்கலாம்.

உங்கள் தினசரி உணவில் பழங்களைச் சேர்க்கவும்
எடை இழக்க முயற்சிக்கும் போது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது. பழங்கள் இயற்கையான சர்க்கரையைக் கொண்டுள்ளன. இது நாள் முழுவதும் பயணம் செய்ய உங்களுக்கு ஆற்றலை வழங்குகிறது. எனவே, உங்களை முழுமையாக வைத்துக்கொள்ளவும், உங்களுக்கு ஆற்றலை வழங்கவும் அதிகபட்சமாக பழங்களை உட்கொள்ளுங்கள். உங்கள் தினசரி உணவில் கண்டிப்பாக ஏதாவது ஒரு பழத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.

உடல் செயல்பாடு
ஒவ்வொரு அசைவும் கணக்கிடப்படுகிறது. உடல் செயல்பாடு உங்கள் எடையை குறைக்க உதவுகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உங்கலாய் சோம்பேறியாகவும், கொடிய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. நீங்கள் தினமும் ஒரு மணிநேரம் ஒரு பிரத்யேக வொர்க்அவுட்டைச் செய்தாலும், மற்றபடி சுறுசுறுப்பாக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. படிக்கட்டுகளில் ஏறுவது, சிறிய நடைப்பயிற்சி செல்வது அல்லது தொலைபேசியில் பேசும்போது நடைபயிற்சி செய்வது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவும்.

இறுதிகுறிப்பு
உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் இருக்கின்றனர். ஆனால், பொதுவாக உங்கள் உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவும் இன்றியமையாதது. இவற்றை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, உங்கள் உடல் எடை குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
