Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
இந்த டயட் எடை குறைப்பிற்கு மட்டுமின்றி உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும் தெரிய
அற்புத பலனளிக்கும் பல டயட் முறைகள் உள்ளது, அதில் முக்கியமான ஒன்றுதான் திரவ டயட் ஆகும். மற்ற டயட்டுகளை போல அல்லாமல் திரவ டயட் பக்கவிளைவுகள் இல்லாத பல நன்மைகளை வழங்கக்கூடியது.
டயட் கடைபிடிப்பது என்பது இன்றைய நவீன உலகத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில் மாறிவிட்ட வாழ்க்கை முறையாலும், உணவுப்பழக்கத்தாலும் உடல் பருமனால் பலரும் பாதிக்கப்படுகினறனர். அதனை குறைக்க டயட் கடைபிடிப்பது அவசியமானது ஆகும். தற்போது அற்புத பலனளிக்கும் பல டயட் முறைகள் உள்ளது, அதில் முக்கியமான ஒன்றுதான் திரவ டயட் ஆகும்.

மற்ற டயட்டுகளை போல அல்லாமல் திரவ டயட் பக்கவிளைவுகள் இல்லாத பல நன்மைகளை வழங்கக்கூடியது. உடல் எடையை குறைக்க, உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற, வளர்ச்சிதை மாற்றத்தைத் அதிகரிக்க இந்த டயட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல்நலம் பலவீனமானவர்களாக இருபவர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தலாம். திரவ டயட் பற்றி உங்களுக்குத் தெரியாத பல பயனுள்ள தகவல்களை இந்த பதிவை பார்க்கலாம்.

திரவ டயட் என்றால் என்ன?
இதன் பெயரில் குறிப்பிட்டுள்ளது போல திரவ டயட் என்பது குறிப்பிட்ட நாட்களுக்கு உங்கள் உணவில் திட உணவுகளை தவிர்ப்பதுதான். இந்த டயட் 3 நாள் முதல் தொடங்கி சில வாரங்கள் வரை கூட நீட்டிக்கலாம். பொதுவாக நாம் நாள் முழுவதும் திட உணவுகளைத்தான் உண்கிறோம், இது முழுவதையும் திரவ உணவுகளான ஜூஸ், காய்கறி மற்றும் எலும்பு சூப் போன்றவற்றை கொண்டு மாற்ற வேண்டும். ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்திற்காக மற்றும் அறுவை சிகிச்சை எதிர்கொள்பவர்கள் இந்த டயட்டை பின்பற்றுகிறார்கள். திரவ டயட்டால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

எடை குறைப்பு
பெரும்பாலான மக்கள் திரவ டயட்டை கடைபிடிக்க முதன்மையான குறிக்கோள் எடை குறைப்பு ஆகும். உங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரி அளவை வெகுவாகக் குறைப்பதன் மூலம், பெரும்பாலும் 50% க்கும் அதிகமாக நீங்கள் உடலில் கலோரி குறைபாட்டை உருக்கலாம். நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகள் விரைவில் எரிக்கப்பட வேண்டும். உங்கள் எடையை குறைப்பதற்கு இதுதான் முதன்மையான வழி ஆகும். சிலசமயம் திரவ டயட் மூலம் ஒருநாளைக்கு 1 பவுண்ட் வரை கூட குறைக்கலாம்.

வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்
உங்கள் உடலுக்கு கலோரிகள் மறுக்கப்படும்போது, ஆற்றலைச் சேமிக்க வளர்சிதை மாற்றம் குறையும், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது உங்கள் உடலை குறைக்கப்பட்ட கலோரிகளுடன் உங்கள் உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கும். துரதிர்ஷ்டவசமாக, டயட் முடிந்ததும் பலர் தங்கள் வளர்சிதை மாற்றம் விரைவாக அதிகரிப்பதாக தெரிவிக்கின்றனர், இதனால் இழந்த எடை திரும்புவதோடு வளர்சிதை மாற்றத்தின் முன்னேற்றமும் இழக்கப்படுகிறது.

நச்சுக்களை வெளியேற்றுகிறது
நாம் திட உணவுகளை உண்ணும்போது, உடல் நச்சுகளை அகற்ற வேலை செய்கிறது மற்றும் அந்த உணவுகளை கரைக்கும் முயற்சியை செய்கிறது. திரவ டயட்டில் உடலின் நச்சுத்தன்மையுள்ள உறுப்புகளில் அதிக கவனம் செலுத்துகிறது, இது அமைப்பை சுத்தப்படுத்தவும் உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் உதவுகிறது. அதிக திரவம் சிறுநீரகங்களையும் சிறுநீர்ப்பையையும் சுத்தப்படுத்த உதவுகிறது, மேலும் பெருங்குடல் மற்றும் செரிமானப் பாதைகளில் சேமிக்கப்பட்ட நச்சுகளை அகற்றும்.

உறுப்புகளின் செயல்பாடு
திரவ டயட்டின் போது காய்கறி மற்றும் பழச்சாறுகள் அவசியம், இது உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை வழங்கும். இது நரம்பு மண்டலம் உட்பட உங்கள் அனைத்து உறுப்பு அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

பக்க விளைவுகள்
திரவ டயட்டில் ஆபத்தான பக்க விளைவுகள் இல்லையென்றாலும் சில பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கிறது. திட உணவுகளை தவிர்த்து திரவ உணவுகளை உண்ணும்போது அதன் தோல்களை நீக்கி விடுகிறோம். இதனால் அதிலிருக்கும் நார்சத்துக்களை இழக்கிறோம். இதனால் உங்களுக்கு செரிமான சிக்கல்கள் ஏற்படலாம், மேலும் மலசிக்கல், வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. திரவ டயட்டின் போது உங்கள் உடல் தசைகள் பலவீனமடையும் வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications