Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
எடையை குறைக்க கீட்டோ டயட்டை பின்பற்றுபவரா? அப்போ ரிஸ்க் எடுக்காம இத படிச்சுட்டு முடிவெடுங்க…
அதிக கொழுப்பு மற்றும் குறைந்த கார்போ எனும் கீட்டோ டயட் முறையை பின்பற்றுவதில் பக்கவிளைவுகளும் உள்ளன என்பது எத்தனை பேருக்கு தெரியும். அவற்றில் முக்கியமான பக்கவிளைவு தான் முடி உதிர்வு.
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவரா நீங்கள்? அப்படியெனில் கீட்டோ டயட் பின்பற்றுபவரா? அப்படியெனில் மிகுந்த கவனம் தேவை. இப்போதெல்லாம், குறைந்த கார்போஹைட்ரேட், மிதமான புரதம் மற்றும் அதிகப்படியான கொழுப்பு நிறைந்த கீட்டோ டயட் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த கீட்டோ டயட் உடலை ஃபிட் ஆக வைக்கவும், வீக்கம் மற்றும் உடல் எடையை குறைத்திடவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திடவும் உதவக்கூடியது.

ஆனால், அதிக கொழுப்பு மற்றும் குறைந்த கார்போ எனும் கீட்டோ டயட் முறையை பின்பற்றுவதில் பக்கவிளைவுகளும் உள்ளன என்பது எத்தனை பேருக்கு தெரியும். அவற்றில் முக்கியமான பக்கவிளைவு தான் முடி உதிர்வு.

கீட்டோ ஏன் முடி உதிர்வை ஏற்படுத்துகிறது?
கீட்டோ டயட் உடலுக்கு தீங்கு மட்டுமே விளைவிக்கக் கூடியது அல்ல. இது உடல் எடை குறைப்புடன் அநேக நன்மைகளையும் வழங்கக்கூடியது. கீட்டோ டயட் பின்பற்றும் அனைவருக்குமே முடி உதிர்வு ஏற்படுவதில்லை. ஆனால், இந்த டயட்டை முறையாக பின்பற்றாதவர்களுக்கே முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.

மன அழுத்தம்
கீட்டோ டயட், உடலின் அன்றாட இயக்கத்தில் சற்று தடையை ஏற்படுத்தி மனஅழுத்தத்தை கொடுக்கலாம். ஒருவேளை, கீட்டோ டயட் இருக்கும் போது அதிகமாக காப்ஃபைன் உட்கொண்டால், சரியாக தூங்காமல் இருந்தால், சாப்பிடாமல் இருந்தால் பக்கவிளைவுகளை சந்தித்திட நேரிடும்.
இது போன்ற நிலை, உங்கள் அட்ரினலின் சுரப்பியை பாதித்தோ அல்லது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதித்தோ எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும். இதனால், முடி உதிர்வு ஏற்படலாம். எனவே, உங்கள் வாழ்க்கை முறையில் சிறிது மாற்றத்தை கொண்டு வாருங்கள். அதாவது, ஓர் நாளைக்கு ஒன்று அல்லது 2 கப் காபி மற்றும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் போன்றவற்றை முறையாக பின்பற்றினாலே பக்கவிளைவுகளை தவிர்த்திடலாம்.

போதுமான அளவு புரதம் இல்லாதது
கீட்டோ டயட்டில், மிதமான அளவு புரதம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், புரதப் பற்றாக்குறை முடி உதிர்வை ஏற்படுத்தக்கூடும் என்பது தெரியுமா உங்களுக்கு? இதனால், கீட்டோ டயட் இருப்பவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்த டயட் இருப்பவர்கள் போதுமான அளவு புரதம் எடுத்துக்கொள்ளாததே இதற்கு காரணம். புரதச்சத்து குறைவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம், இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாதது
ஒரு ஆய்வு, வைட்டமின் குறைபாடு மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துடன் கீட்டோ டயட்டின் தொடர்பை ஆராய்ந்து பார்த்தது. இந்த ஆய்வில் பங்கேற்பாளர்களுக்கு அமினோ அமிலங்கள் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டது. கார்ப் குறைவாக உண்ண வேண்டும் என்பதால், உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை பெற மாற்று வழியை யோசிக்க பலர் மறந்து விடுகின்றனர்.

வழக்கத்தை மாற்றுவது எப்படி?
கீட்டோ டயட் பின்பற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள், அதை பின்பற்ற தொடங்கிய 2 முதல் 3 மாதங்கள் கழித்து தான் முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கின்றனர். இதற்கு காரணம் மிகக் குறைந்த அளவிலான புரதம் உட்கொள்ளல் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் போன்றவையாக இருக்கலாம். எனவே, நீங்கள் கீட்டோ டயட் பின்பற்ற முடிவு செய்தால், ஒரு உணவியல் நிபுணரின் ஆலோசனையை பெற்ற பிறகு, எவ்வித உண்ணாவிமும் இல்லாமல் அதை முறையாக செய்யுங்கள். அப்போது தான் பக்கவிளைவற்ற பலனை பெற்றிட முடியும்.



Click it and Unblock the Notifications
