Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
வயிற்றில் உள்ள விடாப்பிடியான கொழுப்பைக் கரைக்கணுமா? அப்ப இத வெறும் வயித்துல குடிங்க...
நீங்கள் மிகப்பெரிய தொப்பையைக் கொண்டிருந்தால், உங்கள் தொப்பையைக் குறைக்க விரும்பினால், காலையில் எழுந்ததும் காபி, டீக்கு பதியாக வெறும் வயிற்றில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டீடாக்ஸ் பானங்களுள் ஒன்றை குடியுங்கள்.
Detox Water For Belly Fat: இன்று நிறைய பேர் தொப்பையால் அவதிப்படுகிறார்கள். ஒருவருக்கு தொப்பை வருவதற்கு காரணம் கொழுப்புக்களின் தேக்கம் தான். இந்த கொழுப்புக்களானது நாம் உண்ணும் உணவுகளால் தான் உடலினுள் தேங்குகின்றன. உடலில் தேங்கும் அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க கட்டாயம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

உடலில் தேங்கியுள்ள விடாப்பிடியான கொழுப்பைக் கரைக்க நிறைய உணவுகள் உதவி புரிகின்றன. அதேப் போல் தற்போது டீடாக்ஸ் பானம் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அதென்னா டீடாக்ஸ் பானம் என்று கேட்கலாம். டீடாக்ஸ் பானம் என்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பானமாகும். இந்த பானங்களை குடிப்பதன் மூலம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள விடாப்பிடியான கொழுப்புக்கள் கரையத் தொடங்கும்.
எனவே நீங்கள் மிகப்பெரிய தொப்பையைக் கொண்டிருந்தால், உங்கள் தொப்பையைக் குறைக்க விரும்பினால், காலையில் எழுந்ததும் காபி, டீக்கு பதியாக வெறும் வயிற்றில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டீடாக்ஸ் பானங்களுள் உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து தினமும் குடித்து வாருங்கள்.

1. கொத்தமல்லி நீர்
கொத்தமல்லி நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் இது ஒரு நேச்சுரல் டையூரிக்காக செயல்பட்டு, உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்ற செய்கிறது. மேலும் இது இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் மெட்டபாலிசத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.
தயாரிப்பது எப்படி?
* சிறிது கொத்தமல்லி மற்றும் புதினாவை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து 1 கப் நீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய இலைகளைப் போட்டு 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி குடிக்க வேண்டும்.

2. ஆப்பிள்-பட்டை நீர்
இது ஒரு அற்புதமான மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானம். மேலும் ஆப்பிள் மற்றும் பட்டயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், பல்வேறு வகையான தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
தயாரிப்பது எப்படி?
* 8 ஆப்பிள் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் 2 துண்டு பட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கண்ணாடி பாட்டிலில் நீரை நிரப்பி, அதில் ஆப்பிள் துண்டுகள் மற்றும் பட்டையைப் போட்டு மூடி, 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.
* இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதோடு மட்டுமின்றி, நாள் முழுவதும் சாதாரண நீருக்கு பதிலாகவும் குடிக்கலாம்.

3. வெள்ளரிக்காய்+புதினா+இஞ்சி+எலுமிச்சை
இந்த டீடாக்ஸ் பானத்தில் ஏராளமான சத்துக்களைக் கொண்ட வெள்ளரிக்காய், புதினா, இஞ்சி, எலுமிச்சை ஆகியவை இருப்பதால், இவை உடலினுள் அற்புதங்களை நிகழ்த்தும். குறிப்பாக இதில் உள்ள இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்றை சுத்தப்படுத்தும். எலுமிச்சை உடலை காரமாக்க உதவுகிறது மற்றும் புதினா உடலை சுத்தப்படுத்துகிறது.
தயாரிப்பது எப்படி?
* முதலில் புதினா இலைகள் மற்றும் நறுக்கிய இஞ்சி துண்டுகளை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு, ஸ்பூனால் லேசாக நசுக்கி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது வெள்ளரிக்காய் துண்டுகள் மற்றும் எலுமிச்சை துண்டுகளைப் போட்டு, அந்த ஜாரில் நீரை ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.

4. ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சை நீர்
ஸ்ட்ராபெர்ரி நல்ல சுவையைக் கொண்டதோடு, அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் என்பதால், அழற்சியைக் குறைக்கும் மற்றும் இன்சுலின் அளவைப் பராமரிக்க உதவும். அதேப் போல் எலுமிச்சை உடலினுள் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவி புரிகிறது. எனவே இவ்விரு பொருட்களையும் கொண்டு டீடாக்ஸ் பானம் தயாரித்து குடித்தால், உடலில் உள்ள கொழுப்புக்கள் வேகமாக கரையும்.
தயாரிப்பது எப்படி?
* முதலில் எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரியை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அவ்விரண்டையும் துண்டுகளாக்கிக் கொண்டு, கண்ணாடி ஜாரில் போட்டு, சிறிது புதினா இலைகளை சேர்த்து நீரை நிரப்பி, குறைந்தது 4 மணிநேரம் ஊற வைத்து, பின் பருக வேண்டும்.

5. சீரக நீர்
சீரக நீரை தினமும் சாதாரண நீருக்கு பதிலாக குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, உடல் சுத்தமாகும். மேலும் இந்த நீர் பசியைத் தூண்டும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்களை கரைக்கும்.
தயாரிப்பது எப்படி?
* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அந்நீரில் சிறிது சீரக விதைகளைப் போட்டு 3-4 நிமிடம் சூடேற்றி, பின் சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
* பின்பு நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த நீரை நாள் முழுவதும் சாதாரண நீருக்கு பதிலாக குடித்து வந்தால், இன்னமும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications