Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
நீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...!
நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் உங்களின் எடையை குறைக்க உதவாது, சொல்லப்போனால் சில தசைகளுக்கு சேதத்தைத்தான் ஏற்படுத்தும்.
நமது உடலமைப்பை சீராக பராமரிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமானதாகும். குறிப்பாக உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சிகள் தேவையானதாகும். ஆனால் அனைத்து உடற்பயிற்சிகளும் உங்களுக்கு நன்மையை வழங்கும் என்று கூற இயலாது. ஏனெனில் சில உடற்பயிற்சிகள் நன்மையை விட தீமையைத்தான் அதிகம் ஏற்படுத்தும்.

நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் உங்களின் எடையை குறைக்க உதவாது, சொல்லப்போனால் சில தசைகளுக்கு சேதத்தைத்தான் ஏற்படுத்தும். இந்த பதிவில் எந்தெந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு எடையை குறைக்க உதவாது என்று பார்க்கலாம்.

தலைக்கு பின்னால் லாத் இழுப்பது
இந்த பயிற்சியில், உங்கள் தலைக்கு மேல் தொங்கும் எடையுள்ள கேபிள் பட்டியைக் கொண்ட இயந்திரத்தில் அமர்ந்து கொண்டு இழுக்கிறீர்கள். இந்த பயிற்சியில் உங்கள் கழுத்தில் அடிபட அதிக வாய்ப்புள்ளது. மேலும் இதில் உங்கள் தோள்பட்டை அதிக சிரமத்திற்கு ஆளாகிறது. இதனால் அதன் நெகிழ்வுத்தன்மை பாதிக்கப்படும்.

மாற்றுவழி
இந்த உடற்பயிற்சிக்கு மாற்றாக அதே இயந்திரத்தில் சற்று சாய்ந்து உட்கார்ந்து சிறிய கம்பியை உங்களின் முன்புறமாக மார்பு வரை இழுக்கவும். உங்கள் தோள்பட்டைகளை கொண்டு இழுக்கவும் மாறாக கைகளை கொண்டு இழுக்காதீர்கள்.

க்ரஞ்சஸ்
க்ரஞ்சஸ் ஏன் இவ்வளவு எளிதாக இருக்கிறது என்று யோசித்துள்ளீர்களா? உடற்பயிற்சி நிபுணர்களின் கூற்றுப்படி இந்த பயிற்சி உங்கள் உடலின் மையத்தின் சிறுபகுதியை இறுக்கமாக்குமே தவிர உங்களின் வயிறை இறுக்கமாக்காது.

மாற்றுவழி
க்ரஞ்சஸ்க்கு பதிலாக பிளேன்க் உடற்பயிற்சியை செய்யவும். இது உங்களின் மார்பு பக்தியை இறுக்கமாக்கும். இதனை க்ரஞ்சஸால் வழங்க முடியாது.

பெல்ட் கட்டிக்கொண்டு எடை தூக்குவது
பெல்ட் கட்டிக்கொண்டு எடைகளை தூக்குவது உங்களின் தசைகளை தளர்வாக்குமே தவிர, நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளை வழங்காது. மாறாக இது உங்களின் தசைகளை பலவீனப்படுத்தும்.

மாற்றுவழி
நீங்கள் அதிக எடையை தூக்கினால் அதனால் உங்களுக்கு முதுகுவலியும், தசைபிறழ்வும் ஏற்படலாம். உங்களின் மருத்துவர்கள் பரிந்துரைக்காத வரை பெல்ட் அணிவதை தவிர்க்கவும்.

இருபுறமும் டம்பல் பிடித்து தூக்குதல்
உடற்பயிற்சி செய்யும்போது நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான். இதனால் உங்கள் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படும். மேலும் இது உங்களின் தசைகள் மற்றும் நரம்புகளின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி பலவீனத்தை ஏற்படுத்தும்.

மாற்றுவழி
இந்த உடற்பயிற்சிக்கு பதிலாக புஷ்அப்ஸ் எடுக்கவும். இது உங்கள் கைகளையும், தோள்பட்டைகளையும் வலுப்படுத்தும். இரண்டு புறமும் டம்பல் தூக்குவது நீங்கள் இதனை அடைவதற்காகத்தான். ஆனால் புஸ்அப்ஸ் மூலம் நீங்கள் இதை எளிதில் பெறலாம்.

கால் உடற்பயிற்சிகள்
இந்த உடற்பயிற்சி உண்மையில் உங்கள் கால்களை உங்கள் மார்பை நோக்கி இழுக்கும்போது அவற்றை அதிகமாக வளைப்பதன் மூலம் உங்கள் கால்களில் அதிக சிரமத்தை ஏற்படுத்தும். உங்கள் முதுகெலும்பு சரியாக சீரமைக்கப்படாது, உங்கள் இடுப்பு ஈடுசெய்ய முயற்சிக்கிறது, இது உங்கள் கீழ் முதுகில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது உங்களுக்கு முட்டி வலியை ஏற்படுத்தலாம்.

மாற்றுவழி
இந்த உடற்பயிற்சிக்கு பதிலாக ஸ்குவாட்ஸ் பயிற்சியை செய்யலாம். இது உங்களின் எடையை பராமரிப்பதுடன் உங்களின் தசைகளுக்கு பாதுகாப்பையும் வழங்கும்.



Click it and Unblock the Notifications
