Latest Updates
-
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
வெறும் 14 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வெள்ளை வெண்ணெய்..! எப்படி வீட்டிலே தயாரிப்பது?
சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் தலை விரித்து ஆடினாலும் நமது உடல் சார்ந்த பிரச்சினை எப்போதுமே அதை விட ஒரு படி மேலே தான் உள்ளது. நேற்று ஒரு நோய் வந்தால், இன்று புதிதாக வேறொரு நோய் வருகிறது. பெரும்பாலானோர் இதனால் மிக பெரிய அளவில் பாதிக்கவும் செய்கின்றனர்.

பல உடல் சார்ந்த பிரச்சினைகளில் தற்போது முதன்மையானதாக கருதப்படுவது உடல் பருமன் தான். எதை சாப்பிட்டாலும் உடல் எடை கூடி கொண்டே போகிறதே என ஒரு கூட்டமே அலறுகிறது. இதற்கு முற்றுப்புள்ளியை பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆயுர்வேதத்தில் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அவற்றில் ஒன்று தான் வெள்ளை வெண்ணெய் முறை. வீட்டிலே தயாரிக்க கூடிய வெள்ளை வெண்ணெயை வைத்து உடல் எடையை 14 நாட்களிலே குறைக்கலாம். இது எப்படி சாத்தியம் ஆகும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வெண்ணெய்
பொதுவாக பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டால் உடல் பருமன் கூடும் என்கிற கருத்து நிலவி வருகிறது. ஆனால், அது அப்படி கிடையாது. பாலில் இருந்து எடுக்கப்படும் எல்லா பொருட்களும் உடல் எடை கூட செய்வதில்லை.
குறிப்பாக வெள்ளை வெண்ணெய் உடல் எடையை குறைக்க தான் வழி செய்கிறதே தவிர, கூட்டுவது இல்லை.

வித்தியாசம் என்ன?
வெண்ணெய் வெறும் மஞ்சள் நிறத்தில் மட்டும் தான் இருக்கும் என பலர் கருதுகின்றனர். ஆனால், இது வெள்ளை நிறத்திலும் உள்ளது என்பதே சிறப்பான விஷயம்.
மஞ்சள் நிறத்தில் இருக்க கூடிய வெண்ணெய்யில் அதிக அளவு கொழுப்புகள், உப்பு, சர்க்கரை நிறைந்திருக்கும். அதுவே வெள்ளை நிற வெண்ணெய்யில் வைட்டமின் டி, எ, ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படும்.

ஆராய்ச்சி
வெள்ளை வெண்ணெய்யை பற்றிய ஆய்வில் தான் சில தக்வல்கள் வெளி வந்தன. லெசித்தின் என்கிற முக்கிய மூல பொருள் வெள்ளை வெண்ணெய்யில் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் பருமனை குறைக்க உதவுமாம். ஆனால், இது மஞ்சள் நிற வெண்ணெயினால் சாத்தியம் ஆகாது எனவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

கலோரிகள் எவ்வளவு?
உடல் எடையை குறைப்பதற்கு வெள்ளை வெண்ணெய் சிறந்தது என்பதற்ககன் சான்று இதன் கலோரிகள் தான். கடைகளில் கிடைக்க கூடிய வெண்ணெய்கள் முழுக்க முழுக்க உடல் எடையை கூட்டி விடும்.
ஆனால், வீட்டிலே தயாரிக்கப்படும் இந்த வெள்ளை வெண்ணெய்யில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளது. ஆதலால், விரைவிலே எடையை குறைத்து விடும்.

பசியை கட்டுப்படுத்த...
இதில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் பசியை தூண்டி விடாது. ஆதலால், எப்போதுமே சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிற மன நிலையும் மாறும். இதுவே உடல் பருமனை தடுக்கும் முக்கிய காரணியும் கூட.

கொலஸ்ட்ரால்
வெள்ளை வெண்ணெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டால் கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். இதனால் இதய நோய்கள் தடுக்கப்படும். கூடவே இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் இது குறைக்க வழி செய்கிறது.

தயாரிப்பு எப்படி?
வெள்ளை வெண்ணெய்யை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நம்மால் தயாரிக்க முடியும். இதற்கு தேவையான பொருட்கள்...
பால் 2 லிட்டர்
தயிர் அல்லது யோகர்ட் 1 டேபிள்ஸ்பூன்

தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சி கொள்ளவும். அதன் பின் இதை இறக்கி வைத்து, ஆறிய பின்னர் ஃபிரிட்ஜில் ஒரு நாள் முழுக்க இருக்க வேண்டும்.
அடுத்த நாள் இதன் மேல் வெள்ளை நிறத்தில் படிந்துள்ளவற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

தயாரிக்கும் முறை
பிறகு இவற்றுடன் தயிரை கலந்து நன்றாக கலக்கி கொள்ளவும். இதை ஒரு நாள் இரவு முழுவதும் வெது வெதுப்பான இடத்தில் அப்படியே வைக்கவும். மறுநாள் இதை நன்றாக கடைந்து எடுத்தால், வெள்ளை வெண்ணெய்யை கிடைக்கும்.
இதை சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
