Latest Updates
-
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்!
தினமும் அரை கைப்பிடி பிஸ்தா சாப்பிட்டால் உடல் எடையை சில வாரங்களிலே குறைக்கலாம்!
ஒரு சில உணவுகளுக்கு மட்டுமே சில தனித்தன்மைகள் இருக்கும். காரணம் இந்த வகை உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் போன்ற பருப்பு வகைகளை கூறலாம். இவற்றில் உள்ள சத்துக்கள் தான் உடலின் எதிர்ப்பு சக்தியை கூட்டி, நோய்கள் இல்லாமல் வைக்கிறது.

அத்துடன் உடல் எடை, அதிக கொலஸ்ட்ரால், தொப்பை போன்ற பிரச்சினைகளுக்கும் இவை தீர்வை தருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வெறும் பிஸ்தாவை வைத்தே உடல் எடையை குறைத்து விடலாம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
அத்துடன் மேலும் சில உடல்நல கோளாறுகளையும் பிஸ்தாவால் கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இது எப்படி சாத்தியமாகும் என்பதையும், தினமும் அரை கைப்பிடி பிஸ்தா சாப்பிட்டால் என்ன விதமான நன்மைகள் கிடைக்கும் என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சுவையும் ஆரோக்கியமும்!
எல்லா வகை உணவுகளிலும் சுவையும் ஆரோக்கியமும் நிரம்பி இருக்காது. ஒரு சில உணவுகளில் மட்டுமே இவை இரண்டும் நிரம்பி இருக்கும்.
அந்த வகையில் பிஸ்தா முதன்மையான உணவாகவே உள்ளது. பிஸ்தாவை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலில் எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகும்.

ஆராய்ச்சி
"அமெரிக்கன் காலேஜ் ஆப்ஃ நியூட்ரிஷன்" என்கிற கல்லூரி, பிஸ்தாவை பற்றி ஆய்வு செய்ததில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகளும், அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர்.
இதன் முடிவில், பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவோருக்கு உடலில் சீரான மாற்றங்கள் உண்டாகும் என்றும், உடல் எடை குறையும் என்றும் கண்டறிய பட்டுள்ளது.

உடல் எடை
பிஸ்தாவை தினமும் 2 வேளையாக பிரித்து சாப்பிட்டு வருவதன் மூலமாக உடல் எடையை மிக வேகமாக குறைக்கலாம் என இந்த ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவற்றை சாப்பிடுவதால் இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இருக்கும். இதனால் மிகவும் சுறுசுறுப்புடன் நீங்கள் செயல்படுவீர்கள்.

பிரித்து சாப்பிடவும்..!
பிஸ்தாவை ஒரு நாளைக்கு அப்படியே முழுவதுமாக சாப்பிடுவதை விட அதை காலை மற்றும் மதிய வேளையில் 20 முதல் 25 வரை சாப்பிடலாம். மேலும், மாலை நேரத்தில் அதே போன்று 20 முதல் 25 வரை சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

காரணம் ?
நாம் இது போன்று சாப்பிடுவதால் நமக்கு அடிக்கடி பசி எடுப்பது தடுக்கப்படும். மேலும், நொறுக்கு தீனிகளை இதனால் தவிர்க்க தொடங்குவோம். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும். நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும். ஆகவே உடல் எடையும் மிக விரைவிலே குறையும்.

12 வாரங்கள்!
ஒரு ஆய்வில் பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 12 வாரங்களிலே உடல் பருமன் குறைந்து விடும் என கண்டறிந்துள்ளனர். சாதாரண பிஸ்தாவினால் இவ்வளவு நன்மைகளை நம் உடலுக்கு செய்ய முடியுமா என்பதே ஆச்சரியத்திற்குரிய விஷயம் தான்.

ஊட்டச்சத்துக்கள்
அரை கப் பிஸ்தாவில் 170 கலோரிகள், 6 கிராம் புரதசத்து, 3 கிராம் நார்சத்தது, வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, ஒமேகா 3,6 கொழுப்பு அமிலங்கள், இரும்புசத்து, பாஸ்பரஸ், காப்பர்...இப்படி பலவித ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் நிறைந்து காணப்படுகிறது.

இதய நோய்கள்
பிஸ்தாவை சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு உடலில் சீராக இருக்கும். மிக முக்கியமாக இதயத்தை பலப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். வயிற்று பகுதியில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்கவும் இது உதவும்.
ஆகையால் தினமும் அரை கைப்பிடி பிஸ்தா சாப்பிடுவதில் தவறில்லை. நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரையை கேட்டு கொண்டு சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications