Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
ரெண்டே வாரத்தில் 10 கிலோ எடையை குறைக்கும் செலவில்லாத பானம்... வீட்லயே செய்யலாம்
இரண்டே வாரத்தில் 10 கிலோ வரையிலும் எடையைக் குறைக்கின்ற அற்புத பானத்தை வீட்டில் செய்யும் முறையை இங்கே குறிப்பிட்டுள்ளோம். படித்து பயன்பெறுங்கள்.
உடல் பருமன் என்பது இந்த காலத்தில் மிகப்பெரிய பிரச்னையான உருவெடுத்துவிட்டது. இந்த எடையைக் குறைக்க ஏன் எல்லோரும் படாத பாடு படுகிறார்கள் உடல் பருமன் உடலில் தோன்றும் மற்ற எல்லா வகையான வியாதிகளுக்கும் அடிப்படையாக இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக, உலகையே அச்சுறுத்துகின்ற, பரவலாக எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நோயான சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு உண்டாவதற்கு மிக மிக அடிப்படையாக இருப்பது இந்த உடலில் தேங்கும் கொழுப்புகள் தான்.

கொழுப்பை கரைத்தல்
அவற்றை அறுவை சிகிச்சை என தேவையில்லாத விபரீத விளையாட்டுக்கள் மூலம் குறைப்பது, மற்றும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு உணவுகளையும் சாப்பிடுவதைத் தடுப்பதை விட்டுவிட்டு, ஆரோக்கியமான முறையில் எளிமையாக வீட்டிலேயே உடலில் கொழுப்பு தங்ககாமல் இருக்க சில வழிமுறைகள் உண்டு. அதில் மிக முக்கியமான ஒன்று தான் கீழ்வரும் அருமையான பானம். அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

கொழுப்பை கரைக்கும் பானம்
தேவையான பொருள்கள் -
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
தேன் - 4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
செய்முறை
ஒரு லிட்டரில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடி, 4 ஸ்பூன் தேன் மற்றும் அதனுடன் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறினைக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தாகம் எடுக்கும்போதெல்லாம் நாள் முழுக்க எப்போதும் இதை குடித்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் தண்ணீரும் குடிக்கலாம்.

மிளகாய்ப்பொடி
மிளகாய்ப் பொடி யாராவது கலந்து குடிப்பார்களா என்று நீங்கள் கேட்கலாம். நாம் கலப்பதோ மிகக்குறைந்த அளவு தான். ஆனால் இந்த மிளகாய்ப் பொடி நம்முடைய மெட்டபாலிசத்தைத் தூண்டி, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. அதனால் இயல்பாகவே நம்முடைய கொழுப்பு தேங்காமல் கரையத் தொடங்குகிறது.

எலுமிச்சையும் தேனும்
தேன் கொழுப்பை உடலில் எங்கும் தங்க விடாமல் பார்த்துக் கொள்கிறது. எலுமிச்சையில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளதால், அது உடலுக்குள் தேங்குகின்ற கொழுப்பினை வெளியேற்றுகிறது.

என்ன செய்யும்?
இந்த பானமானது நம்முடைய உடலில் நச்சுக்கள் மற்றும் அழுக்குகளைச் சேர விடாமல் வெளியேற்றும். உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றுவதோடு மட்டுமில்லாமல், உடலில் தேங்கும் அதிகப்படியான கொழுப்பையும் இயற்கையான முறையில் எரித்து விடுகிறது.

பிற நன்மைகள்
இந்த பானம் வெறுமனே கொழுப்பை மட்டும் கரைப்பதில்லை. இதன்மூலம் வேறு சில நன்மைகளும் இருக்கின்றன.
உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஜீரண சக்தியைத் தூண்டுகிறது.
உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சக்தியைக் கொடுக்கிறது.
கல்லீரலை பாதுகாக்கிறது.
சுவாசப் பிரச்னைகளை சரிசெய்கிறது.
உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றுகிறது.
சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்துகிறது.
தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சரிசெய்கிறது.

எவ்வளவு நாள் குடிக்கலாம்?
இந்த பானத்தை இரண்டு வாரங்கள் குடித்து வந்தாலே நல்ல மாற்றத்தை உணர முடியும். அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு மேல் இந்த பானத்தைத் தொடர்ந்து குடிக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications
