Latest Updates
-
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
காலை வெறும் வயிற்றில் பிளாக் காபி குடித்தால் எடை வேகமாக குறைக்கலாம்... வேறு என்னவெலாம் குடிக்கலாம்
இங்கே இயற்கையான முறையில், குறிப்பாக பானங்களை வைத்து எப்படி எடையைக் குறைக்கலாம் என குறிப்பிட்டுள்ளோம். படித்துப் பயன்பெறுங்கள்.
எவ்வளவு கண்ட்ரோலா இருந்தாலும் வெயிட் மட்டும் கூடிக்கிட்டே போகுதுன்னு கவலைப்பட்டு இருக்கீங்களா? இல்ல வெயிட் கூடக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா? என்று யாராவது உங்களிடம் கேட்டால், நிச்சயம் உங்கள் எல்லோருடைய பதிலும் ஆம் என்பதாகத் தான் இருக்கும்.

ஆனா நீங்க கவலைப்படவே வேண்டாம். கீழே கொடுக்கப்படும் சின்ன சின்ன பானங்கள் குடிங்க. அது உங்களுடைய கலோரிகளைக் குறைக்கும். அப்படி என்னென்ன பானங்களைக் குடித்தால் எடையை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும் என்று பார்ப்போம்

தண்ணீர்
நம்முடைய உடலுக்குத் தேவையான ஆரோக்கிய பானம் என்றாலே அதில் முதல் இடம் தண்ணீருக்குத் தான். நிறைய தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். தண்ணீர் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கவே அதை ஒரு சுமையாகக் கருதி நாம் செய்யத் தவறுகிறோம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஒரு நாளைக்கு அதாவது 24 மணி நேரத்துக்கு நம்முடைய உடலுக்கு கிட்டதட்ட 7 முதல் 8 லிட்டர் வரையிலும் தண்ணீர் தேவைப்படுகிறதாம். அதில் நாம் எடுத்துக் கொள்ளும் மற்ற திரவ உணவுகளும் சேர்த்தே அடங்குகிறது.

கிரீன் டீ
கிரீன் டீ எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை விடவும் கிரீன் குடிப்பது மிகப்பெரிய ராயலான விஷயமாகக் கருதப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை தான் கிரீன் டீ குடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. நாளைக்கு 3 முதல் 5 கப் வரை குடிக்கலாம். ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கப் வரை கிரீன் டீ குடித்தால், கிட்டதட்ட 35 முதல் 43 சதவீதம் வரை உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் குறையும்.

ஜூஸ்
ஜூஸ் என்றதும் எப்போதும் நாம் யோசிப்பது வெறும் பழச்சாறுகள் மட்டும் தான். ஆனால் உடல் எடை இழப்பைப் பொருத்தவரை உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் வெஜிடபிள் ஜூஸ் தான். ஆம். பழச்சாறுகளை விடவும் வெஜிடபிள் ஜூஸில் இன்னும் நிறைய நன்மைகளும் நார்ச்சத்துக்களும் அதிகம். சர்க்கரைச் சத்து குறைவு. அதனால் உடல் எடை குறைப்பினில் மிகப் பெரிய இடத்தை வெஜிடபிள் ஜூஸ் பெறுகிறது. உங்களுடைய வழக்கமான உணவுகளுக்கு முன்பாக, ஒரு டம்ளர் வெஜிடபிள் ஜூஸ் குடித்து வந்தால், கிட்டதட்ட 135 கலோரிகள் வரை கரைக்க முடியும்.

இளநீர்
இளநீர் என்பது நம்முடைய உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்டுகளைத் தருகின்றது. பழச்சாறுகளில் எலக்ட்ரோலைட்டுகள் கிடைத்தாலும் அதைவிட இளநீரில் மிக அதிகமாகவே இருக்கிறது. இதில் தான் அதிகப்படியான சர்க்கரை இருக்காது. மற்றொரு முக்கியமான விஷயம் இளநீரில் மற்ற பானங்களைப் போல செயற்கை நிறமூட்டி, சுவையூட்டி என எதையும் இளநீரில் கலப்படம் செய்யவே முடியாது. இளநீர் இயற்கையாகவே நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்துகின்றது. உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதனால் இயல்பாகவே எடையைக் கூட்டாமல் உடலைச் சிக்கென்று வைத்துக் கொள்ளும்.

பிளாக் காபி
காபி என்ற வார்த்தையைக் கேட்டவுடனே தாவிக்கொண்டு ஓடாதீர்கள். காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக பிளாக் காபி குடித்தால் உங்களால் மிகச்சிறந்த மாற்றத்தைக் காண முடியும். அதோடு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் காக்கவும் பிளாக் டீ உதவி புரிகிறது. அதனால் பிளாக் காபி மூலமாகவே உடல் எடையைக் குறைக்க முடியும். ஆனால் ஒரு நாளைக்கு 1-2 கப்புக்கு மேல் குடிக்க வேண்டாம்.

தேயிலை
மலை பிரதேசங்களில் இருப்பவர்கள் இதை எளிதாக செய்ய முடியும். பொடி செய்த டீயைப் பயன்படுத்தாமல் தேயிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்து வரலாம். இது சருமத்தின் ரேடிக்கல் டேமேஜைத் தடுக்கும். வயதான தோற்றம் உண்டாகாமல் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.



Click it and Unblock the Notifications