For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நைட் ஷிஃப்ட் வேலைக்கு போறவரா நீங்க? இதோ உங்களுக்கான ஆயுர்வேத டயட் டிப்ஸ்கள்

|

கம்ப்யூட்டரும், தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்த இந்த நவீன காலத்தில் இரவு நேரத்தில் பணிபுரியும் வேலைகளும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. இரவு நேரங்களில் பணி புரிவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

காரணம் நமது ஒட்டுமொத்த உடற் செயல்களையும் நாம் மாற்றப் போகிறோம். தூங்க வேண்டிய நேரத்தில் கண்களுக்கு ஒய்வு கொடுக்காமல் வேலை செய்ய வைக்க வேண்டும். இதனால் நமக்கு போக போக வேலையில் மன அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சினைகளையும் நாம் சந்திக்க வேண்டியதாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நைட் ஷிஃப்ட் வேலை

நைட் ஷிஃப்ட் வேலை

எனவே இரவு நேரங்களில் பணி புரியும் நபராக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக உங்கள் உணவுப் பழக்கத்திலும், தூக்கத்திலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். போதுமான உணவு போதுமான தூக்கம் இவை இரண்டும் தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இரவு நேரங்களில் பணிபுரியும் நபர்கள் பகல் நேரங்களில் பணி புரியும் நபர்களை விட அதிக உடல் எடையை கொண்டுள்ளனர் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை சரி செய்யவே ஆயுர்வேத முறை உங்களுக்கு சில ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பற்றி கூறுகிறது. சரி வாங்க அதைப் பற்றி பார்க்கலாம்.

MOST READ: வேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க... சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது...

இரவு உணவில் தொடங்குங்கள்

இரவு உணவில் தொடங்குங்கள்

பெரும்பாலான நபர்களின் காலை வேளை காலை உணவில் தான் தொடங்கும். ஆனால் இரவில் பணி புரியும் நபர்களுக்கு மட்டும் இது விதி விலக்கு தான். உங்களுடைய நாள் இரவு 7 மணிக்கு ஆரம்பிக்குது என்றால் இரவு 7.30 - 8 மணி என்ற இடைவெளியில் தவறாமல் இரவு உணவை எடுத்து விடுங்கள். வேலை காரணமாக நடு இரவில் உங்கள் இரவு உணவை உட்கொள்ளாதீர்கள். அதே மாதிரி உங்கள் நாள் மாலை 4 அல்லது 5 மணிக்கு ஆரம்பித்து காலை 1-2 மணிக்கு முடிகிறது என்றால் உங்கள் மாலை நேர சிற்றுண்டியை இரவு 8 மணிக்குள் எடுத்து கொள்ளுங்கள். இப்படி உங்கள் உணவு நேரத்தை எடுத்துக் கொள்ளும் உங்கள் உடல் மெட்டா பாலிசமும் ஆரோக்கியமாக செயல்படும்.

லைட்டான இரவு உணவு

லைட்டான இரவு உணவு

நிறைய மக்கள் தங்கள் இரவு உணவை முடித்தவுடன் சற்று தூக்க களைப்பை உணர்வார்கள். எனவே இந்த மாதிரி அதிகமான உணவை எடுத்துக் கொள்ளலாமல் சற்று லைட்டான உணவுகளான காய்கறிகள் உடன் ப்ரவுன் ரைஸ், பருப்பு, க்ரில்டு சிக்கன், ஸ்டீவ் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். அதே மாதிரி புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். இந்த உணவுகள் உங்களுக்கு நீண்ட நேரம் பசிக்காமல் இருக்கவும் அதே நேரத்தில் தூக்கம் வராமல் இருக்கவும் உதவும்.

MOST READ: இதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு? அது ஏன் தெரியுமா?

1 டீ ஸ்பூன் நெய்

1 டீ ஸ்பூன் நெய்

ஆயர் வேத கருத்துப்படி இரவு நேரத்தில் நமது உடல் வறண்டு போகுமாம். எனவே 1 டீ ஸ்பூன் நெய் எடுத்து கொள்ளும் போது உடல் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

எண்ணெய் உணவுகள் வேண்டாம்

எண்ணெய் உணவுகள் வேண்டாம்

எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உணவுகள் உங்களுக்கு வயிறு உப்புசத்தை தருவதோடு உடல் எடை அதிகரிக்கவும் செய்து விடும். ஏற்கனவே இரவு நேரமானது சீரண மண்டலம் ஓய்வெடுக்கும் நேரம். இதனால் இந்த மாதிரியான உணவு சீரண மாகவும் கஷ்டப்படும். இந்த ஆரோக்கியமற்ற உணவுகள் உங்களுக்கு நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை பிரச்சினை ஏற்படுத்தி விடும் என்கிறது ஆயர்வேதம்.

MOST READ: உட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது? வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

நட்ஸ் சாப்பிடுங்கள்

நட்ஸ் சாப்பிடுங்கள்

உங்களுக்கு இதையும் மீறி வயிறு பசித்தால் ஆரோக்கியமான உணவுகளான வறுத்த கொண்டைக்கடலை, பாதாம் பருப்பு, தாமரை விதை ப்ரை போன்றவற்றை பர்கர், பீட்சா, சமோசாவிற்கு பதிலாக எடுத்து கொள்ளுங்கள். இது நிறைய நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தடுக்கும்.

காஃபைன் அதிகம் பருகாதீர்கள்

காஃபைன் அதிகம் பருகாதீர்கள்

இரவு நேரத்தில் தூங்காமல் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அதிகளவு டீ, காபி பருகுகிறீர்கள்.இது கண்டிப்பாக நன்மை அளிப்பதை விட தீமை தான் அளிக்கும். உங்களுக்கு தூக்கம் வந்தால் உங்கள் உடம்பை நீர்ச்சத்து டன் வைத்துக் கொள்ளுங்கள். தூக்கம் பறந்து போய் விடும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணியோ அல்லது பழச்சாறையோ குடியுங்கள். தூங்காமல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அப்புறம் உங்கள் வேலையில் நீங்களும் கெட்டிக்காரர் தான் .

MOST READ: உங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா? கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...

டிப்ஸ்கள்

டிப்ஸ்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் ஜூஸ்

சீசன் வகை பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து கொள்ளலாம்

முழுதானிய பிரட் உடன் ஹ்ம்மஸ்

உலர்ந்த தானியங்கள், தானிய வகை சாலட்டான :தென் ஆப்பிரிக்கா கஞ்சி, கீன்வா, கோதுமை மற்றும் பார்லி.

உலர்ந்த நட்ஸ் வகைகள்

உலர்ந்த பழங்களின் கலவை

கொழுப்பு குறைந்த பழ ஷேக்ஸ்கள்

காட்டேஜ் சீஸ்

அவித்த முட்டை சாலட் உடன் காய்கறிகள்

காய்கறிகள் கலந்த குறைந்த கொழுப்புள்ள சிக்கன் அல்லது மீன் சான்ட்விட்ச் மற்றும்

பீன்ஸ் மற்றும் முளைக்கட்டிய பயிறு வகைகள்

யோகார்ட்.

மேற்கண்ட உணவு முறைகள் இரவில் பணி புரிபவர்களுக்கு பயனாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 Ayurvedic Diet Tips And Healthy Eating Options For Night Shift Workers

Ayurveda has laid down a few healthy diet tips for night shift workers that will help them maintain a healthy life.
Story first published: Saturday, October 13, 2018, 13:20 [IST]