பெருங்குடல் புற்று நோயை தடுக்கும் புதுவிதமான டயட் பற்றித் தெரியுமா?

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

மத்திய தரைக்கடல் உணவுமுறை அல்லது மெடிடேரனியன் டயட்டில் அதிகமான பழங்கள் மற்றும் மீன்கள் சாப்பிடுவதால் சோடா பானங்கள் குடிப்பது குறைகிறது. இதனால் பெருங்குடல் புற்று நோய் வருவது 86 சதவீதம் தடுக்கப்படுகிறது என்று ஆய்வறிக்கை ஒன்றில் படித்ததிலிருந்து தெரிய வந்துள்ளது.

100 வயது ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? அப்ப இந்த பண்டையக் கால டயட்டை ஃபாலோ பண்ணுங்க!

பெருங்குடல் புற்று நோயானது குடல் பாலிப்ஸ் ஆல் வருகிறது. இதற்கு காரணம் குறைவான நார்ச்சத்து உணவுகளான சிவப்பு இறைச்சி, ஆல்கஹால் மற்றும் அதிக கலோரிகளை கொண்ட உணவுகள் போன்றவற்றால் ஏற்படுகிறது.

This One Diet Cuts The Risk Of Colorectal Cancer

இஸ்ரேலிலுள்ள டெல்-அவிவ் மெடிக்கல் சென்டர் சொல்லும் ஆய்வறிக்கையில் இந்த உணவு முறையை மேற்கொள்ளாத மக்களை ஒப்பிடும் போது மத்திய தரைக்கடல் உணவுமுறையை பின்பற்றிய மக்களில் பெருங்குடல் புற்று நோயானது 30 சதவீதம் குறைந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே தான் இந்த உணவுமுறையை மேற்கொண்டால் 86 சதவீதம் பெருங்குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படுகிறது என்று நவோமி சென்டர்  கூறுகிறது.

This One Diet Cuts The Risk Of Colorectal Cancer

இந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக உலகளாவிய குடல் புற்று நோய் உலக காங்கிரஸ் உணவுக் குடல் புற்று நோய் மையம் (World Congress Gastrointestinal cancer) ஒரு ஆய்வு மேற்கொண்டது. இதன் படி 40 லிருந்து 70 வயதில் மத்திய உணவு முறையை பின்பற்றிய 808 மக்கள் குடல் சிகச்சைக்கு உட்படுத்தப்பட்டன.

மத்திய தரைக்கடல் உணவுமுறையானது அதிக அளவில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள், முழு தானியங்கள், மீன்கள், கோழிகள் மற்றும் அதிக விகிதமான மோனோஸ்சேச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் இருந்து ஸ்சேச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் உணவுகள் போன்றவற்றை சாப்பிடுதலாகும்.

This One Diet Cuts The Risk Of Colorectal Cancer

மேலும் குறைவான அளவில் சிவப்பு மாமிசம், ஆல்கஹால் மற்றும் சோடா பானங்கள் போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.

இந்த உணவு முறைகளை நீங்கள் பழக்கப் படுத்திக் கொண்டால் குடல் பாலிப்ஸ் குறைந்து பெருங்குடல் புற்று நோய் வருவதை தடுக்கலாம் என்று ஆய்வறிக்கை சொல்கிறது.

English summary

This One Diet Cuts The Risk Of Colorectal Cancer

This One Diet Cuts The Risk Of Colorectal Cancer
Story first published: Tuesday, July 11, 2017, 22:00 [IST]