Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஏழே நாட்களில் உங்கள் தொப்பை குறைய வேண்டுமா? இதோ அதற்கான சில வழிகள்!
உங்களுக்கு இருக்கும் தொப்பையால் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதில் மிகுந்த சிரமத்தை உணர்கிறீர்களா? இதனை குறைக்க எவ்வளவு முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லையா? அப்படியெனில் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...
பொதுவாக வயிற்றில் கெட்ட கொழுப்புக்கள் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியவையாக இருக்கும். அதிலும் உங்கள் வயிறு பானை போன்று வீங்கி காணப்பட்டால், இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.
சிக்ஸ் பேக் வைப்பதற்கு நடிகர் சூர்யா மேற்கொண்ட டயட் இதுதாங்க...
எனவே தொப்பை வர ஆரம்பித்தால் அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இங்கு உங்களுக்கு பெரும் இடையூறை விளைவிக்கும் தொப்பையை வேகமாக குறைக்க சில எளிய இயற்கை வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.
ரித்திக் ரோஷன் தன் தொப்பையைக் குறைத்து எப்படி சிக்ஸ் பேக் வைத்தார் தெரியுமா?

பாற்காய் மற்றும் எலுமிச்சை சாறு
தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமானால், காலையில் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸைக் குடிக்க வேண்டும். இது கசப்பாக இருந்தாலும், தொப்பையால் உயிரை விடுவதற்கு பதிலாக இது எவ்வளவோ மேல். வேண்டுமானால், பாகற்காய் ஜூஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் அந்த ஜூஸில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருட்கள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து, செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடை வேகமாக குறைய உதவும்.

க்ரஞ்சஸ்
தரையில் படுத்து, இரு கைகளையும் தலைக்கு பின் கட்டிக் கொண்டு, பின் படத்தில் காட்டியவாறு வலது கையின் முட்டியால் இடது முழங்காலையும், பின் இடது கையில் முட்டியால் வலது முழங்காலையும் தொட வேண்டும். இப்படி ஒரு செட்டிற்கு 10 என 3 செட் செய்ய வேண்டும். இதனால் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரையும். இந்த பயிற்சி ஆண், பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.

பப்பாளி
மாலையில் 3-4 மணியளவில் ஒரு பௌலி பப்பாளியை சாப்பிட வேண்டும். அதிலும் அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்து, மிளகுத் தூள் மற்றும் உப்பு சிறிது தூவி உட்கொண்டு வர, பசி அடங்குவதோடு, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்றவை கொலஸ்ட்ராலைக் குறைத்து, மன அழுத்த ஹார்மோன்களை சீராக்கி, தொப்பை குறைய உதவும்.

தொப்பை மசாஜ்
2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, தொப்பையை தினமும் 3 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு, தொப்பை வேகமாக குறையும்.

முளைக்கட்டிய கொள்ளு
1 கப் முளைக்கட்டிய கொள்ளு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம், 1/2 டீஸ்பூன் புதினா, சாட் மசாலா 1/2 டீஸ்பூன் மற்றும் மிளகுத் தூள் 1/2 டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பசிக்கும் நேரத்தில் உட்கொண்டு வர, பசியும் அடங்கும், கொழுப்புக்கள் கரைந்து தொப்பையும் குறையும்.

கபல்பதி பிராணயாமம்
தினமும் காலையிலும், மாலையிலும் வெறும் வயிற்றில் 5 நிமிடம் கபல்பதி பிராணயாமம் செய்து வருவதன் மூலமும் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு படத்தில் காட்டியவாறு மூச்சை வெளிவிடும் போது வயிற்றை உள்ளும், மூச்சை வெளிவிடும் போது வயிற்றை வெளியேயும் தள்ள வேண்டும்.

இஞ்சி நீர்
1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்ததும், அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும். மேலும் செரிமானம் மேம்படும். உடலின் வெப்பநிலை அதிகரிக்கப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரையும்.

பூண்டு
தினமும் 1-2 பற்கள் பூண்டை பச்சையாக உட்கொண்டு, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இப்ப காலையில் எழுந்ததும் செய்து வர தொப்பை மட்டுமின்றி, நீரிழிவு தடுக்கப்படும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.

ஆப்பிள் மற்றும் பட்டைத் தூள்
ஆப்பிளை நறுக்கி துண்டுகளாக்கி, அத்துடன் பட்டைத் தூளை தூவி தினமும் பசிக்கும் போது உட்கொண்டு வர, பசி அடங்குவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து அதிகப்படியான கலோரிகளும் எரிக்கப்படும்.

எலுமிச்சை மற்றும் புதினா
2 லிட்டர் சுடுநீரில் 1 எலுமிச்சையை பிழிந்து, 1/2 கப் புதினாவை நறுக்கிப் போட்டு, ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து, தினமும் உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடத்திற்கு முன் 1 கப் குடித்து வர வேண்டும். இதனால் குறைவான அளவில் உணவை உட்கொள்ளலாம், செரிமானம் மேம்படும் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குறைந்து தொப்பையும் குறையும்.



Click it and Unblock the Notifications











