Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உடல் எடை குறைய இந்த 5 வழிகள்ல க்ரீன் டீயை குடிச்சுப் பாருங்க!!
க்ரீன் டீ உண்மையில் மகத்துவமான சத்துக்களை கொண்ட்டது. பல அரிய மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும். ஆனால் அதனை எப்படி குடிக்க வேண்டும் என முறைகள் உண்டு.
க்ரீன் டீயை குடிப்பது இப்போது ஃபேஷனாகிவிட்டது. உடலுக்கு நல்லது நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. உடல் எடை குறைக்கும். இளமையை நீட்டிக்கும்
உடலுக்கு நல்லது நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட், ஃப்ளேவினாய்டு இருக்கிறது. க்ரீன் டீ உடலுக்கு நல்லதுதான் சற்றும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் அதனை குடித்த பின்னும் ஏன் உடல் எடை குறையவில்லை என்று கவலைப்படுவதுண்டு.

ஏன் உடல் எடை குறையவில்லை?
எப்படி குடிக்க வேண்டும் என்ற ட்ரிக்கை தெரிந்து கொண்டால் உடல் எடையை குறைக்கலாம்.
அதன் வெப்ப நிலை, வாசனைப் பொருட்கள் என பலவிஷயங்கள் அதன் சத்துக்களை பாதிக்கின்றது என தெரியுமா? அதனை எப்படி தெரிந்து கொள்ளலாமென படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாசனை க்ரீன் டீ பாக்கெட் வாங்குகிறீர்களா?
இப்போது சாமந்தி , பெர்ரி டீ என பல வகை வாசனை பொருட்களை சேர்த்து க்ரீன் டீ கடைகளில் விற்கப்படுகிறது.
ஆனால் அந்த பொருட்கள் க்ரீன் டீயிலுல்ள சத்துக்களை பாதிக்கும். சுத்தமான வேறு வாசனைகள் கலக்காத க்ரீன் டீயே உடலுக்கு முழு சத்தையும் தரும்.

சில் டீயை உபயோக்கலாமா?
சிலருக்கு சூடாக குடிப்பதை விட க்ரீன் டீயை தயார் செய்து சில்லென்று ஐஸ் கட்டி போட்டு குடிப்பார்கள்.
ஐஸ் கட்டி தேயிலையின் சத்துக்களை நீர்த்துப் போகச் செய்யும். வெதுவெதுப்பான நிலையில் க்ரீட் டீயை குடிப்பதே உடலுக்கு நல்லதை தரும்.

வாங்கி எத்தனை நாட்களுக்கும் குடிக்க வேண்டும்?
தேயிலை தூள் எப்போது பாக்கெட் செய்யப்படுகிறது என்பது மிக முக்கியம். ஏனென்றால் அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் 6 மாதத்திற்கு பின் அதன் சக்தியை இழந்துவிடும்.
ஆகவே பாக்கெட் தயாரிக்கப்பட்ட சில மாதங்களில் உபயோகித்துவிடுங்கள். அதன் பின் உபயோகித்தாலும் பயன் இருக்காது.

தரமானதா?
இது சோதிப்பதுமிக முக்கியம். பாக்கெட்டுகளில் அதன் சத்துக்களை படிக்க வேண்டும். இது வெறும் விட்டமின் மட்டும் நிறைந்தது அல்ல.
அதோடு அதில் செயற்கை நிறமூட்டி இருக்கிறதா? பிரசர்வேட்டிவ் சேர்த்துள்ளனரா என பாக்கெட்டுகளில் படித்து பார்த்து வாங்குங்கள்.
பிரசர்வேட்டிவ் மற்றும் கலப்படம் இல்லாமல் இருப்பதை பார்த்து வாங்குங்கள்: இல்லையென்றால் அவை கெடுதலை தரும்.

அடர்த்தி பாதிக்குமா?
நிச்சயமாக .. 1 மி.லி க்ரீன் டீ தூளில் 8-10 கப் அளவு தேநீர் தயார் செய்து குடிக்கலாம். டீ பாக்கை விட நேரடியாக தேயிலை தூளை நீரில் கொதிக்க விடுவதால் அதன் பலன் நிறைய கிடைக்கும்.

அதன் பலன்கள் :
அதிலுள்ள கேடசின் என்ற பாலிஃபீனால் உடல் எடையை குறைக்கும். குடல்களில் படியும் கொழுப்பை கரைக்கும். புற்று நோயை தடுக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

மாலைக் கண் நோய் :
அதோடு அதில் விட்டமின் பி, சி, காஃபைன், ஃபோலிக் அமிலம் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளது. இவை ஆரோக்கியமான இளமையான சருமத்தை தருகிறது.
மாலைக் கண் நோயை தடுக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. காஃபைன் சக்தியையௌம் புத்துணர்வையும் தருகிறது.



Click it and Unblock the Notifications