Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
தினமும் காபியுடன் இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பை குறையும் என்பது தெரியுமா?
காபி பிரியரா நீங்க? அப்ப அந்த காபியைக் கொண்டே உங்களுக்கு இருக்கும் தொப்பையைக் குறைக்கும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் விரும்பி குடிப்பது தான் காபி. காலையில் எழுந்ததும் காபி குடித்தால் தான், மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியும் என்று இருப்போர் ஏராளம். காபி ஒருவரது உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கும். காபி பிரியரான உங்களுக்கு தொப்பை இருந்தால், அந்த காபியைக் கொண்டே தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

அதுவும் அந்த காபியுடன் ஒரு குறிப்பிட்ட பொருட்களை சேர்த்துக் குடித்தால் போதும். இந்த முறையால் தொப்பை குறைவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும் மற்றும் இதயமும் பாதுகாப்புடன் இருக்கும்.
சரி, இப்போது தொப்பையைக் குறைக்க குடிக்கும் காபியுடன் எதை சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் காண்போம். அதைப் படித்து தெரிந்து பின்பற்றி, தொப்பையைக் குறையுங்கள்.

பட்டை
பட்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. முக்கியமாக இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தைக் குறைக்கும் பண்புகள் அதிகம். மேலும் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும். குறிப்பாக பட்டை உடலில் உள்ள சர்க்கரையை உடைத்து ஆற்றலாக்கி, கொழுப்புக்களாக படிவதைத் தடுக்கும்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயும் தொப்பையைக் குறைக்க உதவும். அதுவும் தேங்காய் எண்ணெய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்கும்.

தேன்
தேனில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும்.

தேவையான பொருட்கள்:
தேன் - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் -3/4 கப்
பட்டை தூள் - 1 ஸ்பூன்
கொக்கோ பவுடர் - 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, பின் அதனை காற்றுப்புகாத கண்ணாடி ஜாரில் போட்டு, தேவையான பொழுது பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
தினமும் காபி குடிக்கும் போது, தயாரித்து வைத்துள்ளதை ஒரு ஸ்பூன் எடுத்து காபியுடன் சேர்த்து நன்கு கலந்து, பின் குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications