Latest Updates
-
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
விரதம் இருந்தால் இளமையாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழலாம் - ஆய்வில் தகவல்!!!
நமது, முன்னோர்கள் ஏதோ ஓர் முக்கியமான காரணத்திற்காக சொல்லி சென்றவை எல்லாம் அறிவியல் மற்றும் வாழ்வியல் சார்ந்தது என்பது ஒவ்வொன்றாக இன்று அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. விரதம் இருந்தால் இளமையாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழலாம் என, கடந்த வாரம் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரதம் இருப்பதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா!!!
நமது முன்னோர்கள், பல காரணங்கள் சொல்லி விரதம் இருப்பதை அன்றாட பழக்கத்தில் ஒன்றாய் அமைத்து வைத்திருந்தனர். சில கடவுள்களை வழிப்படும் போதும், வருடங்களில் புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களிலும் விரதம் இருப்பதை ஏதோ ஓர் காரணத்தை காட்டி கட்டாயப்படுத்தி வைத்திருந்தனர்.
எடையைக் குறைக்க நீங்கள் தவறான டயட்டை பின்பற்றுகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 15 அறிகுறிகள்!!!
காலப்போக்கில் சிலரின் அறியாமையினாலும், திரித்துக் கூறப்பட்ட பதில்களாலும் விரதம் இருப்பது மூடநம்பிக்கையாக மாற்றப்பட்டது. ஆனால், இன்று அறிவியல் ரீதியாகவே விரதம் இருப்பது உடலின் வயதாகும் தன்மையை குறைக்கும் என்றும், நீண்ட ஆயுளுடன் வாழ உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது....

மாதத்தில் ஐந்து நாட்கள்
மாதத்தில் ஐந்து நாட்கள், நாம் சாப்பிடும் உணவில் 50% கலோரிகளை குறைத்து சாப்பிட்டு வந்தால், நமது ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நோயற்ற வாழ்வு
உணவுக் கட்டுப்பாடு இல்லாதவர்களோடு ஒப்பிடுகையில், வாரத்தில் ஒரு முறையாவது விரதம் அல்லது டயட் இருப்பவர்களுக்கு, நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய் அபாயம் மற்றும் வேகமாக முதிர்ச்சி அடையும் தோற்றம் போன்ற பாதிப்புகள் எற்படுவதில்லையாம்.

மற்ற நாட்கள்
மாதத்தில் ஐந்து நாட்களை தவிர மற்ற நாட்கள் எப்போதும் போல சாதாரணமாக சாப்பிடுவோரை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாதம் முழுக்க டயட் இருக்காமல், வாரம் ஒருமுறை மட்டும் விரதம் இருப்பதாலேயே இவ்வாறான நல்ல மாற்றங்கள் காண இயல்வது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கின்றது.

முந்திய ஆய்வு
முந்திய ஆய்வுகளில், குறிப்பிட்ட குறுகிய காலம் விரதம் இருப்பதால் உடல் நலம், ஆரோக்கியம் மேம்படும் என்று தெரியவந்துள்ளது. அதாவது, நமது புரட்டாசி, மார்கழி மாத விரதங்கள் போல.

எச்சரிக்கை
ஆனால், இந்த விரத முறையானது முதியவர், குழந்தைகள் மற்றும் உடல்நிலை மலிந்து காணப்படுவோர் எல்லாம் பின்பற்ற கூடாது என எச்சரிக்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

உணவு சதவீதம்
இந்த ஆய்வில், விரதம் எனிலும் முழுமையாக பட்டினி இருக்க கூறவில்லை. தினசரி உட்கொள்ளும் உணவு அளவில் 34 - 54% உணவினை / கலோரிகளை குறைத்துக் கொண்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள்.

ஆய்வில் உட்படுத்தப்பட்டவர்கள்
இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டவர்களுக்கு, அந்த ஐந்து நாட்களில் அவர்களது டயட்டில் 1,095 கலோரிகளில் இருந்து 790 கலோரிகளாக குறைக்கப்பட்டதாம். இது, தொடர்ந்து மூன்று மாதக் காலத்திற்கு பின்பற்றப்பட்டது. இதன் முடிவில், அவர்களது இரத்த சர்க்கரை அளவில் 10 சதவீதம் குறைவு ஏற்பட்டிருந்ததுக் கண்டறியப்பட்டது.

ஐ.ஜி.எப்.1
இந்த ஆய்வின் முடிவில் விரதம் கடைப்பிடிக்கப்பட்டவர்களில், மனிதர்களின் வயது அதிகமாகும் / வேகமான முதிர்ச்சி குறைபாடு ஏற்பட காரணமாக இருக்கும் ஐ.ஜி.எப்.1 எனும் வேதியல் இரசாயனம் 24% குறைந்துக் காணப்பட்டதாம்.

ஆராய்ச்சியாளர் வால்டர் லோங்கோ
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவரும் இந்த ஆய்வை நடத்தியவருமான வால்டர் லோங்கோ (Valtar Longo), "இந்த ஆய்வு மிகவும் மகிழ்ச்சியான முடிவை அளித்துள்ளது. நாங்கள் இந்த முடிவிற்காக தான் காத்திருந்தோம். மாதத்தில் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே நாங்கள் கூறிய உணவுக் கட்டுப்பாடு கட்டாயப்படுத்தப்பட்டது. மற்ற 25 நாட்களும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உணவு உட்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது" என்றும் கூறியுள்ளார்.

விலங்குகளுக்கும் பொருந்தும்
இதே ஆய்வை, ஆராய்ச்சியாளர்கள் எலிகளுக்கு மத்தியிலும் நடத்திப் பார்த்தாதாகவும், அவைகளிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
