Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் 'டீ' வகைகள்!!!
தற்போது பிட்சா, பர்கர், சீஸ் சாண்ட்விச் மற்றும் சாக்லெட் டெசர்ட்டுகள் போன்ற சுவையான உணவுப் பொருட்கள் கடைகளில் விற்கப்படும் போது, உடல் எடையை குறைப்பது என்பது சற்று சவாலான விஷயம் தான். ஏனெனில் இவற்றைப் பார்க்கும் போது பசியுணர்வு அதிகரித்து, ஒரு கட்டத்தில் நம்மை மீறியே அதனை சாப்பிட்டு விடுவோம்.
அப்படி சாப்பிட்ட பின்னர், அதனால் ஏற்பட்ட உடல் எடையை உடற்பயிற்சியை மட்டும் செய்து குறைக்க முயற்சிப்போம். ஆனால் அவற்றை விட உடல் எடையை குறைக்க நினைப்போர் மனதில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், எப்போதும் உடற்பயிற்சி மற்றும் டயட் மட்டும் உடல் எடையை குறைக்கும் முறைகள் அல்ல என்பது தான்.
இதுப்போன்று வேறு: எடையை குறைக்க வேண்டுமா? சூப் குடிங்க பாஸ்!
ஏனெனில் உடல் எடையை குறைக்க காய்கறிகள், பழங்கள் மற்றும் பானங்கள் கூட பெரிதும் உதவியாக இருக்கும். அவற்றில் பானங்கள் என்று வரும் போது டீ தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எப்படியெனில், டீயிலேயே உடல் எடையைக் குறைக்கும் நிறைய டீக்கள் உள்ளன. மேலும் டீயில் நிறைய ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது. அதில் உடலின் எனர்ஜியை அதிகரிப்பதில் இருந்து, மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பது, புற்றுநோயை எதிர்த்து போராடுவது என்று பல உள்ளன.
அவசியம் படிக்கவும்: உடல் எடையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஜூஸ்கள்!!!
இப்போது உடல் எடையை குறைக்க உதவும் டீ வகைகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அவற்றைப் படித்து அதனை பருகி வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

ரோஸ் டீ
ரோஸ் டீ என்பது ரோஜாப்பூ இதழ்களை டீ கொதிக்கும் போது சேர்த்து செய்யப்படும் ஒரு டீ ஆகும். இந்த டீயானது மலச்சிக்கல் பிரச்சனையை போக்கி, வயிற்று உப்புசத்தைத் தடுக்கும். மேலும் ரோஸ் டீயானது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடும், உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

ஊலாங் டீ
சைனா டீயான ஊலாங் டீ, இரத்த சர்க்கரையையும், கார்டிசால் அளவையும் குறைக்கும். இதனால் உடலில் கொழுப்பு தேங்குவதை கட்டுப்படுத்த முடியும். முக்கியமாக அலுவலகம் செல்பவர்கள் இடை இடையிடையே இந்த டீயை அருந்தி வந்தால் மிகவும் நல்லது.

ப்ளாக் டீ
பொதுவாக டயட்டில் இருப்போர் ப்ளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள். அதிலும் அந்த ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால், உடலின் எனர்ஜி அதிகரிப்பதுடன், ஸ்டாமினா அதிகரிக்கும். மேலும் அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

இந்தியன் பால் டீ
சாதாரணமாக வீட்டில் பால் கொண்டு செய்யப்படும் டீயில் சர்க்கரைக்கு பதிலாக, நாட்டுச்சர்க்கரை/சுகர் ப்ரீ சேர்த்து சாப்பிட்டால், அது பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். அதிலும் பாலில் ஸ்கிம்டு மில்க் கொண்டு பால் போட்டு குடிக்க வேண்டும். குறிப்பாக அத்துடன் ஏலக்காய் அல்லது இஞ்சி சேர்த்துக் கொண்டு சுவையுடன் இருப்பதோடு, உடல் பருமன் குறைய உதவியாகவும் இருக்கும்.

க்ரீன் டீ
உடல் எடையை குறைக்க நினைப்போர் நிச்சயம் குடிக்க வேண்டிய ஒரு பானம் தான் க்ரீன் டீ. அதிலும் இதனை காலை வேளையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறையும்.



Click it and Unblock the Notifications
