Latest Updates
-
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம்
உடற்பயிற்சிக்குப் பின் கண்டிப்பாக 'நோ' சொல்ல வேண்டிய 9 உணவுகள்!!!
நம் உடல் ஆரோக்கியமாக, முறுக்கேறி இருப்பதற்காகத் தான் நாம் உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். ஆனால், அதைக் கெடுக்கும் விதத்தில் ஒவ்வொரு உடற்பயிற்சிக்குப் பின்னரும் எடுக்கும் பசிக்கு தாறுமாறான உணவுகளைச் சாப்பிட்டால், அந்த உடற்பயிற்சியால் என்ன பலன்?
நம் உடலுக்கு கிளைகோஜென் என்னும் வேதிப் பொருள் தான் முக்கிய எரிபொருளாகும். அதுதான் உடலுக்கு சக்தியைக் கொடுக்கிறது. நாம் உடற்பயிற்சி செய்யும் போது, நம் தசைகளில் உள்ள கிளைகோஜென் முழுவதும் காலியாகி விடுகிறது. அது மட்டுமல்ல, அந்தத் தசைகளும் சேதமடைந்து விடுகின்றன.
உடற்பயிற்சியில் இவ்வாறு இழந்த சக்திகள் அனைத்தையும் நாம் சாப்பிடும் உணவுகள் மூலமாகத் தான் மீட்டெடுக்க முடியும். நல்ல புரதச்சத்தும், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்த உணவுகள் தான் இதற்கு நல்லது. அவை தான் இழந்த கிளைகோஜென்னை மீண்டும் உடலில் நிரப்பும்; தசைகளும் வலுவடையும்; மெதுவாக செரிமானம் ஆவதற்கும் வழிவகுக்கும்.
அதை விட்டுவிட்டு, கொழுப்புச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடற்பயிற்சி முடித்த உடனே சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல. இன்னும் சொல்லப்போனால், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடுவது நல்லது. மேலும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது உடற்பயிற்சி முடிந்து வெகு நேரம் கழித்தோ சாப்பிடலாம்.
இப்படி உடற்பயிற்சி முடித்த உடனே சாப்பிடக் கூடாத 9 உணவுகள் என்னென்ன என்பது பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

மாட்டிறைச்சி
இந்த வகை மாமிச உணவுகளை உடற்பயிற்சி முடிந்ததும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இவற்றில் கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால், இரத்தக் குழாய்களில் சென்று குண்டக்க மண்டக்க அடைத்துக் கொள்ளும். செரிமானப் பிரச்சனைகளும் ஏற்படும். வேண்டுமானால், சிக்கன் மட்டும் சாப்பிடலாம்.

முட்டை
முட்டை ஒரு சத்தான உணவு தான். ஆனால் உடற்பயிற்சிக்குப் பின் முழு முட்டையையும் சாப்பிடுவதாக இருந்தால், ஒரு முட்டை மட்டும் போதும். அதற்கு மேல் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல.

தயிர்
கொழுப்புச் சத்து அதிகமுள்ள தயிரை உடற்பயிற்சிக்குப் பின் தவிர்க்கவும். அந்தக் கொழுப்பைக் கரைக்க உடனே மீண்டும் ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கும்! எனவே, சாதாரண தயிரே நல்லது.

வெண்ணெய்
உடற்பயிற்சிக்குப் பின், நம் உடலில் இரத்தமானது வயிற்றுக்குள் செல்லாமல் வெளியே தான் பாய்ந்து கொண்டிருக்கும். அதனால், அப்போது ஒரே ஒரு ஸ்பூன் வெண்ணெய் மட்டும் சாப்பிட்டால் போதுமானது. அதற்கு மேல் சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லதல்ல.

பிரட்
பிரட்டில் குளூட்டென் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால், உடலில் சர்க்கரை அளவு 'சர்'ரென்று ஏறிவிடும் ஆபத்து உள்ளது. செரிமானத்திற்கும் நல்லதல்ல. எனவே, உடற்பயிற்சிக்குப் பின் டோஸ்ட் செய்த பிரட் சாப்பிடுவதை விட, பச்சையாகத் திண்பது ஓரளவு நல்லது.

நார்ச்சத்து உணவுகள்
இத்தகைய உணவுகள் உடலுக்கு நல்லது தான், ஆனால் உடற்பயிற்சிக்குப் பின் நல்லதல்ல. செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடற்பயிற்சிக்குப் பின் வெகு நேரம் கழித்து இவற்றை சாப்பிடலாம். இவற்றுக்குப் பதில் ஆம்லெட், சாண்ட்விச், கீரை ஆகியவற்றை உடற்பயிற்சிக்குப் பின்னர் சாப்பிடலாம்.

சாக்லெட்
உடற்பயிற்சிக்குப் பின்னர் கண்டிப்பாக சாக்லெட்டை சாப்பிடக் கூடாது. இங்கும் செரிமானப் பிரச்சனை தான். சாக்லெட்டுக்குப் பதில், கொக்கோ பவுடர் சாப்பிடலாம்; அதில் கொழுப்பு குறைவாகத் தான் இருக்கும். சூடான ஓட்மீல் அல்லது கூலான பாதாம் பால் நல்லது!

பிட்சா
உடற்பயிற்சிக்குப் பின்னர் கண்டிப்பாக பிட்சாவையும் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கொழுப்புச் சத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

தேங்காய் எண்ணெய்
விளையாட்டு வீரர்களுக்கு தேங்காய் எண்ணெய் நல்லது தான். ஆனால் உடற்பயிற்சிக்கு முன் இதை எடுத்துக் கொள்வது தான் நல்லது. இதில் கொழுப்பு அதிகம் என்பதால், உடற்பயிற்சிக்குப் பின் இதைத் தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
