Latest Updates
-
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்..
காதைக் கிட்ட கொண்டு வாங்க... இதுதாங்க சூர்யாவின் ஃபிட்னஸ் ரகசியம்!
சரவணன் சிவக்குமார் என்னும் இயற்பெயர் கொண்ட தமிழ் நடிகர் சூர்யா, தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார். இவர் பிரபலமாக ஆரம்பித்தது, காக்க காக்க படத்தில் தான். ஏனெனில் இந்த படத்தில் இவரது ஸ்டைல், ஹேண்ட்சம் லுக் போன்றவை பலரைக் கவர்ந்தது.
திரையுலக பிரபலங்களுடன் சூர்யாவின் மாஸ் செல்ஃபீக்கள்!!!
அதன் பின் கஜினி படத்தில், இவர் வைத்திருந்த சிக்ஸ் பேக், பலரை சூர்யாவுக்கு அடிமையாக்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல், சூர்யா எவ்வளவு வயதானாலும், இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் உடலை கட்டமைப்புடன் வைத்திருப்பதால், பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.
ஃபிட்டான வயிற்றைப் பெறுவதற்கான சில டயட் டிப்ஸ்...
அத்தகைய சூர்யா ஜூலை 23 ஆம் தேதியன்று பிறந்தார். இன்னும் சூர்யா இளமையுடன் காணப்படுவதற்கு, இவர் மேற்கொள்ளும் டயட் தான் காரணம். அதிலும் இவர் சிக்ஸ் பேக் வைப்பதற்கு முக்கிய காரணம் அமீர் கான் தான். அமீர் கானை மாடலாக கொண்டு, இவர் சிக்ஸ் பேக் வைக்க கடுமையான பல உடற்பயிற்சிகள் மற்றும் உணவுமுறைகளை மேற்கொண்டார்.
ஷாருக்கானிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்!!!
இப்போது நடிகர் சூர்யா உடலை கச்சிதமாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்வதற்கு, தினமும் எந்த மாதிரியான டயட்டை மேற்கொள்கிறார் என்பதைப் பார்ப்போம்.
சூர்யா ஜோதிகாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மாடர்ன் காதல் டிப்ஸ்!!!

பால்
தினமும் ஒரு டம்ளர் புரோட்டீன் பவுடர் கலந்த பாலை, உடற்பயிற்சிக்கு பின் உட்கொள்வார்.

வறுத்த உணவுகள்
அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை எப்போதும் சாப்பிடமாட்டார்.

காலை உணவு
எப்போதும் காலை உணவுகளை தவிர்க்கமாட்டார். மேலும் அவ்வாறு உண்ணும் காலை உணவையும் அளவாகவே சாப்பிடுவார்.

மதிய உணவு
மதிய வேளையில் சாதம் தான் சாப்பிடுவார். பிட்சா, பர்க்கர் போன்ற எந்த ஒரு ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையும் சாப்பிடமாட்டார்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்
தினமும் பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வார்.

முட்டை
தினமும் 6-7 முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவார்.

இரவு உணவு
இரவில் எப்போதும் 2 சப்பாத்தி மற்றும் சிறிது சாதம் மட்டும் தான் சாப்பிடுவார்.

சிக்கன்
வாரத்திற்கு ஒரு முறை சிக்கனை வேக வைத்து, அதில் உப்பு சேர்க்காமல், வெறும் மிளகுத் தூள் மட்டும் சேர்த்து சாப்பிடுவார்.

கடல் உணவுகள்
அசைவ உணவுகளில் பன்றிக்கறி, மாட்டுக்கறி போன்றவற்றை அறவே தவிர்த்து, கடல் உணவை அதிகம் சாப்பிடுவார். இதனால் தான் அவர் இன்றும் இளமையுடன் காட்சியளிக்கிறார்.

ஜிம்
சூர்யா உடலைக் கட்டமைப்புடன் வைத்துக் கொள்வதற்கு, தினமும் 2 மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வார். அதிலும் அந்த சிக்ஸ் பேக் வைப்பதற்கு, 6 மாதம் ஆகிவிட்டது.

ஏரோபிக்ஸ்
அதுமட்டுமின்றி, தினமும் அரை மணிநேரம் ஏரோபிக்ஸ் மற்றும் ஒன்றரை மணிநேரம் ஜிம்மில் மிகவும் கடினமான உடற்பயிற்சிகளை செய்வார்.

ஸ்டீராய்டுகள்
சூர்யா சிக்ஸ் பேக்ஸ் வருவதற்கு, எந்த ஒரு ஸ்டீராய்டுகளையோ அல்லது கொழுப்பைக் கரைக்கும் வேறு எந்த ஒரு பொருட்களையும் எடுத்துக் கொள்ளமாட்டார்.



Click it and Unblock the Notifications











