Latest Updates
-
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

ஜலதோசம் அதிகமாகி மூக்கடைப்பு, தொண்டைவலி ஏற்படுவதற்கு காரணம் பாக்டீரியா தொற்றுதான். ஸ்ட்ப்ரோ காக்கஸ் எனப்படும் பாக்டீரியாக்கள் புகை பிடிப்பதனாலும், அலர்ஜி, இரவில் உலர்ந்த காற்று வாய் வழியே உட்புகுதல், வாய் வழி சுவாசம், அதிகமாக கத்தி பேசுதல், கத்தி பாடுதல், உலர் இருமல் போன்றவைகளினால் தொண்டையில் தொற்றுகின்றன. உணவு அலர்ஜியினாலும் சில சமயம் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.
தொண்டை வலியை சரி செய்ய மருத்துவரிடம் சென்றால் அவர் தரும் ஆன்டிபயாடிக் மருந்துகளினால் நிவாரணம் கிடைக்கும். அதேசமயம் வீட்டு மருத்துவ முறையிலும் தொண்டை வலியை குணப்படுத்தலாம்.
உடம்பில் தண்ணீர் சத்து குறைந்தாலும் மூக்கு, தொண்டைப் பிரச்சினைகள் ஏற்படும். எனவே அதிக திரவ சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அதிக அளவு குடிக்கலாம்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி உள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை வைரஸ் மற்றும் பாக்டிரியாக்களுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. கீரைகள், கேரட், தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காய் மற்றும் பழங்களை சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும். தொண்டை வலியை குணப்படுத்த ஜூஸ் குடிக்கலாம். மேலும் மிளகு சேர்க்கப்பட்ட சிக்கன் சூப் மற்றும் காய்கறி சூப் அருந்துவதும் நல்லது இதனால் உடலில் நீரின் அளவு பராமரிக்கப்படும். மேலும் தொண்டை, மூச்சுப் பாதை சுத்தமாக இருக்கும்..
தொண்டை வலி உள்ளவர்கள் அதிக கொழுப்புள்ள உணவுகள், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதுபோல காஃபின் உள்ள உணவுகள், அதிக இனிப்புள்ள பதார்த்தங்களையும் தவிர்த்து விட வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களையும் விட்டு விடுவது நல்லது. எதிலும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிர் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications