Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...
வெள்ளை காளான்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மிகச் சிறந்த குணங்களை கொண்டுள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் இந்த வெள்ளை காளானில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட், சர்க்கரை உள்ளது.
நகர்ப்புற வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறோம். வீட்டிற்கு வீடு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு தான் இருக்கிறது. சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை மிகவும் சாதாரணமான நோயாக மாறி விட்டது என்கிறார்கள் மருத்துவர்கள் . இதற்கு நீங்கள் நிறைய மாத்திரைகள், உணவு மாற்றங்கள் முதலியவற்றை கொண்டு வர முடியும். ஆனால் சில இயற்கையான உணவுப் பொருட்கள் கூட சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவி செய்கிறது.

அந்த வகையில் வெள்ளை காளான்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மிகச் சிறந்த குணங்களை கொண்டுள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் இந்த வெள்ளை காளானில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட், சர்க்கரை உள்ளது. மேலும் இதில் ஆன்டி டயாபெட்டிக் தன்மை இருக்கிறது.
அண்மையில் ஜர்னல் ஆஃப் ஃபங்க்ஷனல் ஃபுட்ஸ் கருத்துப் படி, வெள்ளை காளான்கள் சாப்பிட்டு வந்தால் அது ஒரு புரோபயாடிக் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இது குடலில் மைக்ரோ நுண்ணுயிரிகள் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அதோடு இது கல்லீரலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

எலிகளில் ஆய்வு
வெள்ளை காளான்களை எலிகளுக்கு கொடுத்து சோதனை நடத்திய போது, அதன் குடலில் மைக்ரோபஸ், மைக்ரோபயோட்டா நுண்ணுயிர்களை உருவாக்கி குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உண்டாக்குகிறது. அதாவது சுசினேட்டிலிருந்து புரோபியோனேட் ஆக மாற்றுவது தெரிய வந்தது.

மற்றொரு ஆய்வு
காளான்கள் மற்றும் பிற வைட்டமின் நிறைந்த உணவுகள் போன்ற காய்கறிகளைக் கொண்ட உணவை உட்கொள்வது கர்ப்பகால நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்க உதவும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த கர்ப்ப கால நீரிழிவு நோய் உலகளவில் 14% கர்ப்பங்களையும் தாய் மற்றும் குழந்தைகளை பாதிக்கிறது. இந்த வெள்ளை காளானில் உள்ள வைட்டமின் பி சத்து குறைபாடுள்ள வயதானவர்களுக்கு மன செயல்பாடு மற்றும் முதுமை மறதி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கக்கூடும் என்பது கண்டறியப்பட்டது. அதே போல் நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மெட்ஃபோர்மின் மருந்து எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதற்குப் பதிலாக இந்த வெள்ளை காளான்கள் இயற்கையாகவே உங்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

காளான்கள் ஆரோக்கியமானது
காளான்களும் பூஞ்சைகளும் நூற்றுக்கணக்கான வகையில் இந்த பிரபஞ்சத்தில் காணப்படுகிறது. இதில் உங்களுக்கு தேவையான ஆரோக்கியமான காளானை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது என்பது கடினமான விஷயம். ஆனால் இந்த காளான்களில் ஏராளமான ஊட்டச்சத்துகளும், பயன்களும் காணப்படுகின்றன.

காளான் சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு
நீரிழிவு நோயாளிகளுக்கு காளான் சிறந்த உணவாக அமையும். ஏனெனில் அதில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளும், குறைந்த கலோரிகளும் உள்ளன. ஆகவே சர்க்கரை நோயாளிகள் காளான்களை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதனால் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் சர்க்கரை தான் சேர்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
வெள்ளை காளான்கள் குறைந்த கலோரியை கொண்டு இருப்பதால் உடம்பில் கொழுப்பு படியாது. இதனால் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதய இரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைப்பு ஏற்படாது. இந்த காளான்களில் அழற்சி எதிர்ப்பு தன்மையும் உள்ளது.

குறைந்த கிளைசெமிக் குறியீடு
காளான்களில் குறைந்தளவு கார்போஹைட்ரேட் காணப்படுகிறது. மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுவதால் உடல் எடையை குறைப்பவர்கள் தாராளமாக இதை பயன்படுத்தலாம். இந்த வெள்ளை காளான் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டு இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. வைட்டமின் பி மற்றும் பாலிசாக்ரைடு போன்ற சத்துக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு கூடுதல் சத்தை வழங்குகிறது. இரத்த சர்க்கரை அளவையும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதன் ஆன்டி பயாடிக் தன்மை, உணவிற்கு சுவையளிக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் காளான்களை சேர்த்தால் ஆரோக்கியமாக வாழ முடியும்.



Click it and Unblock the Notifications