Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்பட்ட காயத்தை விரைவில் குணப்படுத்த சில டிப்ஸ்…
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு காயம் என்பது ஏற்படாது இருப்பதே நல்லது. ஏனென்றால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டால் கூட அது பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடும்.
வீழ்வது, எழுவது அனைத்துமே வாழ்க்கையில் நடைபெறக்கூடிய ஒன்று தான். வாழ்க்கையில் காயங்களை பார்க்காத மனிதர் இருக்க முடியாது. ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு காயம் என்பது ஏற்படாது இருப்பதே நல்லது. ஏனென்றால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டால் கூட அது பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடும்.

காயம் ஏற்பட்டால் உறுப்பையே இழக்கும் அபாயம் கூட ஏற்பட்டுவிடும். எனவே, அவர்கள் எந்தவொரு காயமும் ஏற்படாமல் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு காயம் ஆறுவதற்கு தாமதமாவது ஏன்?
உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்காமல் இருப்பதும், சுரக்கும் இன்சுலினை உபயோகிக்காமல் இருப்பதும் தான் என்பது நீரிழிவு நோய். இன்சுலின், நமது உடலில் உள்ள குளுகோஸை ஆற்றலாக மாற்ற உதவும். அது நடக்க தவறும் போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். இதனால் தான், உடலில் காயங்கள் ஆறுவது தாமதமாகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் காயமானது, ஆறுவதற்கு தாமதமாவதோடு, காயம் எளிதில் பெரிதாகிவிடும். எனவே, பிரச்சனை பெரிதாகாமல், ஏற்படும் காயத்தை எப்படியெல்லாம் கையாளுவது என்பதை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இப்படியெல்லாம், காயங்களை பார்த்துக் கொண்டால் காயம் பெரிதாகாமல், விரைவில் குணமடைய செய்திடலாம்...

காயங்களை சரிசெய்வதற்கான டிப்ஸ்...
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உடலில் ஏற்படக்கூடிய எந்தவொரு வெட்டுக்காயங்களையும், கீறல்களையும் மிகவும் கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது. காயங்களால் ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்க்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது...

# தினமும் பாதத்தை சரிபார்க்கவும்
உங்கள் பாதங்கள் மற்றும் கால்களில் ஏதாவது வெட்டு, கொப்பளம் மற்றும் வீக்கம், குறிப்பாக நீரிழிவு நரம்பியல் காரணமாக உங்கள் காலில் உணர்ச்சி இழப்பு ஏற்பட்டால் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். கால்களை இழப்பதற்கு முக்கிய காரணமே, சிறு புண் தான். இதற்கு சிறந்த தீர்வு என்றால், தினமும் உங்கள் பாதங்களை சரிபார்க்கவும். காலில் ஏதாவது சிறிய காயத்தை பார்த்தால் கூட எவ்வித கால தாமதமும் இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுகிட வேண்டும்.

# காயங்களின் கட்டுகளை மாற்ற மறந்திட வேண்டாம்
உடலில் ஏற்படக்கூடிய காயங்களுக்கு போடப்படும் கட்டுகள் என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், அவை தான் காயங்களில் ஈரப்பதத்தை தக்க வைத்து, அவை விரைந்து குணமாக உதவும். கட்டுகளை மாற்ற மறந்தால், ஈரப்பதமின்றி காயம் குணமாக கால தாமதம் ஏற்பட்டுவிடும். உங்கள் மருத்துவரிடம் எப்படி கட்டு மாற்றுவது என்று கேட்டு தெரிந்து கொண்டு, முறையாக தொடர்ந்து கட்டுகளை மாற்றி வந்தால் காயம் விரைவில் ஆறிவிடும்.

# தொடர்ந்து இரத்த சர்க்கரையின் அளவை பரிசோதிப்பது
நீரிழிவு நோய் உள்ளர்களுக்கு காயங்களை எதிர்கொள்வது என்பதே பெரிய விஷயம். அவற்றை விரைந்து குணப்படுத்த சில முக்கிய செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும். உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக வைத்துக் கொள்ள, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை தொடர வேண்டியது அவசியம். கலோரிகள், புரதங்கள், தாதுக்கள், வைட்டமின்கள். சிங்க் மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் காயம் விரைவில் ஆறும்.
உங்களது மருத்துவரை அணுகி, சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்வதற்கான வழிகளை கேட்டறிந்து அதன்படி நடப்பதே சிறந்தது. இதன்மூலம், காயம் மேற்கொண்டு வளராமல், குணப்படுத்திட முடியும்.

# உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டம் சீராகும். சாதாரணமாகவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது நல்ல பலனளிக்கும் என்பது தெரிந்து ஒன்று தான். அதுவும், காயம் ஏற்பட்டிருக்கும் சமயம், உடற்பயிற்சி செய்வதன் மூலம் காயம் விரைவில் குணமடைவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

# அழுத்தத்தை குறையுங்கள்
காயமடைந்த இடத்தில் அழுத்தத்தை அதிகமாக கொடுக்கும் போது, காயம் மேற்கொண்டு பெரியதாகக் கூடும். அதாவது, காலில் காயம் ஏற்பட்டால், நடப்பதை குறைத்து, காலிற்கு ஓய்வு கொடுத்தால் தான், காயம் குணமடைய வழிவகுக்கும். காயத்திற்கு மேற்கொண்டு அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டே சென்றால், அது காயத்தை பெரியதாக்குவதோடு, காயம் குணமடையவும் தாமதத்தை ஏற்படுத்திவிடும்.



Click it and Unblock the Notifications