For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் சர்க்கரை நோய் இருக்கிறது.

|

வளர்ந்து வரும் நவீன உலகில் உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, சூழல்கள் மற்றும் கால நிலை மாற்றத்தினால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு உருவாகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் டிவி, கிரைண்டர், மிக்ஸி இருப்பது போல் சர்க்கரை நோயும் இருக்கிறது. சாதாரணாமாக முன்பு எல்லாம் வீட்டிற்கு வந்த விருதாளிகளிடம் எப்படி இருக்கிங்க என்று கேட்பது மாறி உங்களுக்கு சர்க்கரை நோயின் அளவு எவ்வளவு இருக்கிறது என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். 35 வயதிற்குமேல் சர்க்கரை நோய் என்பது சாதாரணமாக மாறிவிட்டது.

Juvenile Diabetes: How The Disease Affects Children

முன்பெல்லாம் சர்க்கரை நோய் என்பது பணக்காரர்களுக்கு மட்டும் வரும் நோய் என்று கூறுவதுண்டு. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் சர்க்கரை நோய் இருக்கிறது. தினமும் காலையில் எழுந்து டீ, காபி குடிப்பதைப் போன்று, இன்சுலின் போட்டுக் கொள்வதும், மாத்திரிகைகள் எடுத்துக்கொள்வதும் நம் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது. உலகில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை நோயின் வகைகள்:

சர்க்கரை நோயின் வகைகள்:

சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும்.

* முதல் வகை சர்க்கரை நோய் (சிறார் சர்க்கரை நோய்)

* இரண்டாம் வகை சர்க்கரை நோய்

இரண்டாம் வகை சர்க்கரை நோய்

இரண்டாம் வகை சர்க்கரை நோய்

இரண்டாம் வகை சர்க்கரை நோய் 35 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும். இரண்டாவது வகை சர்க்கரை நோயானது உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளினால் ஏற்படும் நோயாகும். அதாவது உடலுழைப்பு அதிகமில்லாத பணிகள் செய்வது, சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வது, அதிகமான மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் உருவாவது தான் இரண்டாவது வகை.

முதல் வகை சர்க்கரை நோய்

முதல் வகை சர்க்கரை நோய்

பிறக்கும் போது இன்சுலின் குறைபாடு உடையவர்களுக்கு முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படும். அவர்கள் அன்றாடம் இன்சுலின் ஊசி போட வேண்டும். அது தவறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும். முதல் வகை நீரிழிவு நோயை சிறார் வகை நீரிழிவு நோய் என்றும் அழைக்கலாம். ஏனென்றால் இந்த வகை நோய் பெரும்பாலும் சிறார்களையே தாக்கும். பெரும்பாலும் இந்நோய் 5 வயதுக்கு பிறகுதான் தோன்றும். ஆனால், சிலர் 30 வயதுக்கு பிறகும் இவ்வகை நோயை பெறுவதில்லை.

பொதுவாக சில குழந்தைகள் தூங்கவும், தண்ணீர் குடிக்கவும், உணவு உண்ணவும் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் செய்வார்கள். ஆனால் இது சாதாரணமாக நடப்பது தான் என்று பெற்றோர்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். அதிக மயக்கம், அதீத பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தால் அவை முதல் வகை நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள். இவ்வகை நோய்க்கான அறிகுறிகள் திடீரென குழந்தைகளிடம் தோன்றலாம். எனவே பெற்றோர்கள் கவனமாக இருப்பது அவசியம்.

MOST READ:குளிர்காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?

முதல் வகை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்

முதல் வகை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்

* அடிக்கடி சிறுநீர் கழிப்பது

* அதீத தாகம் எடுத்தல்

* அதீத பசி எடுத்தல்

* உடல் எடை குறைவு

* உடல் சோர்வு

* சுவாசிப்பதில் சிரமம்

* ஈஸ்ட் தொற்றுகள்

* திடீரென வித்தியாசமாக நடந்துகொள்ளுதல்

* கனமான சுவாசம்

* சுவாசிக்கும் போது முணுமுணுப்பது

* பழங்கள், இனிப்பு, மது போன்ற வாசனையை நுகர்தல்

* அதிக மயக்கம்

* ஆற்றல் இல்லாமை

இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி குழந்தைக்கு உடல் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து பார்க்கலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் இதயம், சிறுநீரகம், கண்கள், கால்களில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சர்க்கரையின் அளவு குறையும் போது ஏற்படும் அறிகுறிகள்

சர்க்கரையின் அளவு குறையும் போது ஏற்படும் அறிகுறிகள்

உங்கள் குழந்தைக்கு ஏற்கனவே முதல் வகை சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டால், இரத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளாலாம்.

* மங்கலான அல்லது இரட்டை பார்வை

* தலைச்சுற்றல் மற்றும் தலைவலி

* மயக்கம் அல்லது சோர்வு

* வியர்த்தல்

* ஈரமான தோல்

* தீவிர அல்லது திடீர் பசி

* பலவீனம்

* விரைவான துடிப்பு

குழந்தைகளுக்கு ஏன் நீரிழிவு நோய் ஏற்படுகிறது?

குழந்தைகளுக்கு ஏன் நீரிழிவு நோய் ஏற்படுகிறது?

குழந்தைகளுக்கு ஏன் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது என்பது அனைவரின் மனதிலும் ஒரு கேள்விகுறியாகவே இருக்கும். இது ஒரு ஆட்டோ இம்யூன் நோயாகத் தோன்றுகிறது. இது உடலில் பொதுவாக இன்சுலின் உருவாக்கும் செல்களைத் தாக்கி அழிக்கிறது. பரம்பரை மூலமாக் சர்க்கரை நோய் வருவது என்பது குறைவான சதவீதம் மட்டுமே என்கிறார்கள் மருத்துவர்கள்.

MOST READ:எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!

சிகிச்சை

சிகிச்சை

கணையத்தால் இன்சுலின் சுரக்காத போது உடலுக்கு தேவையான இன்சுலினை வெளியில் இருந்து செலுத்த வேண்டும். இந்த பாதிப்பு இருந்தால் மாத்திரைகளுடன் ஊசியும் பரிந்துரைக்கப்படும் உடல் எடை குறைந்து காணப்படும். இன்சுலின் அளவுகள் இரத்த சர்க்கரை அளவை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அவற்றின் இரத்த சர்க்கரை அளவுகள், உணவுகள் மற்றும் செயல்பாட்டு நிலைகளையும் கவனமாக கண்காணிக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள் பாதிக்கப்படும் இந்த முதல் வகை சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் சிகிச்சையும் எளிதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Juvenile Diabetes: How The Disease Affects Children

Type 1 diabetes in children is a condition in which your child's body no longer produces an insulin.
Desktop Bottom Promotion