Just In
- 4 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 15 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 16 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
Don't Miss
- News
"மாப்பிள்ளை".. எகிறி அடிக்கும் எடப்பாடி.. கோட்டையில் என்னாச்சு.. அப்ப ஓபிஎஸ்.. பரபரக்கும் பிளான்
- Finance
3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி.. இங்கிலாந்து தொடரில் அடுத்தடுத்த சர்ச்சை.. எப்படி பரவியது??
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த ஒரு டம்ளர் டீ சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுமாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
இன்று உலகில் பெரும்பாலான மக்கள் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிதது வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றங்களும், மோசமான உணவுப் பழக்கங்களும் தான். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதோடு சரியான நேரத்தில் தவறாமல் உணவுகளை உட்கொண்டு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
ஆனால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஒருசில இயற்கை பானங்கள் உதவும். சர்க்கரை நோயாளியாக இருந்து, நீங்கள் ஒரு டீ பிரியராக இருந்தால், செம்பருத்தி டீ குடிக்கலாம். இந்த செம்பருத்தி டீ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இப்போது சரக்கரை நோயாளிகள் செம்பத்தி டீயை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.

செம்பருத்தி
செம்பருத்தி என்பது அழகாக இருக்கும் ஒரு வகையான பூ. பொதுவாக செம்பருத்தி செடியின் இலைகள், பூக்கள் என அனைத்துமே நன்மைகளை உள்ளடக்கியது. சிலர் செம்பருத்தியின் பூக்களை சாப்பிடுவார்கள். ஆனால் அந்த பூக்களைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம் என்பது தெரியுமா? ஆம், செரும்பருத்தி டீ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதன் பூக்கள் எவ்வளவு அழகாக இருக்குமோ, அதே அளவில் ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்குகிறது.

செம்பருத்தியின் மருத்துவ பண்புகள்
செம்பருத்தியின் பூக்கள் மற்றும் இலைகளில் பீட்டா-கரோட்டின், வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. இவை தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. நீங்கள் சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், செம்பருத்திப் பூக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செம்பருத்தி டீ செய்முறை:
* செம்பருத்தி டீ தயாரிப்பதற்கு, முதலில் செம்பருத்திப் பூக்களை நீரில் கழுவி அதன் இதழ்களை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, இரண்டு செம்பருத்தி பூக்களின் இதழ்களை நீரில் போட்டு 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதை இறக்கி, வடிகட்டி, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
இந்த செம்பருத்தி டீயை தினமும் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இப்போது இந்த டீயின் பிற நன்மைகளைக் காண்போம்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்
மன அழுத்தத்தால் போராடிக் கொண்டிருப்பவர்கள், செம்பருத்தி டீயைக் குடித்து வருவது நல்லது. இந்த டீயைக் குடிப்பதனால், உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் நீங்கும். அதோடு இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

எடை இழப்பிற்கு உதவும்
செம்பருத்தி உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. செம்பருத்தியில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. எனவே செம்பருத்தி டீயைக் குடித்து வருவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

வைரல் தொற்றுகளை எதிர்த்து போராடும்
இன்று நம் கண்ணுக்கு தெரியாத பல கிருமிகள் நம்மை தாக்கி பெரும் அவஸ்தைப்பட வைக்கின்றன. குறிப்பாக பலர் வைரஸ் தொற்றுகளால் அடிக்கடி பாதிக்கப்படுவதுண்டு. இதைத் தவிர்க்க செரும்பருத்தி டீ உதவும். ஏனெனில் செரும்பருத்தியில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளன.